Pages

Sunday, January 29, 2012

நாடகம் "நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்"


                              
சமையலுக்கு காய்கறிகளை நறுக்கிகொண்டிருந்தார் மாணிக்கம் ,

அப்பா இதோட பீடி காசு 25 ரூபா தரணுமாம் செட்டியார் சொல்ல சொன்னார், என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தான் மாணிக்கத்தின் மகன் சுரேஷ்.

 சரிடா , பீடி எங்கே ?

               இந்தாப்பா ,,,

(பீடியை வாங்கிவிட்டு), சுரேஷ் அம்மா போட்டோவை துடைச்சு விளக்கு போட்டுட்டு போய் படிடா , அப்பா சாப்பாடு செஞ்சுட்டு கூப்பிடுறேன்..

              சரிப்பா ,,

ஒரு பீடியை பற்ற வைத்து புகைத்தவாரே சமையல்  வேலைகளில்   ஐக்கியமானார் மாணிக்கம்.

            அப்பா அம்மா போட்டோவுக்கு விளக்கு வச்சிட்டேன் ..

              சரி போய் படி..

            அப்பா இன்னொன்னு சொல்லணும்

              என்ன ?

        நாளானிக்கு ஸ்கூல் சார்பா நம்ம ஊர் கோயில் திடல்ல ஒரு நாடகம் போடறாங்க , அதுல நானும் நடிக்கிறேன்பா, சரவணன் வாத்தியார் தான் அதுல எனக்கு அப்பாவா நடிக்கிறார் பா,,

சிறிது நேரம் யோசித்தவராய், நல்லா நடிக்கணும் டா என்று மட்டும் கூறினார்

அடுத்தநாள் சுரேஷை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார் மாணிக்கம் போகும் வழியில் செட்டியார் கடையில் நின்றார்.

செட்டியாரே ஒரு கட்டு பீடி கொடுப்பா,,,,,

 நேத்து சாயங்காலம் தான்யா உன் பையன்கிட்ட ஒரு கட்டு பீடி கொடுத்து விட்டேன் அதுக்குள தீத்துட்டியா ?

கண்ணு வைக்கதையா, பீடிய கொடு

நீ இன்னும் பழைய பாக்கியே 25 ரூபா தரனும்யா !  

25 ரூபாலாம் ஒரு காசாயா ? என் பையன் சிங்கக்குட்டி நாளைக்கு நாடகத்தில நடிக்க போராம்யா பாரு ஒரு நாள் அவன் எம்.ஜி.ஆர் மாதிரி பெரிய ஆளா வருவான் அன்னைக்கு உன் கடையையே விலைக்கு வாங்குவான் !!

செட்டியார் சிரித்துக்கொண்டே , இந்தா பீடி இதோட 30 ரூபா ஆச்சு இந்த காச மொதல கூடு என்கடைய அப்பறம் விலைக்கு வாங்கலாம் ,

தரேன் செட்டியாரே தரேன் என்றவாறே ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டு இடத்தை காலி செய்தார் மாணிக்கம்.

ஒரு வழியாக நாடகம் நடக்கும் நாள் வந்தது , ஊர் மக்கள் அனைவரும் கோயில் திடலில் கூடியிருந்தனர்.

மேடையை பார்த்தவாரே அமர்ந்து இருந்தார் மாணிக்கம் ,

நாடகத்தில் நடிப்பவர்களெல்லாம் மேடைஏறினர் , சுரேஷின் ஆசிரியர்கள், சுரேஷ் மற்றும் சிலர் அங்கு இருந்தனர் , சுரேஷ் யாரையோ தேடிக்கொண்டிருந்தான் மாணிக்கத்தை கண்டவுடன் 100 வாட்ஸ் பல்பு போல புன்னகைத்தான், கைகளால் சைகை காண்பித்தான் .

மாணிக்கத்திற்கு பெருமை தாளவில்லை ,அருகில் இருப்பவர்களிடம் அது என் பையன் தாங்க தோ அந்த வெள்ளை சட்டை என்று கூறிக்கொண்டிருந்தார் ,வேக வேகமாக ஜேப்பில் கையை விட்டு ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தார் வானத்தை நோக்கி ரயில் புகை போக்கி போல புகை விட்டார் , தன்னை மறந்து விசில் அடித்தார் ,

நாடகத்தில்  (அந்த காட்சியில்)

   சுரேஷின் அப்பா புற்று நோயால் இறந்து விடுகிறார் , அவரை கட்டிபிடித்து சுரேஷ் அழுது கொண்டு இருக்கிறான் .
புகை பிடிப்பது , புகையிலை போடுவது , மது அருந்துவதால் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள் என ஆசிரியர் ஒருவர் விளக்கி கொண்டிருந்தார்.        

சுரேஷ் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான் , ( சரியான சிகிச்சை மூலம் புற்று நோயை ஆரம்பத்திலே குணப்படுத்திவிடலாம் என ஆசிரியர் கூறிக்கொண்டிருந்தார்)

நாடகம் முடிந்தவுடன்

வேகமாக ஓடி வந்த சுரேஷ் மாணிக்கத்தை கட்டியனைத்துக்கொண்டு கதறுகிறான் ,

அழுவாதடா ,, ஏன் அழுவுற ?

புகை பிடிச்சா புற்றுநோய் வரும்னு வாத்தியார் சொன்னார்ல அப்ப நீ என்ன விட்டிட்டு போய்டுவியாப்பா ?

தொண்டை அடைத்துக்கொண்டது மாணிக்கத்திற்கு , கண்கள் குளமாகின , கைகள் லேசாக நடுங்கியது, சுரேஷை தூக்கி தோள் மேல் போட்டுக்கொண்டு நடந்தார் ..

போகும் வழியில் செட்டியாரின் கடையை பார்த்தார் .

செட்டியாரே இந்தா 30 ரூபா என கடைக்குள் பணத்தை வைத்தார் .

மாணிக்கம் பீடி வேணாமா ? என்ற கேள்விக்கு மவுனமாய் கடையை கடந்தார் மாணிக்கம் ,,,
                                                       சூர்யபிரகாஷ்.பெ
           

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நெகிழ்ச்சியான கதை.

    ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் மனம் தடுமாறி தவறான பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்...தொடரும் பழக்கத்தினால் தானும் தனது குடும்பமும் பாதிக்கப்படுகிறோம் என்பது கூட பலருக்கும் புரிவதில்லை.

    ஒரு சிறு நாடகம் ஒருவரின் உள்ளத்தை மாற்றுவதாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த கதை உண்மையில் மிக ஆழமான புரிதல்.

    மகாத்மா அவர்கள் பார்த்த அரிச்சந்திரன் நாடகம் நினைவுக்கு வருகிறது.

    புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இப்படி ஒரு போட்டியை அறிவித்து பலரையும் எழுத (சிந்திக்க) வைத்து கொண்டிருக்கும் நேசம் + யுடான்ஸ் அவர்களுக்கு என் பாராட்டுகள்.


    போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சூர்யா.

    ReplyDelete
  3. intha manusanuga innu theerunthala da ,,, avangala love pannravangaluku kuda
    yaar ah cham 2 peeru than thiruntharanga da

    ReplyDelete
  4. கௌசல்யா அக்காவிற்கும், கோபி க்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete