ஐக்கிய நாடுகளின் சுற்றுசூழல்துறை ஆணயம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுற்றுலாத்துறையால் ஆண்டிற்கு 5 சதவீதம் பசுமைவீடு வாயுக்கள் வெளியிடப்படுகின்றன என்றும். உலக வெப்பமயமாதலில் இந்த வாயுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும்.
அனைத்து நாடுகளும் இதனை கருத்தில் கொண்டு சுற்றுசூழலை பாதிக்காத வகையில்
புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.இல்லையெனில் வெள்ளியிடப்படும் வாயுக்களின்
அளவு இரட்டிப்பாக வாய்ப்புள்ளது என்றும்.
கார்பன்,விமானச்சேவை மூலம் 40 சதவீதமும் , கார் போக்குவரத்து மூலம் 32 சதவீதமும் வெளியிடப்படுகிறது என்றும் .
ஆஸ்திரியா,ஜெர்மனி,அயர்லேண்ட், போன்ற
நாடுகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் திட்டங்களை வகுதுள்ளதாகவும், மற்ற
நாடுகளும் இதை பின்பற்றலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறபட்டுள்ளது.
அது
மட்டுமல்லாமல் இந்த வெப்பமயமாதலால் ஏரி , ஆறு போன்ற நன்னீர் பகுதிகளை நேரடியாக பாதிக்கின்றன.
என்னை
பொறுத்தவரை நாம் ஒவ்வொரு அடி முன்னேறும் போதும் இவ் உலகை பத்தடி
சேதப்படுத்திக்கொண்டிருக்கிறோம்!
இவை
அனைத்தும் ஏட்டு சுரைக்காயே! என்ன தான் கூட்டம் போட்டாலும் திருடனாய் பார்த்து
திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது !
No comments:
Post a Comment