Pages

Friday, August 9, 2013

தலைவா விமர்சனம்

விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சத்யராஜ்,சந்தானம் நடிப்பில் இன்று பல பிரச்சனைகளுக்கு இடையில் வெளியாகியிருக்கும் படம் தான் தலைவா.
தலைவா விமர்சனம் :

Friday, August 2, 2013

The Conjuring - திரைப்படம்Saw, Insidious போன்ற திரைப்படங்களை இயக்கிய James van ன் அடுத்த படைப்பு "The Conjuring".

நிஜ வாழ்வில் நடந்த சம்பவத்தை முழுக்க முழுக்க பயம் என்ற ஒருவார்த்தையையே மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள். கதை என்ற வகையில் புதியதாக ஏதும் இல்லை என்றாலும், படத்தை present செய்திருக்கும் விதம் அபாரம்.

நடிப்பு, கேமரா, மியூசிக் மற்றும் இயக்குனர் james தான் படத்தின் கதாநாயகர்கள் !. நீண்ட நாட்களாக ஒரு பேய் படம் பார்க்க வேண்டுமென காத்திருப்போரும், மொக்கை ஹாலிவூட் ஆக்சன் படங்கள் பார்த்து சளித்திருப்போருக்கும் இந்த படம் ஒரு நல்ல ட்ரீட் !


Friday, July 26, 2013

My Next Short Film "Credit Card"
Starring: Rohit, Surya Prakash, Raj, Prakash & Prakash

Editing & Camera:  Prabu Krishna

Designing and Asst Direction: Dilip

Screenplay, Direction: Surya Prakash


Friday, July 19, 2013

மரியான் விமர்சனம்

தனுஷ், பார்வதி மேனன், சலிம்குமார், ஜெகன், அப்புக்குட்டி நடிப்பில் எழுதி இயக்கி இருப்பவர்  பரத்பாலா.வந்தேமாதரம் புகழ் பரத்பாலாவின் இரண்டாவது படம், தமிழில் முதல் படம். இசை ஏ ஆர் ரஹ்மான்,ஒளிப்பதிவு மார்க் கானிக்ஸ் .தென் தமிழ்நாட்டில் வாழும் மீனவர் மரியான், அவரது காதலி பனிமலர். யாருக்கும் அடங்காத அதேசமயம் மீன்பிடிப்பத்தில் வல்லவரான தனுஷ் ஒரு டெம்ப்ளேட் சவுத் இண்டியன் சண்டியர், கூடவே ரெண்டு தோஸ்த்து கேரக்டர் (அப்புக்குட்டி மற்றும் இமான் ). தனுஷை ஒருதலையாக காதலிக்கும் நம்ம பருத்திவீரன் ப்ரியாமணி டைப் ஹீரோயின் பார்வதி.

ஒருவழியாக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கும் போது கொடுத்த கடனுக்காக உன்மகளை மணமுடித்து வை என்று தனுஷிடம் அடிவாங்குவதற்காகவே பார்வதியை பெண் கேட்டு செல்லும் வில்லன் ! அப்புறம் என்ன வந்தவர் அடிவாங்கிட்டு கொடுத்த பணத்தை நாளைக்குள் திரும்பி தரவேண்டும் என சொல்ல, ஒரு வருட ஊதியத்தை முன்பணமாக பெற்று கடனை அடைத்துவிட்டு பார்வதியை நான் தான் மணமுடிப்பேன் என்று கூறிவிட்டு 2 வருட கான்ட்ரக்டில் சூடானில் உள்ள ஆயில் கம்பனியில் வேலைக்கு சேற்கிறார் தனுஷ் !

2 வருட  கான்ட்ரக்ட் முடித்து திரும்பும் வழியில் அந்நாட்டு தீவிரவாதிகளால் கடத்தப்படும் தனுஷ்,ஜெகன், பணத்திற்காக பிணைய கைதிகளாக வைக்கபடுகின்றனர்.  வேலை செய்த கம்பனி தீவிரவாதிகள் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் பிணைய கைதிகளை கொன்றுவிடுவது வழக்கம். தனுஷ் மற்றும் ஜெகன் வேலை செய்த கம்பனி பணம் தறமறுக்க அதன் பின்பு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

இசை மற்றும் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். டெக்னிக்கலாக வெல் பில்டட் படம்னு சொல்லலாம்.

 பரத்பாலா முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும் பின்பாதியில் பாசாகிவிட்டார். தனுஷ் பார்வதியை உதைக்கும் சீன், கடலுக்கடியில் மீன்பிடிப்பது, சிறுத்தைகளுக்கிடையில் மாட்டிகொள்ளும்போது கொடுக்கும் எக்ஸ்பிரசன், தீவிரவாத கும்பலிடம் சிக்கி தவிப்பது என மீண்டும் ஒருமுறை தன்னை சிறந்த நடிகராக வெளிகாட்டியிருக்கிறார்.

பூ படத்தில் பார்த்த பார்வதியா இது ! அழகாக இருக்கிறார், சிறந்த நடிப்பு. நிச்சயம்  ஒரு ரவுண்டு வருவார்.

படத்துல கமெர்சியல் எலிமண்ட்ஸ் ரொம்ப ரொம்ப குறைவு, மணிரத்தினம் டைப் மிகவும் மெதுவாக போகும். இதே படத்த ஹாலிவூட்லையோ, இல்ல வேற மொழியிலையோ எடுத்திருந்தா
" ச்ச  சூப்பர்யா இது மாறி நம்ம ஊர்ல எங்கயா வர போகுதுனு" சொல்லிட்டு போவோம் !!
Thursday, July 11, 2013

Bhaag Milkha Bhaag திரைப்படம்

நேற்று இரவு 7.30 க்கு சினிமாக்சில் பார்த்தேன். அருமையான திரைப்படம், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம்.மில்கா சிங் என்ற இந்திய தடகள நாயகனின் வாழ்க்கையை தழுவி எடுக்கபட்டிருக்கும் படம் .1950 - 60 களில் பயினிக்கிறது, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து தப்பி வருகிறார் மில்கா ! அவரது மொத்த குடும்பமும் கொல்லபடுகிறார்கள், அக்காவின் குடும்பத்தை தவிர. பாகிஸ்தானிலிருந்து தப்பியவர்களின் முகாம், துயரம், சிறுவயது மில்காவின் மனப்போராட்டம் என அத்தனையும் வலிகள். அதன் பின்பு அவர் வாழ்க்கை, இந்திய இராணுவம், காதல், தடகளம் பதக்கங்கள் என மூன்று மணிநேரம் காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.

முழு படத்தையும் தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் பர்ஹான் அக்தர், கடுமையான உழைப்பு தெரிகிறது, தடகளதிற்கு ஏற்ற உடற்கட்டு , குறிப்பாக ஒட்ட பந்தையத்தில் நிஜமாகவே மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறார், அதிவேகமாக ! இவர் நடிக்க வில்லை மில்கா சிங்காகவே மாறியிருக்கிறார் !

காட்சிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு பெரிய பலம், இயக்குனர் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டர் பிரசூன் ஜோஷி இருவரும் இந்த படத்தை சீன் பை சீன் செதுக்கி இருக்கிறார்கள்.

மறக்கப்பட்ட இந்திய தடகள நாயகனான மில்கா சிங்கின் வாழ்கையை சித்தரிக்கும் இந்தப்படம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று.Saturday, July 6, 2013

Singam II Movie Review


After the grand success of singam in Tamil, Kannada and Hindi. Part 2 of Singam now hit the screens with lot of hope in Suriya and Sun Pictures. Sun pictures already scaring peoples with “Vaangale” “oru Payalum Thappa mudiyathu” promotions. Will this movie able to break the unwritten fate of Part 2 failure cinemas in kollywood ? Stay on for the review.

