Pages

Monday, December 19, 2011

ஜெ , சசிகலாவின் நட்பு


     1984 ல் கடலூர் மாவட்டத்தில் அரசு துறையில் செய்தி தொடர்பாளராக பணியாற்றி கொண்டு இருக்கிறார் நடராசன் ,

     அப்பொழுதைய கடலூர் மாவட்ட ஆட்சியாளராக சந்திரலேகா இருக்கிறார்,

     அவரிடம் தன்னுடைய மனைவி சசிகலா நடத்தும் வினோத் வீடியோஸ் நிறுவனத்திற்கு  அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளரான ஜெயலலிதா பங்கேற்கும் கூடங்களில் வீடியோ எடுக்கும் பணியை பெற்று தருமாறு கேட்டு கொள்கிறார் நடராசன்,   

       அதன் படி  சந்திரலேகா சசிகலா & கோ வை அறிமுகம் செய்கிறார் ,
அவ்வாறு தொடங்கிய நட்பு
 
      மகாமகத்தில் ஒன்றாக நீராடியது,

      சசிகலாவின் உறவினர் பய்யன் ஒருவரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்தது 

     வளர்ப்பு மகன் திருமணத்தில் ஜெ மற்றும் சசிகலா ஆடம்பர உடையில் ஜோடியாக ஊர்வலம் வந்ததது

      ஊழல் வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவை நேரில் சென்று வீட்டிற்கு அழைத்து சென்றது 

      இப்படி 25 ஆண்டுகளாக இணைபிரியா இந்த நட்பு இன்று குடும்பத்தோடு வெளியேற்றபட்டது !!!

      ஜெ , சசிகலாவின் இந்த பிரிவினைக்கு நிச்சயம் ஒரு மிக பெரிய காரணம் இருந்தாக வேண்டும் இல்லையெனில் ஏன் காசு வெட்டி போடும் அளவுக்கு வந்திருக்கிறது .

          சொத்து குவிப்பு பிரச்சனையா ?
           
          அதிகார பகிர்வு பிரச்சனையா ?

           அல்லது வேறு ஏதாவதா ?

காலம் தான் பதில் சொல்லும் .....................


Thursday, December 8, 2011

டிவிட்டரிடம் சரணடைந்த பேஸ் புக் நிறுவனர்



         சமீபத்திய ஹாட் டாபிக் என்றும் கூட சொல்லலாம். சிஈன் பார்கர் பேஸ் புக் நிறுவனர்களில் ஒருவரான இவர் சமீபத்தில் டிவிட்டர் குழுமத்துடன் நடந்த ஒரு சந்திப்பில் கலந்து கொண்டார் .

       அடுத்த சில நாட்களில் தனது தோற்றத்தை மாற்ற போவதாகவும் , மேலும் சில மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் டிவிட்டர் அறிவித்தது .

      மேலும் அவை பேஸ் புக்கையும் விஞ்சிய அளவிற்கு இருக்கும் என கூறபடுகிறது.



      இந்த சமையத்தில் தான் சிஈன் பார்கர் டிவிட்டரில் இணைந்தார் அடுத்த ஒரு சில மணி நேரங்களிலே லட்சம் பேர் பின் தொடரும் அளவுக்கு பிரபலமானார் .

     அவருடைய முதல் டிவிட் என்ன தெரியுமா ?

                        “சாரி சக்கர்” 

Thursday, December 1, 2011

ஆயிரம் ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோயில்


         இந்திய நாட்டின் ரூபாயை பற்றி பார்த்து வருகிறோம். இது சென்ற பணம் பணம் money money money money பதிவின் தொடர்ச்சி .

        1953 ஆம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டுகளில் ஹிந்தி மொழி அச்சிடப்பட்டு வருகிறது.


        அதே போன்று 1954 ல் மீண்டும் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு அவை 1978 ல் மீண்டும் நிறுத்த பட்டன .



