Pages

Sunday, October 9, 2011

ஆதார்

சுருக்கமாக: 
            120 கோடி மக்களுக்காக 15 ஆயிரம் கோடி செலவில் 2017-ல் முடியக்கூடிய ஒரு பிரம்மாண்டத் திட்டம் !!. மஹாராஷ்ட்ராவில் தொடங்கி இன்று தமிழகத்தில் வளர்ந்துக்கொண்டு இருக்கிறது!

ஆதார்: 
          ஆதார் என்றால் "ஆதாரம்" என்று அர்த்தம்.அது என்ன ஆதாரம் ? அதாவது இந்த திட்டதின்படி உங்களின் ரத்தவகை , கைரேகை, விழித்திரை , புகைப்படம், போன்ற உங்களைப் பற்றிய அடிப்படை  தகவல்கள் சேகரிக்கபட்டு இவை அனைத்தும் 12 இலக்க அடயாள எண் கொண்ட ஒரு அடையாள அட்டையில் சேமித்து வைக்கப்படும்.அதற்க்கென  16 KB  மெமரி சிப் ஒன்று ஆதார் அட்டையுடன் பொருத்தபட்டுள்ளது.
      ஆதார் எண் வாங்க தேவயான ஆவணங்கள், குடும்ப அட்டை நகல்,மின் கட்டண ரசீது ,தொலைபேசி கட்டண ரசீது,வங்கி கணக்கு புத்தகம்,வாக்காளர் அடயாள அட்டை,ஓட்டுநர் உரிமம்,பாஸ்போர்ட்,போன்றவற்றில் எதனும் ஒன்றோ இரண்டோ(முகவரிக்காகவும்,அடயாளசான்றிர்க்காகவும்).

எதற்கு:
   இனி வரும் காலங்களில் ஏறக்குறைய அனைத்து திட்டங்களுக்கும் தேவைகளுக்கும் ஆதார் எண்தான் உங்களது அடயாளம் !. 
 
எந்த வயதில் பெறலாம் :                                                           இந்த திட்டதிற்க்கு வயதுவரம்பே கிடயாது. நேற்று                          
பிறந்த குழந்தை முதற்கொண்டு மூத்தகுடி வரை அனைவரும் வாங்கலாம்(இலவசம் தான்). விண்ணப்பித்த 90ஆவது நாளில் ஆதார் வாசல் தேடிவரும்.

நிறுவனங்கள்:
     ஆதார் எண் வழங்கும் பணியில் இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான நத்தன்நீலேகனி தலமையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா,பாங்க் ஆஃப் பரோடா,இந்தியன் பாங்க்,இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்,டீம் லைஃப் கேர் இண்டியா பிரைவேட் லிமிடட்,ஸ்ரீஷிகாஜ் போன்ற நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன.

சந்தேகம்:       
·         ஆதாரில் உள்ள தகவல்கள் மத்திய அரசின் டேட்டா பேசில் சேமித்து வைக்கப்படும் என்பதால் நம்மை கண்காணிக்க வாய்ப்புஉண்டு!
·         இந்த திட்டத்தின் மூலம் போலிகளை முழுமையாக ஒழிக்க முடியாது என திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் ஆலுவாலியா கருத்து தெரிவித்துள்ளாரே?
அட போங்கய்யா எனக்கு சிம் கார்டு வாங்க ஒரு ப்ரூஃப் ரெடி !!!!!!!!

No comments:

Post a Comment