Pages

Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Saturday, October 22, 2011

இன்னும் எவ்வளவு நாள் ?


   மரங்கள் தான் உலகில் வெளியிடப்படும் நான்கில் ஒரு பங்கு கார்பனை உறிஞ்சி வெப்பமயமாதலை தடுக்கிறது என்று பள்ளி சிறுவன் கூட கூறுவான். 

  ஆனால் இதற்கு மேல் ?


  புரியவில்லையா ...

   வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க காடுகளை அதிகரித்தால் தான் வெப்பசமநிலை ஏற்படும் . மாறாக காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது .

   விளைவு மரங்கள் எரிக்கபடுவது , இறந்த மரங்கள் மக்குவது போன்ற செயல்பாட்டால் மேலும் கார்பன் டை ஆக்ஸைட் பூமியில் வெளியிடப்படுகிறது .

   இதில் ஒரு நல்ல சேதியும் உள்ளது !

   சிம்பிள் . மரங்கள் மக்குவாதல் அம்மோனியம் வெளியிடப்படுகிறது . இது உரம் என்பதால் மேற்கொண்டு புதிய மரங்களின் வளர்ச்சியை ஊக்கபடுத்துகிறது .

   அட போங்க நம்ம மேற்கொண்டு மரங்களை வளர விட்டால் தானே !. செத்தும் உதவுகிற மரம் எங்கே! செத்தும் கெடுக்கின்ற மனிதன் எங்கே !

   சமீபத்தில் கிடைத்த வேலெரீ ராஸ் என்பவரின் அறிக்கைபடி மரங்கள் வெப்பமயமாதலால் மேற்கொண்டு வளரவே செய்கின்றன . மொத்தம் ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் நிலம் செயற்கையாக வெப்பமூட்டபட்டது இந்த வெப்பமூட்டபட்ட நிலமானது மரங்கள் இறப்பதை மற்றும் மக்குவதை ஊக்கபடுத்துகின்றன . இதில் ஆச்சர்யம் மரங்கள் மக்கிபோன நிலத்தில் புதிய செடிகள் அதிக அளவில் முளைத்தன. எனவே மரம் அழிந்தாலும் அந்த இடத்தில் மீண்டும் மரம் வளரும் என்பதே உண்மை.  

   ஆனால் வளரத்தான் இடம் இல்லை .

   மேலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பூமி தாண்டிவிட்டால் அதன் பின் நிலபரப்பு முளுவதும் மரம் வளர்த்தாலும் வெப்பநிலயை குறைக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  
  

   மற்றுமொரு தகவல் ஓசோன் ஓட்டையால் கதிர்வீச்சு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மரங்களை அவையும் தன்பங்கிற்க்கு அழிகிக்கின்றன . கொஞ்ச நாளில் இருக்கும் கொஞ்ச மரங்களும் காணாமல் போய் விடும் .
 
  அப்ப எல்லாரும் செவ்வாய் கிரகத்திற்கு கிளம்ப மூட்டை கட்ட தயாராகுங்கள் !!.      
  

Thursday, October 13, 2011

சுற்றுலாத்துறையால் வெப்பமடையும் பூமி



   ஐக்கிய நாடுகளின் சுற்றுசூழல்துறை ஆணயம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுற்றுலாத்துறையால் ஆண்டிற்கு 5 சதவீதம் பசுமைவீடு வாயுக்கள் வெளியிடப்படுகின்றன என்றும். உலக வெப்பமயமாதலில் இந்த வாயுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும்.

   அனைத்து நாடுகளும் இதனை கருத்தில் கொண்டு சுற்றுசூழலை பாதிக்காத வகையில் புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.இல்லையெனில் வெள்ளியிடப்படும் வாயுக்களின் அளவு இரட்டிப்பாக வாய்ப்புள்ளது என்றும்.

   கார்பன்,விமானச்சேவை மூலம் 40 சதவீதமும் , கார் போக்குவரத்து மூலம் 32 சதவீதமும் வெளியிடப்படுகிறது என்றும் .

   ஆஸ்திரியா,ஜெர்மனி,அயர்லேண்ட், போன்ற நாடுகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் திட்டங்களை வகுதுள்ளதாகவும், மற்ற நாடுகளும் இதை பின்பற்றலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறபட்டுள்ளது.

   அது மட்டுமல்லாமல் இந்த வெப்பமயமாதலால் ஏரி , ஆறு போன்ற நன்னீர் பகுதிகளை நேரடியாக பாதிக்கின்றன.

   என்னை பொறுத்தவரை நாம் ஒவ்வொரு அடி முன்னேறும் போதும் இவ் உலகை பத்தடி சேதப்படுத்திக்கொண்டிருக்கிறோம்!

   இவை அனைத்தும் ஏட்டு சுரைக்காயே! என்ன தான் கூட்டம் போட்டாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது !