Pages

Monday, October 10, 2011

“கொழுப்பு” வரி



   சுங்க வரி ,காலால் வரி, ஏன் உப்பு வரி கூட உண்டு அது என்னங்க கொழுப்பு வரி ?

  படிக்கவே வித்தியாசமாக உள்ளதே ? உண்மையும் அதுதான். டென்மார்க் நாட்டில் கொழுப்பு சார்ந்த பண்டங்களுக்குவரி விதித்துள்ளனர் !  நாட்டு மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு டென்மார்க் அரசு விதித்துள்ள வரிதான் இது.

   அதாவது கொழுப்பு சத்துக்கள் அதிகமாக உள்ள பால் மற்றும் என்னை சார்ந்த உணவுகளின் மீது இந்த வரி திணிக்கப்பட்டுள்ளது(பீட்ஸா,இறைச்சி போன்றவை).

    உணவில் அடங்கியுள்ள ஒவ்வொரு கிலோ கொழுப்பிற்க்கும் 16 க்ரோனர் வரி அதாவது 2.87 டாலர், நம்ம ஊர் கணக்குப்படி தோராயமாக 135 ரூபாய்(யம்மாடியோவ் !).

    இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அந்நாட்டு மக்கள் ஆயிரகணக்கான டன் அளவிற்க்கு பால்,வெண்ணை,இறைச்சி பொருட்களை வாங்கி குவித்துவிட்டனர்! என்நேரம் வேண்டுமானாலும் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்பதால் இந்த முன்னேற்ப்பாடாம்....

    இந்த வரிவிதிப்பை பற்றி அந்நாட்டு வணிகரான கிறிஸ்டியன் என்பவர் கூறுகையில் “ இந்த வரி விதிப்பு மக்களிடையே எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன். மக்கள் கேக் வேண்டுமென்றால் நிச்சயம் வாங்கதான் போகிறார்கள்.  இப்பொழுது அதிகஅளவில் வாங்குகிறார்கள்  என்றால் அது அவர்களது சேமிப்பையே காட்டுகிறது”  

   உலகிலே முதன்முறையாக நாங்கள் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்! எங்களை பின்பற்றி மற்ற நாடுகளும் இந்த திட்டத்தை சிறு சிறு மாற்றங்களுடன் தொடங்கும் என நினைக்கிறோம் என்கின்றனர் டென்மார்க் நாட்டின் ஆட்சியாளர்கள்!

   என்னை பொறுத்தவரை பணம் இருப்பவர்கள் எந்த விலையானாலும் வாங்கிவிடுவார்கள் !பண்டிகை காலங்களில் ஏழைகள் கூட கேக் போன்றவற்றை வாங்கத்தான் போகிறார்கள். 

  வீணாக வோட்டுக்கு வேட்டு வைத்துக்கொள்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை !!

  வாய கட்டி வயித்த கட்டி சம்பாரிக்கிறதே இதுக்குத்தான் அதுக்கும் வரிய போட்டா என்னய்யா பண்றது !  

  நாங்கல்லாம் போர் அடிச்சாவே ரத யாத்திரை போககக்கூடியவர்கள் . சாப்பாடு என்று வந்துவிட்டால் தொந்தி யாத்திரை நடத்த கூட தயங்க மாட்டோம் என்று இந்தியாவின் சார்பாக டென்மார்க்கிற்கு சொல்லிக்கொள்கிறேன் !         
             

No comments:

Post a Comment