        தஞ்சை பெரிய கோயில், கேட் வே ஆப் இந்தியா ஆகியவற்றின் புகைப்படங்கள் அவற்றில் இடம் பெற்று இருந்தன.




         பின்பு 1960 களின் இறுதியில் நாட்டிற்காக பாடுபட்டவர்களை கவுரவிக்கும் விதமாக நோட்டுகளை அச்சிட தொடங்கினர் . 



       அதே சமயம் நோட்டுகளின் அளவையும் குறைத்தனர். சிக்கன நடவடிக்கையாம் .

       1980 ல் முற்றும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன .

       உதாரணமாக 2  ரூபாய் நோட்டில் ஆர்யபட்டா வை குறிக்கும் வகையிலும்,




       5 ரூபாய் நோட்டுகளில்  விவசாயத்தை குறிக்கும் வகையிலும் மற்ற ரூபாய் நோட்டுகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

தொடரும் .......     


நன்றி கூகிள் , http://www.rbi.org.in   

Tuesday, November 29, 2011

பணம் பணம் money money money money



               பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்,

              பணம் என்றால் பொனமும் வாயை பிளக்கும் .

      போன்றவை ஒன்னாம் கிளாஸ்ல இருந்தே நமக்கு சொல்ல பட்டவை, பெற்றோர்களால் போதிக்கபட்டவை என்று கூட சொல்லலாம்.     

       சோ அந்த பணத்தினை பற்றி கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கிறேன். 

      ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வருவோம் ,

    தற்பொழுது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள்  ‘பேங்க் நோட்டுகள்’ என்று அழைக்க படுகின்றன. காரணம் என்னவென்றால் அது ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் அச்சிடப்பட்டு வெளியிடபடுவதால் .

       ‘ரிசெர்வ் பேங்க் ஆப்’ இந்தியா 1935 ஏப்ரல் முதல் தேதியில் தொடங்கப்பட்டது. முதல் முதலில் வெளியிடப்பட்ட பேங்க் நோட்டு 1938 ஜனவரியில் வெளியிடப்பட்ட  5 ரூபாய் நோட்டே ஆகும் ,



      பின்பு அதே ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஜுனில் முறையே 10,100,1000,10000  ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது .

      ஆனால் அவையெல்லாம் ஆறாம் ஜியார்ஜ்-இன் உருவம் கொண்டவை. நாம் அப்பொழுது அடிமையாக தானே இருந்தோம். மாதிரிக்கு சில படங்களை இணைத்துள்ளேன்.


  
       1947 க்கு அப்பறம் அந்த நோட்டுகள் நிறுத்தப்பட்டன , பின்பு 1949-1950 ல் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தபட்டன .



       அவை அசோகா தூணிலுள்ள சிங்கங்களை மையமாக கொண்டு உருவாக்க பட்டன. அதையும் நீங்கள் இங்கு காணலாம் .



        அதே போன்று ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சிடுவது நிறுத்தப்பட்டன .

தொடரும் ...................................

பின்குறிப்பு :  * நான் இங்கு இந்திய ரூபாய் பற்றி மட்டுமே பதிவிட                                 போகிறேன்.
·           அதுவும் 1935-க்கு அப்பறம் மட்டுமே .       

நன்றி http://www.rbi.org.in/home.aspx




Monday, November 21, 2011

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் சேர்க்க தமிழக அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவு !....



       நல்லதொரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் ,
         
          எவ்வளவு நல்ல விஷியங்கள் செய்தாலும் இது போன்ற அரசியல் காழ்புணர்ச்சி மற்றும் டாஸ்மாக் விஷியத்தில் இன்னும் ஒரு இரண்டாம் தர அரசியல்வாதியாகவே ஜெ பாவிக்கபடுகிறார் .

           மக்களுக்கு அவர் மீது வெறுப்பு வர இதுவும் ஒரு காரணம். மாளிகையில் வாழும் அவருக்கு எம் போன்ற நடுத்தர வர்கத்தினர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை .

           ஏழைகளை சினிமாக்களில் மட்டும் தான் பார்த்திருப்பார் ,    மக்கள் நலப் பணியாளர்களில் எத்தனை ஏழைகள் பாதிக்கபட்டிருப்பார்கள் என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை அவர் தெரிந்துகொள்ளவும் போவதில்லை !
             
                  உங்களை விட்டால் வேறு எங்கே போவேன் என்று பேச தெரிந்தவருக்கு இலவசங்கள் தரவேண்டிய பணத்தை நான் மின்சரவாரியம் , ஆவின், போக்குவரத்து கழகங்களுக்கு  கொடுக்கலாம் என்று இருக்கிறேன் உங்களின் பதில் என்ன என்று கேட்டிருந்தால் அடுத்த நொடிக்குள் சம்மதிதிருப்பர் எம் மக்கள்.

           அதை விட்டுவிட்டு பக்கம் பக்கமாக அறிக்கை வாசிப்பதில் கருணாநிதியை விஞ்சிவிட்டீர்கள்  !!!!!!.... 

Wednesday, November 16, 2011

எதிர்காலத்தில் இதுவும் நடக்கலாம்


அரசியல் 

·               பிரதமர் ராகுல் காந்தியின்  ஆட்சியை எதிர்த்து அத்வானி  அடுத்த  ரதயாத்திரை , வரும் தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் கிடையாது என 10125 வது  முறையாக அறிவிப்பு. 

·               பாராளுமன்றத்தில் கடும் அமளி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகா ஷெராவத் mp க்கு அருகில் இருக்கை வேணும்  என கடும் சண்டை சஷி தரூர் மற்றும் லல்லு பிரசாத் யாதவ்  இருவரும் காவலாளிகளால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றபட்டனர் .

·                தி.மு.க.ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களில் இன்னும் மேம்பாலங்கள் மட்டுமே மீதியாக உள்ளது எனவே அவற்றையும் ஆஸ்பத்திரியாக மாற்றுமாறு முதல்வர் ஜெ உத்தரவிட்டுள்ளார் .  

·                2g விடுதலை ஆன அடுத்த நாளில் நிலமோசடி வழக்கில் கைது செய்ய பட்டார் ஆர் . ராசா 

சினிமா

·                ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராயின் மகள் இணைந்து நடிக்கும் புதியபடம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது .

·                  ராம்போ படத்தை ரீமேக் செய்கிறார்  பவர் ஸ்டார் , படத்தின் பெயர் 'ராம் பாபு

விளையாட்டு  

·                     இந்தியா உலக கோப்பை கிரிக்கெட் ல் கானாவிடம் தோற்றதன் எதிரொலி , கோச் கங்குலி பதவியை விட்டு விலகினார் 

·               சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை முதல் சுற்றிலே வெளியேற்றினால் தான் இம்முறையாவது ipl  கோப்பை வெல்ல முடியும் என சென்றமுறையும் இறுதி போட்டியில் தோற்ற பெங்களூர் ராயல்  சேலன்ஜெர்ஸ்  அணியின் கேப்டன் கோஹ்லி அறிவிப்பு  .

பெட்ரோல் : 

·               ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஒரு பைக் ப்ரீ என இந்தியன் ஆயில் அறிவிப்பு .

·                          பெட்ரோல் விலை ரவுண்டாக இல்லை என கபில் சிபல் வருத்தம். எனவே அடுத்த கட்ட மீட்டிங்கில் புதிய விலை அறிவிக்கப்படும் .

தங்கம் :

·                  மூன்று சவரன் தங்கம் வைத்திருக்கும் அனைவரும் கோடீஸ்வரகள் பட்டியலில் சேர்க்கபடுவர் மத்திய அரசு அறிவிப்பு.

வெங்காயம் :

·               அரசு நியாய விலை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 268 ரூபாய் மட்டுமே ,242 ரூபாய் மானியமாக வழங்கப்படும்  என அறிவிப்பு .