Plot:

Suriya a resigned police officer as per Part 1, working as a NCC master in a school at Tutcorin , but he secretly spying for government in smuggling case happening at Tutcorin Harbor , he took back the khaki cap at a fine day and starts jumping, shouting, punching, chasing all those 4 villains. Then you may ask what about Hansika, Anushka and all.

Ya they are all there, Hansika, Anushka shares 10 min of screen and 1,2 duets respectively. Santhanam took 10 minutes, and others appeared once in a screen to say Present sir. In a 2 hours 47 minutes movie almost 90 % suriya only coming, going, fighting, doing. If u still want detailed story please go to theatre.

What Worked:

It’s one man show only, Suriya ‘s dedication in acting keeps the story ticking till end, Director hari did a good job in screen play, Camera and Editing is crispier.

What Didn’t :

Dsp’s music isn’t that much good, he just used singam part 1 music that’s it, what DSP less salary ? The amount of Noises, Punch dialogues, Shoutings, Fightings, Jumpings in the movie makes you feel that world is too peace once you came out of the theatre. If some other did this instead of suriya people would have thought those actions scenes are comedy scenes. As like all commercial movies this one also has no Logic point, what is logic, half Kg Logic is 100 rs ? hari may ask. Also what is the point of jumping 5 feet high whenever hero going to chase villain. Even hero knows the South African street route better than their cops, also ‘this may Indian Cop style’ dialogues are too too much.

Overall:

Ya there will be a remake ready for Ajay Devgan and Sudeep we think, because you can watch this movie only for Suriya and Action Sequences. We give 3.2 stars for this complete 3 hours action package.

Thursday, June 6, 2013

Eligible Bachelor

அதிகாலை 7 மணியளவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த பொழுது என் துயல் கலைக்கும் விதமாக என் செல்போன் Girl Just let be a Man என்று கத்தி கொண்டிருந்தது, யாருடா இந்த நள்ளிரவில் போன் பன்றாங்கனு பாத்தா அது என் பாட்டி.

என்ன இந்த நேரத்தில் என்று விசாரித்தால், நீங்க காசு கொடுக்கலைனு உன் அத்த கோவிச்சிகிட்டாடா!

என்ன காசு?

அவிங்க கடனா காசு கேட்டிருந்தாங்கலாமே அந்த காசு !

( பாத்துக்குங்க மக்களே! ) ஏன் பாட்டி அவிங்க தான் நம்ல விசேஷத்துக்கு கூப்பிடலையே அதுக்கு நம்ம கோவிச்சிக்க கூடாதா ?

யாரோ அவிங்க கிட்ட பொய் சொல்லிட்டாங்க அதனால உங்களை விசேஷத்துக்கு கூப்பிடலை !

என்ன பொய் ? 

உன்னோட நிச்சியதார்ததுக்கு அவிங்கள கூப்பிடலையாம் அதனால பழிவாங்கிறாங்கலாம்! 

புரியல 

உன்னோட நிச்சியதார்துக்கு அவிங்கள கூப்பிடலையாம்

யாருக்கு நிச்சயம் ?

உனக்கு தான் ! 

யார் சொன்னது ?

தெரியலை

அடபாவிங்களா கெளப்பி விட்டுடீங்களா,, டேய் சொன்னா கேளுங்கடா எனக்கு 23 வயசுதான் ஆகுது. எவனோ ஒரு பொண்ணோட தகப்பன் பண்ண வேல தான் இது !

"யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் உண்டாகும் பூச்செண்டாய் பூமி திண்டாடும்".என்ற பழமொழிய பாலோ பண்ணி வாழ்கிறவன் நான்,  ஆயிரம் லட்சியம் அஞ்சாவது நிச்சயம்னு போய்கிட்டு இருக்கேன் அதுக்குள்ள இப்படி ஒரு புரளி !!
யாரா இருக்கும் என்று தீவிர யோசனையில் இருக்கும் போது, வெளியிலிருந்து ஒரு அசரீரி ,

சார் லெட்டர்

வெளியே சென்றேன் , எனக்கு தான் லெட்டர் வந்திருக்கிறது, எங்கிருந்து என்று பார்த்தால் அது வாடிகன் சிட்டியிலிருந்து வாழ்த்து !!!! வேகமாக ஓடி ஏசியன் பெயிண்ட் விளம்பரத்தில் வரும் நபரை போன்று கதவை சாத்திகொண்டேன்.

