Pages

Saturday, October 22, 2011

இன்னும் எவ்வளவு நாள் ?


   மரங்கள் தான் உலகில் வெளியிடப்படும் நான்கில் ஒரு பங்கு கார்பனை உறிஞ்சி வெப்பமயமாதலை தடுக்கிறது என்று பள்ளி சிறுவன் கூட கூறுவான். 

  ஆனால் இதற்கு மேல் ?


  புரியவில்லையா ...

   வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க காடுகளை அதிகரித்தால் தான் வெப்பசமநிலை ஏற்படும் . மாறாக காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது .

   விளைவு மரங்கள் எரிக்கபடுவது , இறந்த மரங்கள் மக்குவது போன்ற செயல்பாட்டால் மேலும் கார்பன் டை ஆக்ஸைட் பூமியில் வெளியிடப்படுகிறது .

   இதில் ஒரு நல்ல சேதியும் உள்ளது !

   சிம்பிள் . மரங்கள் மக்குவாதல் அம்மோனியம் வெளியிடப்படுகிறது . இது உரம் என்பதால் மேற்கொண்டு புதிய மரங்களின் வளர்ச்சியை ஊக்கபடுத்துகிறது .

   அட போங்க நம்ம மேற்கொண்டு மரங்களை வளர விட்டால் தானே !. செத்தும் உதவுகிற மரம் எங்கே! செத்தும் கெடுக்கின்ற மனிதன் எங்கே !

   சமீபத்தில் கிடைத்த வேலெரீ ராஸ் என்பவரின் அறிக்கைபடி மரங்கள் வெப்பமயமாதலால் மேற்கொண்டு வளரவே செய்கின்றன . மொத்தம் ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் நிலம் செயற்கையாக வெப்பமூட்டபட்டது இந்த வெப்பமூட்டபட்ட நிலமானது மரங்கள் இறப்பதை மற்றும் மக்குவதை ஊக்கபடுத்துகின்றன . இதில் ஆச்சர்யம் மரங்கள் மக்கிபோன நிலத்தில் புதிய செடிகள் அதிக அளவில் முளைத்தன. எனவே மரம் அழிந்தாலும் அந்த இடத்தில் மீண்டும் மரம் வளரும் என்பதே உண்மை.  

   ஆனால் வளரத்தான் இடம் இல்லை .

   மேலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பூமி தாண்டிவிட்டால் அதன் பின் நிலபரப்பு முளுவதும் மரம் வளர்த்தாலும் வெப்பநிலயை குறைக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  
  

   மற்றுமொரு தகவல் ஓசோன் ஓட்டையால் கதிர்வீச்சு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மரங்களை அவையும் தன்பங்கிற்க்கு அழிகிக்கின்றன . கொஞ்ச நாளில் இருக்கும் கொஞ்ச மரங்களும் காணாமல் போய் விடும் .
 
  அப்ப எல்லாரும் செவ்வாய் கிரகத்திற்கு கிளம்ப மூட்டை கட்ட தயாராகுங்கள் !!.      
  

2 comments:

  1. காற்றை கற்பழிக்கும் மனிதர்கள் என்று எங்கோ படித்த நினைவு, உங்கள் பதிவுக்கு பொருந்துகிறது..

    ReplyDelete
  2. நம் அனைவருக்கும் எண்ணம் ஒன்று தான் நம்மால் இயன்றதை சமூகத்திற்க்கு செய்வோம் . ஒருமித்த எண்ணம் கொண்டவர்களின் கருத்துக்கள் ஒன்றிப்போவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்றெண்ணுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட அந்த //காற்றை கற்பழிக்கும் மனிதர்கள்// படிக்க நானும் ஆவலாக உள்ளேன் .
    நான் கூகிளில் தேடினேன் கிடைக்கவில்லை இருந்தாலும் தங்களுக்கு நினைவு வரும்பொழுது கூறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    நீங்கள் தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்திற்கு என் கனிவான நன்றிகள் .

    ReplyDelete