டங் :

·                இந்த கோடையில் வெயில் 75 டிகிரியை தொடும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 

·                  7g யில் ஊழல் ! சத்தியமா நான் இல்லீங்கோ கனிமொழி கதறல் 

·                 மாயாவதி தனது 1100 வது சிலையை நிறுவினார்... . 


Saturday, November 12, 2011

அப்துல் கலாமை இப்படி திட்டலாமா ?



          நான் முன்கூட்டியே சொல்லி விடுகிறேன் நான் கூடன்குள பிரச்சனையை பற்றி இங்கு பேச முற்பட வில்லை. .

      ஒரு முன்னால் குடியரசுத்தலைவர் , அணு வைபற்றி படித்தவர் ,நாட்டின் முதல் குடிமகனாய் இருந்தவர் ,எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு தமிழர் .

      இவை யாவும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை , அவரது கருத்து உங்களுடைய கருத்துக்கு எதிராக இருக்கட்டும் பரவாயில்லை , அதற்காக அவரை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவது துளி கூட நல்லா இல்லை .

"  இவரின் உபதொழில் கூலிக்கு மாரடிப்பது என்று "

            கோமாளி

" ஜனாதிபதி போதை இவரை மாற்றிவிட்டது "


இந்த வார்த்தைகளால் அவரை திட்டி இருக்கிறார்கள்.

            தமிழன்  தமிழன்  என்று மார்தட்டி கொள்கிறாய் இது தான் தமிழ் பண்பாடா ?
     
       இதை தான் நீ திருக்குறளிலிருந்து கற்றாயா ?
     
                முதல் முறையாக  தமிழன் என சொல்லிக்கொள்ள  வெட்கப்படுகிறேன்.

            போராட்டம் நியாமானதுதான் ஆனால் இத்தகைய செயல் அருவருக்கத்தக்கது. 

Thursday, November 10, 2011

கர்நாடகத்தில் பேருந்து பயணம்



        நான் கடந்த ஒரு மாதமாக இங்கு பெங்களூரில் தங்கியுள்ளேன் இங்கு வந்ததும் நான் கண்ட முதல் வித்தியாசம்,
பேருந்து கட்டணம்! எம் தமிழகத்தில் வெறும் 3(அ)4 ரூபாய் வரக்கூடிய கட்டண அளவு இங்கு 9 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது, நான் சேலம் டூ நாமக்கல் செல்ல வெறும் 16 ரூபாய் இருந்தால் போதும் ஆனால் இங்கு எல்லாமே இரண்டு மூன்று மடங்கு அதிகம்.

       ஒரு முறை வெளியில் சென்றால்  பேருந்து கட்டணமே 100 ரூபாயை தாண்டும்! ஒரு நாள் பாஸ் எடுத்துக்கொண்டால் 45 ரூபாய் ! என்னுடைய முதல் கேள்வி ஏன் இங்கு அவ்வளவு கட்டணம் ? அனைத்தும் இந்திய மாநிலங்கள் தானே ? ஏன் பொதுவாக ஒரு கட்டணம் விதிக்கபடவில்லை? வரிகள் வித்தியாசபட காரணம் ?  கர்நாடகத்தில் ஏழைகளே கிடையதா?

       அடுத்து இங்கு நான் தினசரி சந்திக்கும் ஒன்று சில்லரை பிரச்சனை. நான் வசிக்கும் இடத்திற்கும் என் கம்பெனிக்கும் 5 கிலோமீட்டர் தூரம்,9 ரூபாய் கட்டணம்.என்னால் இயன்றவரை 9 ரூபாயாக கொடுக்க முற்படுவேன் ஆனால் என்ன செய்வது பெரும்பாலும் 10 ரூபாயாக கொடுக்க வேண்டிய சூழ்நிலை.10 ரூபாய் கொடுத்தால் ஒரு ரூபாய் மீதியை அவர்கள் தருவதே இல்லை .போராடி கேட்டாலும் வெளிப்படையாக இல்லை என்கின்றனர். சில முறை  நான் 1 ரூபாய் அதிகம் கொடுத்து 2 ரூபாயாக தருமாறு கேட்டால் 4 ரூபாய் கொடு 5 ரூபாயாக தருகிறேன் என்கிறார் நடத்துனர் .

