Pages

Wednesday, October 26, 2011

ஏர்போர்ட்

     இந்தியாவில் உள்ள முக்கியமான விமானநிலையங்களில் வாகனங்களை நிறுத்த  வசூலிக்கும் வாடகையை பற்றி ஒரு தொகுப்பு
    மொத்தம்ஆறு விமான நிலையங்களை பற்றி இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

 1.மும்பை சத்ரபதி சிவாஜி விமானநிலையம்:

    மொத்தமாக 880 கார் நிறுத்தலாம், 500 இருசக்கர வாகனங்கள் வரை நிறுத்தலாம்.
   அரைமணிக்கு கார் ஒன்றிற்க்கு 60 ரூபாய் வசூலிக்கபடுகிறது.
இரண்டுமணி நேரம் வரை 130 ரூபாயும் நாள் முழுவதும் என்றால் 750 ரூபாயும் வசூலிக்கபடுகிறது.மாதம் முளுவதுக்கும் பாஸ் வசதி கூட உள்ளது 10 ஆயிரம் ரூபாய் மட்டும்.
   இருசக்கர வாகனங்களுக்கு நான்கு மணிநேரத்திற்க்கு 15 ரூபாயும் வசூலிக்கபடுகிறது.

2.டெல்லி இந்திரா காந்தி விமானநிலயம்:

    மொத்தமாக 1500 கார் நிறுத்தலாம் பொது மற்றும் ஸ்பெஷல் என இருவகை உள்ளது, பொது பிரிவில் அரை மணிக்கு 50 ரூபாயும்,ஸ்பெஷலில் 70 ரூபாயும் வசூலிக்கபடுகிறது. நாள் ஒன்றுக்கு 600 மற்றும் 900 என கட்டணமும் ,மாத பாஸ் 16 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் (பொது மற்றும் ஸ்பெஷல்) என்றளவிலும் உள்ளது.

3.பெங்களூரு சர்வதேச விமானநிலயம்:

  மொத்தமாக 2000 கார் நிறுத்தலாம் . இரண்டு மணிநேரம் வரை 60 ரூபாய் நாளொன்றுக்கு 720 ரூபாய் , மாத பாஸ் 5 ஆயிரம் ரூபாய்.
  இருசக்கர வாகனங்களுக்கு  ஒவ்வொரு இரண்டுமணி நேரத்திற்கும் 20 ரூபாய்.

4.சென்னை சர்வதேச விமானநிலயம் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் விமானநிலையம், கொல்கத்தா:

  சென்னையில் 600 கார் நிறுத்தும் அளவுக்கு வசதியும், கொல்கத்தாவில் 400 கார் நிறுத்தும் அளவுக்கும் வசதி உள்ளது.
  கொல்கத்தாவை பொறுத்தவரையில் 4 மணி நேரத்திற்கு 60 ரூபாயும், நாள் ஒன்றுக்கு 360 ரூபாயும் வசூலிக்கபடுகிறது. சென்னையிலும் கிட்டதட்ட இதே தான். பிரிமியம் நிறுத்ததில் மட்டும் 4 மணி நேரத்திற்க்கு 100 ரூபாய்.
  இரண்டு விமானநிலையங்களிலுமே மாத பாஸ் நோ(கிடையாது).
  இரு சக்கர வாகனங்களுக்கு 4 மணி நேரத்திற்கு 15 ரூபாய்.

5.ராஜிவ் காந்தி சர்வதேச விமானநிலயம், ஹைத்ரபாத்:

  3 ஆயிரத்திற்க்கும் அதிகமான கார் நிறுத்தும் வசதி. அரை மணிக்கு 50 ரூபாய், 1 மணி நேரத்திற்க்கு 80 ரூபாய் நாள் ஒன்றுக்கு 300 ரூபாய். மாத பாஸ் இல்லை.
  இரு சக்கர வாகனங்களுக்கு 2 மணி நேரத்திற்க்கு 20 ரூபாய் நாள் ஒன்றிற்கு 100 ரூபாய்.

(குறிப்பு : ஏறக்குறைய அனைத்து விமானநிலையங்களிலுமே விரிவாக்க பணிகள் நடை பெறுவதால் கட்டண விகிதங்கள் ஏறலாம்! இறங்கலாம்!)

                      “புவர் இந்தியா”..........                           
       

Saturday, October 22, 2011

இன்னும் எவ்வளவு நாள் ?


