Pages

Friday, July 19, 2013

மரியான் விமர்சனம்

தனுஷ், பார்வதி மேனன், சலிம்குமார், ஜெகன், அப்புக்குட்டி நடிப்பில் எழுதி இயக்கி இருப்பவர்  பரத்பாலா.வந்தேமாதரம் புகழ் பரத்பாலாவின் இரண்டாவது படம், தமிழில் முதல் படம். இசை ஏ ஆர் ரஹ்மான்,ஒளிப்பதிவு மார்க் கானிக்ஸ் .



தென் தமிழ்நாட்டில் வாழும் மீனவர் மரியான், அவரது காதலி பனிமலர். யாருக்கும் அடங்காத அதேசமயம் மீன்பிடிப்பத்தில் வல்லவரான தனுஷ் ஒரு டெம்ப்ளேட் சவுத் இண்டியன் சண்டியர், கூடவே ரெண்டு தோஸ்த்து கேரக்டர் (அப்புக்குட்டி மற்றும் இமான் ). தனுஷை ஒருதலையாக காதலிக்கும் நம்ம பருத்திவீரன் ப்ரியாமணி டைப் ஹீரோயின் பார்வதி.

ஒருவழியாக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கும் போது கொடுத்த கடனுக்காக உன்மகளை மணமுடித்து வை என்று தனுஷிடம் அடிவாங்குவதற்காகவே பார்வதியை பெண் கேட்டு செல்லும் வில்லன் ! அப்புறம் என்ன வந்தவர் அடிவாங்கிட்டு கொடுத்த பணத்தை நாளைக்குள் திரும்பி தரவேண்டும் என சொல்ல, ஒரு வருட ஊதியத்தை முன்பணமாக பெற்று கடனை அடைத்துவிட்டு பார்வதியை நான் தான் மணமுடிப்பேன் என்று கூறிவிட்டு 2 வருட கான்ட்ரக்டில் சூடானில் உள்ள ஆயில் கம்பனியில் வேலைக்கு சேற்கிறார் தனுஷ் !

2 வருட  கான்ட்ரக்ட் முடித்து திரும்பும் வழியில் அந்நாட்டு தீவிரவாதிகளால் கடத்தப்படும் தனுஷ்,ஜெகன், பணத்திற்காக பிணைய கைதிகளாக வைக்கபடுகின்றனர்.  வேலை செய்த கம்பனி தீவிரவாதிகள் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் பிணைய கைதிகளை கொன்றுவிடுவது வழக்கம். தனுஷ் மற்றும் ஜெகன் வேலை செய்த கம்பனி பணம் தறமறுக்க அதன் பின்பு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

இசை மற்றும் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். டெக்னிக்கலாக வெல் பில்டட் படம்னு சொல்லலாம்.

 பரத்பாலா முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும் பின்பாதியில் பாசாகிவிட்டார். தனுஷ் பார்வதியை உதைக்கும் சீன், கடலுக்கடியில் மீன்பிடிப்பது, சிறுத்தைகளுக்கிடையில் மாட்டிகொள்ளும்போது கொடுக்கும் எக்ஸ்பிரசன், தீவிரவாத கும்பலிடம் சிக்கி தவிப்பது என மீண்டும் ஒருமுறை தன்னை சிறந்த நடிகராக வெளிகாட்டியிருக்கிறார்.

பூ படத்தில் பார்த்த பார்வதியா இது ! அழகாக இருக்கிறார், சிறந்த நடிப்பு. நிச்சயம்  ஒரு ரவுண்டு வருவார்.

படத்துல கமெர்சியல் எலிமண்ட்ஸ் ரொம்ப ரொம்ப குறைவு, மணிரத்தினம் டைப் மிகவும் மெதுவாக போகும். இதே படத்த ஹாலிவூட்லையோ, இல்ல வேற மொழியிலையோ எடுத்திருந்தா
" ச்ச  சூப்பர்யா இது மாறி நம்ம ஊர்ல எங்கயா வர போகுதுனு" சொல்லிட்டு போவோம் !!




2 comments:

  1. கடைசி வரி படம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது புரிகிறது... பார்த்திடுவோம்...! நன்றி...

    ReplyDelete