       தமிழகத்தில் கூட 50 பைசா பிரச்சனை இருந்தாலும் பெரும்பாலும் நடத்துனர்கள் திருப்பி கொடுத்து விடுகின்றனர்,ஆனால் இங்கு  பெரும்பாலும் தருவதை தவிர்க்கின்றனர் இது ஊழல் இல்லையா ?

     அடுத்து மிக முக்கியமான ஒன்று ஓட்டுனரே பயணசீட்டு கொடுப்பது!

பெரும்பாலும் தானியங்கி கதவு கொண்டவை இங்கிருக்கும் பேருந்துகள்.  பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்தின் பின் கதவு திறக்காமல் முன் கதவு மட்டும் திறந்திருந்தால் அந்த பேருந்தில் நடத்துனர் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.பேருந்தில் நிற்ககூட இடமிருக்காத அளவிற்கு கூட்டம் இருக்கும் ஓட்டுனர் வண்டியை ஓட்டிக்கொண்டே பயணிகளுக்கு சீட்டு வழங்குவார் ! சில்லரையும் வழங்குவார் !.  

       பெங்களூர் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் எப்படி இதை அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.?. ஒரு முறை இத்தகைய நடத்துனர் இல்லா பேருந்தில் நான் பயணம் செய்தேன் சீட்டு வழங்கிக்கொண்டே ஓட்டுனர் பேருந்தை ஒரு திட்டில் மோதிவிட்டார் எனக்கோ தூக்கி வாரி போட்டுவிட்டது! ஓட்டுனர் சிறிதும் சலனம் காட்டாமல் வாகனத்தை ஒட்டிசென்றார்! பலமுறை இப்படி நடந்திருந்தால் ஒழிய அவரால் உடனே இயல்புநிலைக்கு வர இயலாது! அன்றிலிருந்து நான் அத்தகைய பேருந்தில் எறுவதில்லை.   மக்களின் உயிரில் அப்படி என்னய்யா விளையாட்டு? இப்படி பயணிகளுக்கு சீட்டு வழங்கலாமா? போக்குவரத்திற்கென்று சட்டம் ஏதும் கிடையதா?
       
        ஊழலும் , அலட்சியமும் தொடங்கும் இடத்தில் விட்டுவிட்டு சுவிஸ் பாங்கில் போய் தேடிக்கொண்டிருந்தால் என்னய்யா பிரயோசனம் !!!!



       

Monday, November 7, 2011

நெட் பேங்கிங் சந்தேகங்கள்



NFET என்றால் என்ன ?

    நேஷனல் எலெக்ட்ரானிக் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் என்பது தேசிய அளவில் செயல்படக்கூடிய ஒரு நிதி பரிமாற்று திட்டமாகும், இதன் மூலம் தனி மனிதனோ,நிறுவனங்களோ பணத்தை ஒரு பாங்க் கிளையிலிருந்து வேறு எந்த ஒரு பாங்க் கிளைக்கும் பரிமாற்றம் செய்யலாம்.

அனைத்து வங்கிகளின் கிளைகளிலும் இந்த நெட் பேங்கிங்
முறை சாத்தியமா ?

   நெட் பாங்கிங்க் பயன்படுத்த குறிப்பிட்ட வங்கிக்கிளையானது NFETல் பதிந்திருக்க வேண்டும், உங்கள் வங்கிக்கிளையானது நெட் பாங்கிங்கிர்க்கு ஏற்றதா என தெரிந்துகொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும் http://www.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=2009

பண பரிமாற்றதிற்கு ஏதாவது வரையறை உண்டா ?