டக்குனு ஒரு மெசேஜ் சேனல் 4 ல் இருந்து, பேட்டி வேணும் என்று !

அது கூட பரவாயில்லை இன்று காலை டார்ஜிலீங்கில் வெளியாகும் ஒரு தினசரியில் என் சாதனைகள் என்று நான்கு பக்கம் விளம்பரம் வேறு வந்ததாம் !!

மக்களே நம்பாதீங்க, நம்பாதீங்க எனக்கு நிச்சியதார்தம்லாம் கிடையாது, இது தன்னிலை விளக்கமல்ல! பொது நலன் கருதி வெளியிடுகிறேன் !!

" அவங்க அவங்க வீட்டில் குடியிருக்கும் கோடான கோடி ரசிகைளே !!, 10 ரூவாய்க்கு ஒரு பாக்கெட் உப்பு கொடுத்த என் தமிழ் மக்களே !!

ரசிகைகள் யாரும் தவறான முடிவை எடுக்க வேண்டாம் ,

தயவு செஞ்சு யாரும் அவசர படாதீங்க, அமைதியாய் இருங்கள், 

விரைவில் கூண்டு கிளி விசாரணை நடக்கும் குற்றவாளியை கண்டு பிடிக்கும்!"Monday, May 27, 2013

Foreign Return : நான் வலைச்சரத்தில் எழுதியது


ஏன் ? எதுக்கு? எதனால? இன்னிக்கு நம்ம ஊர்ல இன்ஜினியரிங் படிச்ச, படிக்கிற, படிக்க போற எல்லாரும் கேக்குற ஒரே கேள்வி! எட்டு செமஸ்டர் 44 எக்ஸாம்ஸ் , 24 லாப்,வைவா, ஆயிரமாயிரம் அசைன்மன்ஸ், இன்னவேடிவ்ஸ், செமினார்ஸ், பிரசண்டேசன்ஸ், லட்சம் லட்சமாய் பணம்,பாங்க லோன், கடன், வட்டி, கந்து, கை மாத்து, முழுதாக நாலு வருஷம்! இவ்வளவும் செய்து கரை தேர்ந்து வந்தால் நமக்கு கிடைக்கும் ஒரு பதில் தம்பி வெறும் டிகிரிய மட்டும் வச்சிக்கிட்டு யவனும் வேல கொடுக்க மாட்டான்.

மறுபடியும் சர்டிபிகட் கோர்ஸ் புதிய கடன், புதிய வட்டி, வேலையின்மையால் வரும் ஏச்சுக்கள், பேச்சுக்கள், மனக்குழப்பம், கஷ்டம், வெளியூர் வாக்ழ்கை, குடும்ப நினைவுகள், ஒரு வேலையை வாங்கி கரை சேர்வதற்குள் கிட்ட தட்ட வாழ்கையே வெறுத்திருக்கும்.அப்படி வாங்கும் வேலையும் இனித்தும் விடாது !!

சரி விடுங்க எதுக்கு சீரியசா போய்கிட்டு,

ஒரு கம்மியான சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து ரெண்டு பேர் கைய புடிச்சு நாலு பேர் கால வாரி விட்டு சில பல போர்களம் சந்தித்து ஒரு குறிப்பட்ட நிலையை அடைவதற்குள் தலை நரைத்து விடும் இல்லைனா கிளார் அடிக்கும்!, திரும்பிபார்த்தால் நம்ம டாவோட பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருப்பார்கள்! பள்ளி தோழிகள் பேரன் பெயர்த்தியை  பார்த்திருப்பார்கள்! அடங்கொன்னியான் ! இருங்கடி நாங்களும் உங்க புருசனுன்களோட ஒசத்தின்னு காமிக்கிரோம்னு, அண்ணாமலை ரஜினி ஸ்டையிலில் ஒரு 40 pages நோட் வாங்கி குறித்து வைத்துக்க சொல்லி விட்டு பொண்ணு பார்க்க கிளம்பினால்!!

