Pages

Thursday, June 6, 2013

Eligible Bachelor

அதிகாலை 7 மணியளவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த பொழுது என் துயல் கலைக்கும் விதமாக என் செல்போன் Girl Just let be a Man என்று கத்தி கொண்டிருந்தது, யாருடா இந்த நள்ளிரவில் போன் பன்றாங்கனு பாத்தா அது என் பாட்டி.

என்ன இந்த நேரத்தில் என்று விசாரித்தால், நீங்க காசு கொடுக்கலைனு உன் அத்த கோவிச்சிகிட்டாடா!

என்ன காசு?

அவிங்க கடனா காசு கேட்டிருந்தாங்கலாமே அந்த காசு !

( பாத்துக்குங்க மக்களே! ) ஏன் பாட்டி அவிங்க தான் நம்ல விசேஷத்துக்கு கூப்பிடலையே அதுக்கு நம்ம கோவிச்சிக்க கூடாதா ?

யாரோ அவிங்க கிட்ட பொய் சொல்லிட்டாங்க அதனால உங்களை விசேஷத்துக்கு கூப்பிடலை !

என்ன பொய் ? 

உன்னோட நிச்சியதார்ததுக்கு அவிங்கள கூப்பிடலையாம் அதனால பழிவாங்கிறாங்கலாம்! 

புரியல 

உன்னோட நிச்சியதார்துக்கு அவிங்கள கூப்பிடலையாம்

யாருக்கு நிச்சயம் ?

உனக்கு தான் ! 

யார் சொன்னது ?

தெரியலை

அடபாவிங்களா கெளப்பி விட்டுடீங்களா,, டேய் சொன்னா கேளுங்கடா எனக்கு 23 வயசுதான் ஆகுது. எவனோ ஒரு பொண்ணோட தகப்பன் பண்ண வேல தான் இது !

"யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் உண்டாகும் பூச்செண்டாய் பூமி திண்டாடும்".என்ற பழமொழிய பாலோ பண்ணி வாழ்கிறவன் நான்,  ஆயிரம் லட்சியம் அஞ்சாவது நிச்சயம்னு போய்கிட்டு இருக்கேன் அதுக்குள்ள இப்படி ஒரு புரளி !!
யாரா இருக்கும் என்று தீவிர யோசனையில் இருக்கும் போது, வெளியிலிருந்து ஒரு அசரீரி ,

சார் லெட்டர்

வெளியே சென்றேன் , எனக்கு தான் லெட்டர் வந்திருக்கிறது, எங்கிருந்து என்று பார்த்தால் அது வாடிகன் சிட்டியிலிருந்து வாழ்த்து !!!! வேகமாக ஓடி ஏசியன் பெயிண்ட் விளம்பரத்தில் வரும் நபரை போன்று கதவை சாத்திகொண்டேன்.

டக்குனு ஒரு மெசேஜ் சேனல் 4 ல் இருந்து, பேட்டி வேணும் என்று !

அது கூட பரவாயில்லை இன்று காலை டார்ஜிலீங்கில் வெளியாகும் ஒரு தினசரியில் என் சாதனைகள் என்று நான்கு பக்கம் விளம்பரம் வேறு வந்ததாம் !!

மக்களே நம்பாதீங்க, நம்பாதீங்க எனக்கு நிச்சியதார்தம்லாம் கிடையாது, இது தன்னிலை விளக்கமல்ல! பொது நலன் கருதி வெளியிடுகிறேன் !!

" அவங்க அவங்க வீட்டில் குடியிருக்கும் கோடான கோடி ரசிகைளே !!, 10 ரூவாய்க்கு ஒரு பாக்கெட் உப்பு கொடுத்த என் தமிழ் மக்களே !!

ரசிகைகள் யாரும் தவறான முடிவை எடுக்க வேண்டாம் ,

தயவு செஞ்சு யாரும் அவசர படாதீங்க, அமைதியாய் இருங்கள், 

விரைவில் கூண்டு கிளி விசாரணை நடக்கும் குற்றவாளியை கண்டு பிடிக்கும்!"