   பணம் எவ்வளவு வேண்டுமானாலும் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பரிமாற்றம் செய்யலாம், ஆனால் ஒரு பரிம்மாற்றதிற்கு 50 ஆயிரம் வரை மட்டுமே சாத்தியம்.

வேலை நேரம் ?

   வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. சன்டே ஹாலிடே.

கமிஷன் எவ்ளோ ?

   இன்கமிங் ப்ரீ ஆனா அவுட்கோயிங் தான் பா கமிஷன் உண்டு.
புரியலையா நம்ம ஒருத்தருக்கு பணம் போட்டம்னா அவருகிட்ட எந்த காசும் கேக்க மாட்டாங்க !

நம்ம தான்  

+> 1 லட்சம் வரைக்கும் 5 ரூபாவும்*

+> 1  லட்சதிலிருந்து 2 லட்சம் வரை 15 ரூபாயும்*

+> 2 லட்சதிற்கு மேல் 25 ரூபாயும்* கட்டனும்.

அது என்னாபா * (conditions apply) ?

    சேவை வரிங்க அது பாங்க பொறுத்து மாறுபடும். 
(வேணும்னா என்னோட அக்கவுண்டுக்கு ஒரு 5 லட்சம் பணம் போடுங்க கமிஷன் எவ்வளவுனு ஈசிஆ புரியுமில்ல)

வெளிநாடுகளுக்கும் இம்முறையை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யலாமா?

    இயலாது . நேபாளதிர்க்கு மட்டும் இது விதிவிலக்கு அங்கும் கூட நம்மால் போடதான் முடியுமே தவிர அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்ப பணம் அனுப்ப இயலாது .    


இலவச இணைப்பு :

ð  பண பரிமாற்றம் முடிந்தது எனில் தங்களுக்கு sms அல்லது email மூலம் தெரிவிக்கபடும்.

ð  ஒரு வங்கிக்கு பரிமாற்றம் செய்யபட்ட பணத்தை வேறொரு வங்கியிலிருந்து எடுக்க இயலாது

ð  வீட்டிலிருந்தே இணயம் மூலம்  பண பரிமாற்றம் செய்யலாம் என்பதால் நேரம் மிச்சம் ,அலைச்சல் மிச்சம் .......

ð  மேலும் விவரங்களுக்கு  http://www.rbi.org.in/scripts/FAQView.aspx?Id=60



     
    


Friday, November 4, 2011

ஏழாம் அறிவும், வேலாயுதமும் ஒரே கதையா?




      இந்த இரண்டு படங்களை பற்றியும் பத்திரிக்கைகள்,வலைபூக்கள் ,தொலைக்காட்சிகள், டீ கடை ,சலூன், ஃபேஸ் புக்,டிவிட்டர், பஸ்ஸ் னு எல்லாத்திலையும் பாத்திருப்பீங்க படிச்சுருபீங்க.ஆனா இது ரெண்டும் ஒரே கதைனு தெரிஞ்சுகிட்டீங்களா?(இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது!).

      ஒன் லைன்ல சொல்லனும்னா.

     ஒரு பொண்ணு நாட்டுக்கு நல்லது செய்யணும்னு ஆசை பட்ரா,அதுக்காக ஒரு ஹீரோ வ உருவாக்குரா.    

    46 லைன்ல சொல்லனும்னா. 

    அந்த பொண்ணு ஏழாம் அறிவுல ஸ்ருதி ஹாசன் , வேலாயுதம்ல ஜெனீலியா.

    ஸ்ருதி வரலாறையும் அறிவியலையும்  தப்பா படிச்சிபுட்டு இன்னொரு போதிதர்மன உருவாக்கரனு சர்கஸ் சர்கஸ் ஆ சுத்துது.