தம்பி அமெரிக்காவா ?
இல்லீங்க சாமி ..
இந்தியாவா... சரி ஒரு , ஒரு லட்சம் சம்பளம் வாங்குவியா
??!@@?????

ஜவுளி கடையில் தள்ளுபடி பார்த்திருப்பீர்கள், செல் போன் கடையில் பார்த்திருப்பீர்கள் இதை பார்தததுண்டா ?
 ஆடி தள்ளுபடியில் IT மாப்பிள்ளைகள் !!

அமெரிக்கா அமெரிக்கா ஆனால் அங்கோ இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள்  !!

அமெரிக்கா போக வில்லையானாலும் அவன் இங்கு வந்துவிட்டான், கார்போரேட் ரூபத்தில்,வேறு வழியில்லை நாமும் சம்பதித்தாக வேண்டும்!
படியுங்கள் பங்கு வர்த்தகம்,  , பங்கு ஆலோசனை.

பேசாம நம்ம அவன்ட்ட இருந்த சுட்டா என்ன ?

பால் ஏற்றுமதி செய்ய முடியுமா?
சைனாவின் தேக்கம் இந்தியாவின் லாபமாகுமா?

பதிவுகளுக்கு சொந்தக்காரர்கள் :

ஆதி மனிதன் 

ஏற்றுமதி உலகம் 

ஜெய் ஜவான் 

Tuesday, April 23, 2013

Earth Day Special Short Film

புவி தினத்தை முன்ணிட்டு நாங்கள் எடுத்த குறும்படம். பார்த்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிருங்கள். மேலும் இது எங்களின் மூன்றாவது குறும்படமாகும்  :) .

Starring: Sandhya, Dilip Naik, Prakash 

Concept: Prabu

Editing: Surya Prakash.KP

Cinematography: Prabu, Surya Prakash.KP

Production: Cinecurry

Direction : Rony Dutta, Surya Prakash.KPThursday, March 7, 2013

Peoples எனக்கு ஒரு டவுட்

பேஸ் புக்கில் புரட்சி ஸ்டேட்ஸ் போடுபவர்களை கிண்டல் செய்கிறேன் (அ ) திட்டுகிறேன் என்று பேஸ் புக்கிலே ஸ்டேடஸ் போடுகிறவர்களே !

போராட்டம் செய்யும் இளைஞர்களை பார்த்து,போராட்டம் இவர்களுக்கு பேஷனாகி விட்டது என்று கூறிவிட்டு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்வாதிகளே !

செய்கூலி, சேதாரம் இங்கு தான் கம்மியென்று எங்கும் (புரட்சி பொங்கும் ) கூவும் நகைக்கடைகளே !

மீடியா எதையும் மிகைபடுத்தியே காட்டுகிறது என்று எல்லா பத்திரிக்கைகளிலும் போடும் பத்திரிக்கைகளே !

நமக்கு 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு போடுவதற்கு
5 வருடங்கள் ஆவது ஏன் ? என்று கேள்வி கேட்கும் நிதியமைச்சர் அவர்களே !

லஞ்சம் ஊழல் நாட்டில் அதிகமாக உள்ளது என பேசும் கல்விதந்தைகளே !

நீங்களெல்லாம் யார் ? என்ன சொல்ல வருகிறீர்கள் ?