   மரங்கள் தான் உலகில் வெளியிடப்படும் நான்கில் ஒரு பங்கு கார்பனை உறிஞ்சி வெப்பமயமாதலை தடுக்கிறது என்று பள்ளி சிறுவன் கூட கூறுவான். 

  ஆனால் இதற்கு மேல் ?


  புரியவில்லையா ...

   வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க காடுகளை அதிகரித்தால் தான் வெப்பசமநிலை ஏற்படும் . மாறாக காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது .

   விளைவு மரங்கள் எரிக்கபடுவது , இறந்த மரங்கள் மக்குவது போன்ற செயல்பாட்டால் மேலும் கார்பன் டை ஆக்ஸைட் பூமியில் வெளியிடப்படுகிறது .

   இதில் ஒரு நல்ல சேதியும் உள்ளது !

   சிம்பிள் . மரங்கள் மக்குவாதல் அம்மோனியம் வெளியிடப்படுகிறது . இது உரம் என்பதால் மேற்கொண்டு புதிய மரங்களின் வளர்ச்சியை ஊக்கபடுத்துகிறது .

   அட போங்க நம்ம மேற்கொண்டு மரங்களை வளர விட்டால் தானே !. செத்தும் உதவுகிற மரம் எங்கே! செத்தும் கெடுக்கின்ற மனிதன் எங்கே !

   சமீபத்தில் கிடைத்த வேலெரீ ராஸ் என்பவரின் அறிக்கைபடி மரங்கள் வெப்பமயமாதலால் மேற்கொண்டு வளரவே செய்கின்றன . மொத்தம் ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் நிலம் செயற்கையாக வெப்பமூட்டபட்டது இந்த வெப்பமூட்டபட்ட நிலமானது மரங்கள் இறப்பதை மற்றும் மக்குவதை ஊக்கபடுத்துகின்றன . இதில் ஆச்சர்யம் மரங்கள் மக்கிபோன நிலத்தில் புதிய செடிகள் அதிக அளவில் முளைத்தன. எனவே மரம் அழிந்தாலும் அந்த இடத்தில் மீண்டும் மரம் வளரும் என்பதே உண்மை.  

   ஆனால் வளரத்தான் இடம் இல்லை .

   மேலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பூமி தாண்டிவிட்டால் அதன் பின் நிலபரப்பு முளுவதும் மரம் வளர்த்தாலும் வெப்பநிலயை குறைக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  
  

   மற்றுமொரு தகவல் ஓசோன் ஓட்டையால் கதிர்வீச்சு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மரங்களை அவையும் தன்பங்கிற்க்கு அழிகிக்கின்றன . கொஞ்ச நாளில் இருக்கும் கொஞ்ச மரங்களும் காணாமல் போய் விடும் .
 
  அப்ப எல்லாரும் செவ்வாய் கிரகத்திற்கு கிளம்ப மூட்டை கட்ட தயாராகுங்கள் !!.      
  

Tuesday, October 18, 2011

இந்த பொழப்புக்கு


   இன்று காலை மணி 10 இருக்கும் . நான் எனது அலுவலகத்திற்க்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன் ஜன்னல் அருகில் இருக்கை எனவே எல்லாரையும் போல வேடிக்கை தாங்க பார்த்துக்கொண்டிருந்தேன்.

   கிரிஷ்ண ராஜ புரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்தது.அப்பொழுது வெளியில் நான் பார்த்த சம்பவம் ஒன்று.

   பின்னால் இருந்து வந்த ஒரு ஆட்டோ சட்டென்று அங்கு நின்றது. எத்துணை பேர் இதனை கவனித்தார்கள் என்று தெரியவில்லை.நான் என்னவோ அந்த ஆட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

   60 வயது மதிக்கதக்க ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.நல்ல மெலிந்த தேகம்,பின் இருக்கையில் அம்ர்ந்திருப்பவரை (அதாங்க சவாரி) பார்த்து கையெடுத்து கும்பிட்டார், ஆச்சர்யம்!

    
   யார் அந்த சவாரி என்பதை பார்க்க எனக்கு ஒரே ஆவல், ஆனால் என் பார்வைக்கு அந்த சவாரி அகப்பட வில்லை .

