நீங்கள் இந்த பழக்கங்களிலிருந்து விடுபட்டால் நீண்ட நாட்களுக்கு
மகிழ்ச்சியாக வாழலாம் .
மகிழ்ச்சியாக வாழலாம் .
நான் இப்பவும் மகிழ்ச்சியாக தானே இருக்கேன் ?
அது இல்லை சார் உங்களுக்கு ஆரம்பகட்ட புற்றுநோய் வந்திருக்கிறது,
(தனக்கு நன்மை என்றால் ஏற்று கொள்ளக்கூடிய மனது , தான் பாதிக்க பட்டிருக்கிறோம் என்றவுடன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது )
இல்லை நீங்கள் பொய் சொல்றீங்க,ஏமாத்த பாக்குறீங்க. ஆவேசமானான் மதன் கவுன்சிலிங் மையத்தை விட்டு வெளியே வந்தான் .
ஒரு சிகிரட்டை பற்ற வைத்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.பதற்றமாக இருந்தான் ,நினைவுகள் அவனை குழப்பியது, தன் வாழ்க்கையை பின்நோக்கினான்,,,
·
வாடா மதன் சும்மா கொஞ்சமா குடிச்சு பாருடா ,
இல்லடா உத்திரசாமி இதெல்லாம் எனக்கு பிடிக்காது
மதன் இதெல்லாம் எல்லாரும் காமன்ஆ பண்றது டா நீ என்ன கொலை குத்தமா பண்ண போற ?
அது இல்லடா குடிக்கிரதால நிறைய பிரச்சனைகள், நோய்கள் நமக்கு வரும் ,சீக்கிரமா இறக்க நேரிடும் டா .
ஹா ஹா , நம்ம இர்பான் ப்ரோபெசர் எந்த பழக்கமும் இல்லாதவர் 40 வயசுலேயே செத்து போய்ட்டாரு , என் மாமன் சின்ன வயசுல இருந்து குடிக்கிறாரு 55 வயசாகியும் நல்லாதாண்டா இருக்காரு , புடிடா சும்மா கண்ணமூடிக்கிட்டு ஒரே மொடக்குல குடிச்சிரு,,,
தயங்கியவாரே அதை மதன் வாங்கினான் (இந்த இடத்தில் தான் வாழ்க்கையின் சூட்சமம் ஒழிந்திருக்கிறது ! வாங்க மறுத்தவன் வாழ்கையை வெல்கிறான் , தயங்கியவன் துன்பத்தில் மூழ்கிறான்,நம் நாட்டின் சாபக்கேடு மறுத்தவனை விட தயங்கியவனே அதிகம் !)
என்னடா இப்படி கசக்குது ?
மொதல அப்படித்தாண்டா இருக்கும் போக போக சரியாகிடும் .
இவ்வாறு ஆரம்பித்தது
'நண்பனின் பிறந்த நாள்' , 'ஊர்ல திருவிழா' , 'வீட்ல விசேஷம்' ,'சுற்றுலா',என வளர்ந்து,
'நான் சந்தோஷமாக இருக்கிறேன்' அதனால் குடிக்கிறேன்,
'நான் துக்கமாக இருக்கிறேன்' அதனால் குடிக்கிறேன்,
'இன்னைக்கு ரொம்ப போர்' அதனால்,
'வாரத்துல ஒரு நாளாவது',
'ஒருநாள் விட்டு ஒரு நாள் இல்லனா கைலாம் நடுங்குது',
'நைட் ல கொஞ்சமாவது குடிக்கலைனா தூக்கம் வர மாட்டங்கிது'
'நான் சந்தோஷமாக இருக்கிறேன்' அதனால் குடிக்கிறேன்,
'நான் துக்கமாக இருக்கிறேன்' அதனால் குடிக்கிறேன்,
'இன்னைக்கு ரொம்ப போர்' அதனால்,
'வாரத்துல ஒரு நாளாவது',
'ஒருநாள் விட்டு ஒரு நாள் இல்லனா கைலாம் நடுங்குது',
'நைட் ல கொஞ்சமாவது குடிக்கலைனா தூக்கம் வர மாட்டங்கிது'
என்ற அளவிற்கு வந்து நின்றது,
திரும்பி பார்க்கையில பத்து ஆண்டுகள் ஓடியிருந்தன , கூடவே புகை பழக்கமும் ஒட்டிவிட்டது .எந்த ஒரு வேலைக்கும் மதன் ஒழுங்காக போனதில்லை,
விளைவு இன்று வீட்டாரால் வழுக்கட்டாயமாக கவுன்சிலிங்கிற்கு அழைத்து செல்லப்பட்டான் , பரிசோதனைகள் புற்றுநோயை உறுதி படுத்தியுள்ளது ,
·
வீட்டிற்கு வந்தவுடன் தனது கணினியை நோக்கினான், பேஸ் புக் ஓபன் ஆகியிருந்தது பச்சை நிற புள்ளியை தொடர்ந்து உத்திரசாமி என இருந்தது ,
பரஸ்பரம் நல விசாரிப்புக்கு பின் ,
uthirasamy: என்ன ?
me: நீ இன்னும் மது அருந்துகிறாயா?
uthirasamy:இல்லை டா
me:ஏன்
uthirasamy: சிலவருடங்களுக்கு முன் நான் உடல்நிலை சரியில்லைனு மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது,அங்கு எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததால் நான் முற்றிலும் மது பழக்கத்தை விட்டு விட்டேன் ,,,
Sent at 2:01 PM on Thursday
நீயும் இந்த பழக்கத்த விட்டுரு டா, நல்ல வேல ஸ்க்ரீனிங் பண்ணினாதனால தான் நான் உயிரோட இருக்கேன் , நார்மல் ஆ எல்லாரும் 40 வயசுல பண்ணுவாங்க நம்மள மாதிரி அதிகமா குடிக்கிறவங்க 30 ல பண்ணிகிட்டா கூட தப்பில்ல
Sent at 2:39 PM on Thursday
me: உன் மாமா ?
uthirasamy: அவர் அப்பயே இறந்துட்டாரு , அதுக்கும் இந்த குடி தான் காரணம்
mathan is offline. Messages you send will be delivered when
mathan comes online
தலையில் மிகப்பெரிய பாரம் வைத்தது போல் தோன்றியது மதனுக்கு, சிறிய சந்தோசத்திற்காக பறந்து விரிந்த இந்த உலகை மறந்து விட்டோம், அதற்கான விலையாக தன இளமையையும் பத்து வருடங்களையும் கொடுத்திருக்கிறோம்,தான் சேர்த்தது என்று ஒன்றும் இல்லை ஆனால் அழித்தது ஆயிரமாயிரங்கள், இனி இழந்ததை பற்றி கவலை படுவது வீண் !
உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான் ,,
வாழ்கையை வாழ முடிவு செய்தான் , வேக வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான் !
சூர்யபிரகாஷ்.பெ
சூர்யபிரகாஷ்.பெ
No comments:
Post a Comment