சொல்லுங்கள் Peoples சொல்லுங்கள்

சொல்லுங்கள் Peoples சொல்லுங்கள்

Friday, February 8, 2013

நாடோடி

எழுத வேண்டும் என்று ஒவ்வொரு முறை என்னும் போதும்,  எழுத தொடங்கிய சில நிமிடங்களில் லயிக்க மறுக்கிறது எனது மனம். என் வீடு முழுதும் கடக்க வேண்டிய காகித குப்பைகள் இன்று என் டெஸ்க்டாப் குப்பை தொட்டியில் !

அடிக்கடி ரௌத்திரம் பேசும் மனது வலைப்பூ பக்கம் வரச்சொன்னாலும் சோம்பேறி கடவுளின்  பர்மிசன் கிடைப்பதில்லை !

நான் பெரும் கோபத்துடன் அக்னி பொறிகளாய் உதிர்த்தவைகள் அந்த ஆண்டின் சிறந்த காமெடியாக பார்க்க பட்டவைகள் !

மாறாக காமெடி என்று ஏதாவது செய்து விட்டு சிரிப்பார்கள் என்று காத்திருந்தால் அங்கே மயான அமைதி நிலவுகிறது !

 ஆவேச பேச்சுக்கள், நூற்றுகணக்கான மேடைகள், பல வெற்றிகள், சான்றிதழ்கள் (நோ பரிசுகள்) ! முதல் வெற்றிக்குரிய பரிசு இன்று வரை எனக்கு வழங்கப்படவில்லை பதினோரு ஆண்டுகள் கழிந்து விட்டது ! என் நம்பிக்கை பொய்க்கவில்லை ! என்றாவது ஒரு நாள் அந்த பரிசு வட்டியுடன் எனக்கு வந்து சேரும் !!

நான் எழுதி முதல் மேடை ஏறியவன் அடுத்த நிமிடம் உலக மேடை சென்றான்! அதற்கும் என்னை எழுதி தர சொன்னால் எப்படி ? அங்கு வெற்றி பெற வேண்டும் என்றால் உனக்கு தகுதி வேண்டும், தோற்று விட்டாய் ! ஆனால் பழியோ என் மீது !ஊரறிய சாரட்டேறியவன் இன்று காலாற நடக்கிறேன், பதுங்கிப்பாய துடிக்கிறேன் பாசமெனும் கிரிமினலும், தயக்கமெனும் பொறுக்கியும் இக்கணம் வரை என்னை சிறையிலடைதிருக்கிறார்கள் !

இப்பொழுது கூட நான் இதுவரை எழுதியதின் சாராம்சம் எனக்கு தெரியவில்லை, இன்னும் சொல்லப்போனால் நான் கவிதை எழுதவே நினைத்தேன் !! மேலே இருப்பவற்றை படித்தால் ?

ஒன்று மட்டும் உண்மை வாழ்க்கையென்னும் நாடகத்தில் நான் நடிகனில்லை!
நானொரு நாடோடி ! அடுத்த இடம் பார்த்துவிட்டேன் !!

எங்க ஊர்
Tuesday, January 29, 2013

மெடிக்கல் ஷாப் டாக்டர்கள்

நேற்று இரவு மருத்துவர் பரிந்துரைத்த சீட்டுடன்  கிட்டத்தட்ட எட்டு மெடிக்கல் ஷாப் ஏறி இறங்க நேரிட்டது.  நான்கு  மெடிக்கல் ஷாப்களில் நான் கேட்ட மருந்துகள் கிடைக்கவில்லை .(பரிந்துரைத்த மாத்திரைகளில் சில மட்டுமே இருந்தது என்றார்கள்)

கிட்டத்தட்ட அனைத்து மாத்திரைகளின் பெயர்களும் மனப்பாடம் ஆகிவிட்ட நிலையில், அதற்கு மேல் நான் சென்ற நான்கு மெடிக்கல் ஷாப்களில் சொல்லி வைத்தாற்போல் ஆளுக்கொரு ப்ராண்ட் மாத்திரைகளை எனக்கு வழங்கினர். ஆனால் எனக்கு பரிந்துரைக்கப்பட்டது வேறு இவர்கள் வழங்கியது வேறு!! கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இவர்களில் ஒருவர் கூட நீங்கள் கேட்ட  ப்ராண்ட் மாத்திரைகள் இல்லை என்று கூறவில்லை !! மாறாக அவர்களுக்கு பிடித்த ஒன்றை தந்தனர்.

ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்களிளும் நான் தெளிவாக எடுத்து கூறினேன் எனக்கு மருந்துகளை நீங்கள் பரிந்துரைக்க வேண்டாம் மருத்துவர் என்ன எழுதியிருக்கிறாரோ அதை தந்தால் போதும் என்று. இதனால் சிலர் முறைக்க கூட செய்தனர் மற்ற மருந்துகளையும் தர மறுத்தனர்.

நான் விடாமல் பிடிவாதமாக கேட்டதால் "நீங்கள் இதை நம்பி சாப்பிடலாம் சார் சைட் எபக்ட்ஸ் லாம் வராது"  "சாப் இஸ்னே மாளிக்யுல்ஸ் சேம் ஹை, லேகின் ப்ராண்ட் நாம் அலக், தட்ஸ் இட் நோ வொர்ரி" ஒரு கெமிக்கல் மாத்திரைக்கு உத்திரவாதம் தர இவர்கள் யார் ? எங்கு மருத்துவம் பயின்றார்கள் ? எதில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் ? ஒரு சாரிடான் மாத்திரை ஒரு மெடிகலில் 1 ரூவாயும், அடுத்ததில் 1.50 ம், இன்னொன்றில் 2 ரூவாக்கும் விற்கபடுகிறதே எப்படி ?சில்லறை மாத்திரைகள் துண்டு துண்டாக கத்தரித்து தருவதால் அதன் காலாவதி தேதி கண்டுபிடிக்க முடிவதில்லை. அடுத்த மாதம் காலவதியாகபோகிற மாத்திரைகள் எனக்கு வழங்கப்பட்டது !! நான் கவனித்து கேட்டதால் மாற்றி கொடுத்தனர் ! மற்றவர்களின் நிலை ? படித்தவர்களே கவனிக்காத நிலையில், படிக்காதவர்களின் நிலைமை ?

பாதிக்கும் மேற்பட்டோர் தமக்கு என்ன மருந்து கொடுக்கப்படுகிறது எதற்காக கொடுக்கப்படுகிறது என்று தெரியாமலே உட்கொண்டு வருகின்ற நிலையில்.

உடல் வலியின் வீரியம் தாங்க முடியாமல்,எதாவது ஒரு மாத்திரையை கொடு என்று நோயின் வீரியம் தாங்க முடியாமல் கேட்பவர்களை காணமுடிகிறது, சர்க்கரை நோயின் தாக்கம், அடுத்தவேளை தான் உயிரோடு இருக்கவேண்டும் என்றால், இன்னும் பல கொடிய வியாதிகளுக்கு உள்ளானோர் மெடிக்கல் ஷாப்களை தான் கடவுளாக நம்பியுள்ளனர்.

இப்படி உங்களுக்கு சலுகைகளை வழங்குகின்ற கம்பனி மருந்துகளையும், உங்களுக்கு பிடித்த மருந்துகளையும் வழங்க உங்களுக்கு என்ன உரிமை ? நாளைக்கு அவர்களுக்கு அதனால் வேறு எதாவது பிரச்சனை வந்தால், குறைந்த பட்சம் நோய் குணமாகாமல் போனால் ?

ஏதோ ஒரு நம்பிக்கையில் தங்கள் உயிர்களை உங்களிடம் ஒப்படைக்கிறார்கள் அதில் விளையாடதீர்கள்.

இது என்ன செருப்பு வியாபாரமா இந்த டிசைன் நல்லா இல்லைனு வேற டிசைன் செருப்பு போடறதுக்கு? உயிர் சார் ,,,