   சட்டென்று அந்த முதியவரை பளார் என்று அறைந்தான் பின்னிருக்கையில் இருந்தவன்.அந்த சவாரியின் வெள்ளை சட்டை மட்டும் எனக்கு தெரிந்தது . எனக்கு சட்டென்று கோபம் வந்தது . என்னதான் நடக்கின்றது என்று உற்று நோக்கினேன்.

   அந்த முதியவர் இப்பொழுது தனது சட்டை பையில் இருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து காண்பித்தார்,மீண்டும் கையெடுத்து கும்பிட்டார், இப்பொழுது அந்தசவாரி ஏதோ சொல்லி அவரை செல்ல சொல்லி தள்ளினார் இம்முறை கையில் தொலைபேசி இருந்தது. சட்டென்று அந்த ஆட்டோ கிளம்பியது.

   ஒரு நிமிடத்திற்குள் நடந்த இந்த சம்பவம் என்னை பலவித கேள்விகளுக்கு உள்ளாக்கியது.

   மீண்டும் அந்த ஆட்டோவை பார்க்க முடியுமா ? யார் அந்த சவாரி ?

   நான் அதே பாதையில் செல்லும் ஒவ்வொரு ஆட்டோவையும் பார்த்தவண்ணம் பயணித்தேன். சிறிது நேரத்தில் காக்கி பூட்ஸ் போட்ட ஒரு கால் ஆட்டோ வின் பின்னிருக்கை வழியே வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

   ஆட்டோ எனக்கு முளுமையாக தெரிய சில நேரம் பிடித்தது. முதல் வேலையாக ஓட்டுநர் இருக்கையை நோக்கினேன்.

     ............அதே முதியவர் !

பின்னிருக்கையை நோக்கினேன் அதே வெள்ளை சட்டை !

       ......கையில் செல்போன் !

       .......காலில் காக்கி பூட்ஸ் !

       ......காக்கி பேன்ட் !

மவுனம் தான் என்னுடைய பதில் (@!#$%^&*!@#$%^&*)........................                            
   


    

Monday, October 17, 2011

ஆதார் கட்டுரை (கழுகு)


                           ஆதார் 
 
ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண்,அது இந்திய அரசால் இந்தியர்களுக்கு வழங்கப்படும்.

இந்த எண் உங்களுடைய மற்றும் உங்களின் முகவரிக்கான அடையாளமாக இந்தியா முளுவதும் செல்லக்கூடியது.

ஆதார் பெயர்க்காரணம்:

 அது என்ன ஆதார் ? அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்ட தட்ட ஒரே அர்தத்துடனும், உச்சரிக்கவும் எளியதாக உள்ளதால் உருவானது தான் இந்த ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் என்று அர்த்தம். 
    
ஆதாரில் அடங்கியுள்ளவை:

 இதில்  16kb மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அதில் உங்களது ரத்த வகை, விழி அமைப்பு,இடது கை மற்றும் வலுது கை விரல்களின் ரேகை, முகவரி, போன்ற உங்களின் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து வைக்கப்படும்.( ஆதார் பெயர்க்காரணம் இப்பொழுது புரியும் என நம்புகிறேன்)

தனித்துவம்:

 இந்த 12 இலக்க எண் உங்களுக்கே உரித்தானது. ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால் வாழ்நாள் முளுவதும் அது உங்களுடையதே வேறு எவருக்கும் இந்த எண் வழங்கபட மாட்டா.

இது ஒரு ரேண்டம் எண், இந்த எண் நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தரப்படும் .

எதற்க்கெல்லாம் பயன்படுத்தலாம்:

இந்த ஆதாரை பயன்படுத்தி வங்கியில் கணக்கு துவங்கலாம், புதிய தொலைப்பேசி இணைப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளைப் பெறுவதர்க்காகவும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.

எப்படி வாங்குவது:

கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் முகாம் உள்ளது எனவே தத்தம் மாவட்ட முகாம்களுக்கு கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

 1.புகைப்பட அடையாள சான்று ( பான் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)
2.முகவரிக்கான சான்று (மிண் கட்டண ரசீது ,தொலைபேசி ரசீது, குடும்ப அட்டை,வீட்டு வரி ரசீது போன்றவை )

நமது வங்கி கணக்கு தொடர்பான அடிப்படை விடயங்களும் தரவேண்டும்(அவரவர் விருப்பத்தை பொருத்து).  
 
அங்கு சென்றவுடன் உங்களின் ஆவணங்கள் சரிபார்க்கபட்டு பதியப்படும். பின்பு உங்களின் விழி அமைப்பு, கைரேகை, புகைப்படம் போன்றவை பதியப்படும் அவ்வளவுதான். உங்களுக்கான தற்காலிக எண் வழங்கபடும்(ஒரு அத்தாட்சி சான்று).

தற்காலிக எண் :

அதாவது நீங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 60 -90 நாட்களுக்குள் ஆதார் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

இல்லையெனில் இந்த தற்காலிக என்னை வைத்து உங்களின் ஆதார் விவரங்களை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த எண் 28 இலக்கங்களை கொண்டது . முதல் 14 இலக்கம் அத்தாட்சி எண் மீதமுள்ள 14 இலக்கம் நீங்கள் பதிந்த தேதி மற்றும் நேரத்தை குறிப்பதாகும்.
     
வயது வரம்பு உண்டா:

இந்த திட்டதிற்கு வயது வரம்பே கிடயாது . பிறந்த குழந்தை முதல் மூத்த குடி வரை அனைவரும் பெறலாம் .

இன்னாப்பா காமெடி பண்ற ? பொறந்த குழந்தைக்கு எதுயா டிரைவிங் லைசென்ஸ் ?

பொறுங்கள் குடும்பதில் ஒருவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தால் போதும் அனைவரும் அதை வைத்து பதியலாம்.
 (கைரேகை,விழியமைப்பு,புகைப்படம் போன்றவை போலிகளை அண்டவிடாது என்பதால் தான் இந்த வசதி)

குழந்தைகளுக்கு கைரேகை வளர சில ஆண்டுகள் ஆகுமே?

 அதற்க்குதான் விழித்திரையும் பதியப்படுகிறது.

செலவு :

இந்த திட்டதிற்கு முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது எனவே இது ஒரு இலவச திட்டம்.

ஆதார் சந்தேகங்களுக்கு :

அழையுங்கள் = 1800-180-1947
ஃபேக்ஸ் = 080-2353 1947
கடிதங்களுக்கு = தபால் பெட்டி எண் 1947, GPO பெங்களூர்-560001
மின்னஞ்சல் = help@uidai.gov.in

நிறுவனங்கள்:

     ஆதார் எண் வழங்கும் பணியில் இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான நத்தன்நீலேகனி தலமையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா,பாங்க் ஆஃப் பரோடா,இந்தியன் பாங்க்,இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்,டீம் லைஃப் கேர் இண்டியா பிரைவேட் லிமிடட்,ஸ்ரீஷிகாஜ் போன்ற நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை கார்வி என்ற நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. நம்முடைய விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெறப்படுகின்றன. 

ஆதார் பற்றிய பொதுவான சந்தேகங்களும் அதற்கான பதில்களும்:

*ஆதார் என்பது குடும்ப அட்டையை போல்,வாக்காளர் அடையாள அட்டையை போல் மற்றுமொரு அட்டையா? .

  - கிடையவே கிடையாது ஆதார் என்பது 12 இலக்க எண்.மற்றவற்றில் எளிதாக போலி என்று ஒன்று உருவாக்கலாம் இதில் முடியாது.

* குடும்பத்திற்கு ஒன்று இருந்தால் போதுமா?

  - இது ஒவ்வொரு தனி மனிதருக்கும் வாங்க வேண்டும்.

*இது இந்திய குடிமகன்/மகள் என்பதற்கா சான்றா?

   -  கிடையவே கிடையாது இது உங்களுக்கான அடியாளம். 
பிறநாட்டவரும் பெறலாம்(நிபந்தனைகளுக்கு உட்பட்டு )

* கண்டிப்பாக வாங்கவேண்டுமா?.

   - இல்லை, விருப்பபடுபவர்களுக்கு மட்டும்.

*ஒருவர் பல ஆதார் வாங்கலாமா?

   - ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே .

*எனக்கு ஃபேன்சி நம்பர் வேணும்

   - இது செல்போன் இணைப்பு எண் கிடயாது.

*பாஸ்போர்ட்,குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

    - அவற்றை வாங்க வேண்டுமானால் பயன்படுத்தலாம். மாற்றாக பயன்படுத்த இயலாது.   
             