   இங்க நம்ம ஜெனி பாதிரிக்கை ல வேல செய்றனு சொல்லிபுட்டு கெட்டவங்க இருக்குற கூடாரம் கூடாரமா சுத்துது.

   ரெண்டு பேருக்கும் நம் தமிழ் நாட்ட திருத்தனுங்கிறதுதான் ஒரே கொள்கை.ஆனா என்ன பன்றது லேடீஸ் ரெண்டு பேர்ணாளையும் எகிறி எகிறி பைட் பண்ணமுடியாது, மொக்கையா பஞ்ச் டயலாக் பேசவும் தெரியாது,ஸோ ஒரு ஹீரோ வ தேட்ராங்க.

      இப்ப தான் ஒரு ஹீரோ கிடைக்குறார் !

    ஆதாகபட்டது ஏழாம் ல சர்கஸ் கரரான நம்ம வள்ளலும்(அதாங்க எனக்கு பட்ட பெயர் வேணானுபுட்டு கிடைக்கிற சுவரெல்லாம் வள்ளல் சூர்யா னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே அவிங்க), வேலாயுதத்துல பால் கரரான நம்ம இளைய தளபதியும் (வேட்டைக்காரன், சுறா,குருவி மாறி லாம் இல்லீங்க ! சிரிக்காதீங்க நீங்க நம்பித்தான் ஆகணும்,பேபிமா பிளீஸ் பிலிவ் மீ )   

   எங்கயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தாங்க்ர மாதிரி முறையே ஸ்ருதி மற்றும் ஜெனியிடம் ஜொல்லு விட்டு மாட்டிக்கொள்கின்றனர்.

    அவங்களும் மாட்னான்டா பலிகெடானு டைரக்டர் கொடுத்த வசனத்த நாள் பூரா மனப்பாடம் பண்ணி ஒரு வலியா திக்கி தெனறி பேசி முடிக்கிறாங்க.

       ரெண்டு ஹீரோவுமே சொல்லி வெச்சா மாதிரி வேணாம் என்னாலலாம் முடியாது நான் ஒரு சாதாரண ஆள் னு சொல்லி மறுக்க.

       அவ்வளவு நேரமா கம்னு இருந்த வில்லன் குரூப்ஸ் ஓ நீங்க தான் ஹீரோ வானு அடிக்க.
      
      நொந்து போன ஹீரோயின்ஸ் இப்ப நீங்க ஒத்துக்கலீனா மறுபடியும் அந்த டைரக்டர் எழுதிகொடுத்த வசனத்த பேசுவோம்னு மிரட்ட,

     அய்யோ பரமா அவுங்க எனக்கு சாவு பயத்த காட்டிட்டாங்க அவங்களுக்கு சாவுன என்னானு நம்ம காட்டணும்னு முடிவு பண்ணி ரெண்டு ஹீரோ வும் நாட்ட காப்பாத்த சம்மதிக்கிறாங்க.

    அப்றம் என்னங்க அதான் 75 வருஷமா தமிழ் சினிமா ல வர, அதே சேசிங்,பைடிங்க், ங், ங், ங், ங்...........

    கிளைமாக்ஸ் ல சூர்யா வழக்கம் போல தன் சிக்ஸ் பாக்க காட்டி நிற்க ! இளைய தளபதி ஒரு வழியா போராடி வயித்த உள்ளார இழுத்து மாட்ச் பண்ண ட்ரை பண்ணி இருக்காரு ( நல்ல வேல அஜீத் படம் ரிலீஸ் ஆகல!)

     அப்றம் படம் முடியும் போது ரெண்டு பேருமே மெசேஜ் சொல்றனு தக்காளி பேசியே தியேட்டர விட்டு துரத்தி விட்டுட்டாய்ங்கபா.
ஏழாம் அறிவும், வேலாயுதமும் ஒரே கதை !
தற்செயலா..................? டைரக்டர் செயலா........................? நாணமிங்கு நாணமில்லையே ! டவுன் டவுன் டவுன் உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது........ கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது ...............