1984 ல் கடலூர் மாவட்டத்தில் அரசு துறையில் செய்தி தொடர்பாளராக
பணியாற்றி கொண்டு இருக்கிறார் நடராசன் ,
அப்பொழுதைய கடலூர் மாவட்ட ஆட்சியாளராக சந்திரலேகா
இருக்கிறார்,
அவரிடம் தன்னுடைய மனைவி சசிகலா நடத்தும் வினோத் வீடியோஸ்
நிறுவனத்திற்கு அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளரான ஜெயலலிதா பங்கேற்கும்
கூடங்களில் வீடியோ எடுக்கும் பணியை பெற்று தருமாறு கேட்டு கொள்கிறார் நடராசன்,
அதன் படி சந்திரலேகா சசிகலா &
கோ வை அறிமுகம் செய்கிறார் ,
அவ்வாறு தொடங்கிய நட்பு
மகாமகத்தில் ஒன்றாக
நீராடியது,
சசிகலாவின் உறவினர் பய்யன் ஒருவரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்தது
வளர்ப்பு மகன் திருமணத்தில் ஜெ மற்றும்
சசிகலா ஆடம்பர உடையில் ஜோடியாக ஊர்வலம்
வந்ததது
ஊழல் வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவை நேரில் சென்று வீட்டிற்கு
அழைத்து சென்றது
இப்படி 25 ஆண்டுகளாக இணைபிரியா இந்த நட்பு
இன்று குடும்பத்தோடு வெளியேற்றபட்டது !!!
ஜெ , சசிகலாவின் இந்த பிரிவினைக்கு நிச்சயம் ஒரு மிக பெரிய காரணம்
இருந்தாக வேண்டும் இல்லையெனில் ஏன் காசு வெட்டி போடும் அளவுக்கு வந்திருக்கிறது .
சொத்து குவிப்பு பிரச்சனையா ?
அதிகார பகிர்வு பிரச்சனையா ?
அல்லது வேறு ஏதாவதா ?
காலம் தான் பதில் சொல்லும் .....................
No comments:
Post a Comment