சர்ச்சைகள்:

1.இந்த திட்டதிற்கான செலவு 3ஆயிரம் கோடி என்றார்கள் ! ஆனால் உண்மை என்னவென்றால் இது வெறும் 10 கோடி பேருக்கு மட்டுமே!  இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த 15 ஆயிரம் கோடி தேவைப்படும் 2017-ல் தான் முடியும்( ஒரு வேல அடுத்த 2g யோ?)

2.நம்முடைய அனைத்து தகவல்களும் அரசாங்க டேட்டா பேஸில் பதிவு செய்யபட்டுள்ளதால் நம்மை பாதுகாப்பு என்ற பேரில் கண்காணிக்க வாய்ப்பு உண்டு!

3.இந்த திட்டத்தின் மூலம் போலிகளை மூளுமையாக ஒழிக்க முடியாது என மான்டெக் சிங் அலுவாலியா கருத்து தெரிவிதுள்ளாரே.

4.இந்தற்கான மென்பொருள் வெளிநாட்டில் இருந்து வாங்கபட்டுள்ளதாகவும் நம்முடைய தகவல்களை அவர்கள் எளிதில் பயன்படுத்தலாம் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.  

பயோ –சிப்:

*இதையும் தாண்டி .பயோ –சிப் (rfid) அதாவது Radio Frequency Identification இந்த முறை மூலம் ஆதார் அட்டை தொலைந்து போனாலும்,சிப் உடலினுள் பொருத்தபடுவதால் நமக்கு பிரச்சனை இல்லை.அனைத்து நாடுகளிலும் பரவலாக அறியப்பட்ட இந்த முறை இந்தியாவில் நுழைய வெகு காலம் பிடிக்காது..( கூடுதல் தகவல் தந்த மணிகண்டன் மற்றும் செந்தில் குமாருக்கு நன்றி)     
                                           

Sunday, October 16, 2011

ஆதாரின் வரலாறு


ஆதாரின் வரலாறு :

     ஆதாரின் அடிப்படை கருத்து 2006 ல் உருவானது. “வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக” என்ற மேற்க்கோளுடன் மார்ச் 03, 2006 ல் இந்த திட்டம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிவிக்கபட்டது .

    இந்த திட்டம் தேசிய தகவல் கழகத்தால் ஓராண்டு பல்வேறு கட்ட பரிசீலனைக்கு உட்பட்டது. அதே நேரம் 2006 ஜூலை யில் ஆதாரை செம்மை படுத்துவதற்காக மேலும் ஒரு கமிட்டி நிர்ணயிக்கபட்டது.

   திட்டக்குழுவின் வழிநடத்துனர் டாக்டர்.அரவிந்த் விர்மானி என்பவரால் ஆதார் வழிநடத்தபட்டது. ஆதாரின் அடிப்படை கொள்கைகள் 2007ல் விப்ரோ நிறுவனத்தால் கமிட்டியிடம் சமர்பிக்கபட்டது.

    இந்த கமிட்டி கிட்டதட்ட 7 முறை கூடியது .அமைச்சர்கள் கொண்ட கமிட்டி 4 முறைக்கு மேல் கூடியது.

பிரதம மந்திரி குழு :

    ஜூலை 30 , 2009ல் பிரதம மந்திரி குழு அமைக்கபட்டது. இதன் தலைவராக நத்தன் நீலகேனி பதவியேற்றுக்கொண்டார்( இன்போஸிஸ் நிறுவனத்தை தோற்றுருவித்தவர்களில் ஒருவர் ).இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    முதல் முறை 2009 ஆகஸ்ட் ல் கூடியது.அதன் பிறகு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும் இந்த குழு கூடி பேச்சுவார்த்தை நடத்தும்.

  கமிட்டி:

     UIDAI தலைமையகம் டெல்லியில் உள்ளது . இது 2009ல் ஆதாருக்காகவே உருவாக்கப்பட்டு திட்டக்குழுவுடன் இணைக்கப்பட்டது . தலைவராக நத்தன் நீலகேனி உள்ளார், இயக்குனராக ஆர்‌எஸ்.ஷர்மா உள்ளார். 

     மேலும் 21 துணை இயக்குனர்கள்,15 இணை இயக்குனர்கள்,15 செக்சன் ஆபிசர்கள்,15 உதவியாளர்கள்,நிதி,தொழில்நுட்பம் என   ஒட்டுமொத்தமாக 146 பேர் உள்ளனர்.