Pages

Friday, February 8, 2013

நாடோடி

எழுத வேண்டும் என்று ஒவ்வொரு முறை என்னும் போதும்,  எழுத தொடங்கிய சில நிமிடங்களில் லயிக்க மறுக்கிறது எனது மனம். என் வீடு முழுதும் கடக்க வேண்டிய காகித குப்பைகள் இன்று என் டெஸ்க்டாப் குப்பை தொட்டியில் !

அடிக்கடி ரௌத்திரம் பேசும் மனது வலைப்பூ பக்கம் வரச்சொன்னாலும் சோம்பேறி கடவுளின்  பர்மிசன் கிடைப்பதில்லை !

நான் பெரும் கோபத்துடன் அக்னி பொறிகளாய் உதிர்த்தவைகள் அந்த ஆண்டின் சிறந்த காமெடியாக பார்க்க பட்டவைகள் !

மாறாக காமெடி என்று ஏதாவது செய்து விட்டு சிரிப்பார்கள் என்று காத்திருந்தால் அங்கே மயான அமைதி நிலவுகிறது !

 ஆவேச பேச்சுக்கள், நூற்றுகணக்கான மேடைகள், பல வெற்றிகள், சான்றிதழ்கள் (நோ பரிசுகள்) ! முதல் வெற்றிக்குரிய பரிசு இன்று வரை எனக்கு வழங்கப்படவில்லை பதினோரு ஆண்டுகள் கழிந்து விட்டது ! என் நம்பிக்கை பொய்க்கவில்லை ! என்றாவது ஒரு நாள் அந்த பரிசு வட்டியுடன் எனக்கு வந்து சேரும் !!

நான் எழுதி முதல் மேடை ஏறியவன் அடுத்த நிமிடம் உலக மேடை சென்றான்! அதற்கும் என்னை எழுதி தர சொன்னால் எப்படி ? அங்கு வெற்றி பெற வேண்டும் என்றால் உனக்கு தகுதி வேண்டும், தோற்று விட்டாய் ! ஆனால் பழியோ என் மீது !



ஊரறிய சாரட்டேறியவன் இன்று காலாற நடக்கிறேன், பதுங்கிப்பாய துடிக்கிறேன் பாசமெனும் கிரிமினலும், தயக்கமெனும் பொறுக்கியும் இக்கணம் வரை என்னை சிறையிலடைதிருக்கிறார்கள் !

இப்பொழுது கூட நான் இதுவரை எழுதியதின் சாராம்சம் எனக்கு தெரியவில்லை, இன்னும் சொல்லப்போனால் நான் கவிதை எழுதவே நினைத்தேன் !! மேலே இருப்பவற்றை படித்தால் ?

ஒன்று மட்டும் உண்மை வாழ்க்கையென்னும் நாடகத்தில் நான் நடிகனில்லை!
நானொரு நாடோடி ! அடுத்த இடம் பார்த்துவிட்டேன் !!

No comments:

Post a Comment