Pages

Monday, April 16, 2012

சினிமா என்றால் என்ன ?

வெறும் மூன்று மணி நேரம் என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் செல்லும் ரசிகன் பார்வையில் சினிமா என்பது பொழுது போக்கு, அவன் முதல் வருடம் அசினையும், அடுத்த வருடம் த்ரிஷாவையும் ரசிப்பான். நம்மவர்கள் நிறைய பேர் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் சினிமாவை ஒரு கலை என்று நினைப்பவர்களுக்கு அது ஒரு வரம்.ஆனால் அது சிலர் மட்டுமே. அதிலும் சில படங்களே அந்த வரம் என்ற உணர்வை தருகின்றன.

உதாரணம் வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால், வாகை சூட வா, ஆரண்ய காண்டம், அழகர் சாமியின் குதிரை, தோனி இன்னும் பல. இவற்றை நாம் கொண்டாட வேண்டும்.

இந்த வார விகடனில் செழியன் அவர்கள் Mohsen Makhmalbaf அவர்களுடன் தான் பேசியதை பற்றி எழுதி உள்ளார். ஒவ்வொரு சினிமா ரசிகனும் படிக்க வேண்டியது அது. அது தான் சினிமா. ஆனால் இங்கே நாம் செய்வது கலாச்சார கொலை.

இங்கே கவர்ச்சி காட்டினால் தான் படம் ஓடும் என்று பெரும்பாலான திரைத் துறையினர் நினைக்கிறார்கள்/திணிக்கிறார்கள். அவர்களை தான் நாம் பெரிய இயக்குனர்கள் என்று சொல்கிறோம். எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் என்ன கவர்ச்சி இருந்தது? அதை மக்கள் ரசிக்கவில்லையா?. நிறைய படங்கள் ரசிகர்கள் மீது திணிக்கப்படுகிறது. இது உனக்கான படம், நீ இதைத் தான் பார்க்க வேண்டும். அத்தோடு இன்றைய டிவிக்கள் ஒரு மோசமான படத்தை கூட விளம்பரம் மூலம் நல்லா இருக்கு என்று நம்ப வைக்கின்றன. (இன்னும் இதை நம்புபவர்கள் இருக்கிறார்கள்).

உடனே உலகப் படம் என்றால் அது வேறு மொழி படம் தான் என்று எண்ண வேண்டாம். நம்மவர்களே அதை தருகிறார்கள். உதாரணம் - வெங்கயம், ஆரண்ய காண்டம்.

எப்படியான சினிமா எடுக்கப்படவேண்டும் ?

எப்படியும் வேண்டாம் அது சினிமாவாக இருந்தால் போதும். ஆம் கதை, அதற்கு தேவையான காட்சிகள் மட்டுமே. (இன்றைய படங்களை எண்ணிப் பாருங்கள், நான் சொல்வது புரியும் )

நடிகன் என்றால் யார்?

நம்மவர்களுக்கு நடிகன் தான் படமே, முதலில் இதை உடைக்க வேண்டும். கதை தான் படத்தின் ஹீரோவே, அது தான் இங்கே சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தளபதி, தல. இங்கே ஜேம்ஸ் கேமரூன் சொன்னதாக சொன்ன ஒன்று தான் சொல்ல வேண்டும்,

உங்கள் அடுத்த படம் எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு அவர் பதில், 95 % முடிந்து விட்டது, ஷூட்டிங் மட்டுமே பாக்கி. அதாவது கதை, திரைக்கதை தயாரித்தல் தான் படமே. மற்றபடி நடிப்பவர்கள் கதாபாத்திரம் மட்டுமே.

ஒரு நல்ல சினிமாவுக்கு வேண்டியது கதைக்கு ஏற்ற நடிகன், நடிகனுக்கு ஏற்ற கதை அல்ல.

ரசிகனின் எல்லை என்ன?

எல்லை எதுவும் வைத்து இருந்தால் அவன் ரசிகனே இல்லை.நிறைய எதிர்பார்க்க வேண்டும்.

ரசிகன் எப்படி தொண்டனாய் மாறுகிறான்..?

தான் ரியலில் செய்ய முடியாததை, ரீலில் ஒருவர் செய்வதை பார்க்கும் போது. ஆனால் அது ரீலில் மட்டுமே சாத்தியம் என்று புரிந்தும். ஆனால் இந்த நிலை இன்று மாறி வருகிறது.

அரசியல் முடிச்சினை எப்போது ஒரு நடிகன் போடுகிறான்...?

தன் ரசிகன் ஒரு முட்டாள் என்று உணரும் போது. (இன்றைய சூழல் இது, எம்.ஜி.ஆர் பல ஆண்டு ஒரு கட்சியில் இருந்து பின்னர் தலைவர் ஆனவர், இன்றைய சூழலிலும் சிலர் அப்படி இருக்கிறார்கள், ஆனால் தலைவர் ஆக முடியவில்லை)
பிரபு கிருஷ்ணா