Pages

Saturday, October 15, 2011

ஆதார் சின்னம்


   ஆதார் சின்னம் உருவுவான விதம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

   ஆதார் பெயரும் சின்னமும் UIDAI ஆல் உருவாக்கபட்டது. ஆதாருக்காக உருவாக்கபட்ட சின்னமானது, சூரியன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலும் அதில் கைரேகை உள்ளவாரும் வடிவமைக்கபட்டுள்ளது.கிட்டதட்ட ஆதாரின் குறிக்கோள்களை வெளிப்படுத்துவாதல் ஏற்றுக்கொள்ளபட்டது.

 போட்டி:

    பிப் 2010-ல் ஆதார் சின்னதிற்கான இந்திய அளவிலான போட்டி பற்றிய அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான ஒரு சில வாரங்களில் 2000க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் இந்தியா முளுவதிலிருந்தும் வந்து குவிந்தன. 
             
   ஆதாரின் நோக்கங்களையும்,குறிக்கோள்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.
பெறப்பட்ட சின்னங்கள் விழிப்புணர்வு மற்றும் தகவல் குழுமத்தால் தேர்ந்தெடுக்கபட்டது. 

   மிகவும் கடுமையான மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு 5 பேர் இறுதி கட்ட பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மிச்செயல் ஃபோளி
சஃப்ரன் பிராண்ட் கண்சல்டண்ட்ஸ்
சுதிர் ஜான் ஹோரோ
ஜெயந்த் ஜெய்ன் அண்ட் மஹேந்திர குமார்
அடுள் s பாண்டே

   இறுதியில் புனேவைசேர்ந்த   அடுள் s பாண்டே என்பவர் வெற்றிப்பெற்றவராக அறிவிக்கபட்டார். வெற்றி பெற்றவருக்கு  ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கபட்டது. மீதமுள்ள 4 பேருக்கும் தலா பத்து ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.


   இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், ஆதாருக்கு பங்களித்கதில் நான் பெருமைப்படுகிறேன் என அடுள் s பாண்டே கூறினார் .   நன்றி http://uidai.gov.in/
      

No comments:

Post a Comment