Pages

Wednesday, December 26, 2012

ஆட்டோகிராப் சேரன் துணை : நான் வலைச்சரத்தில் எழுதியது


நாட்டியமாடும் அந்த கால்கள்
சட்டென்று என்னை தாக்கும் அவள் விழிகள்
ஒரு வேலை வேறு யாரயாவது பார்கிறாளோ ?
சில நேர புலனாய்வுக்கு பிறகு கன்பார்ம் செய்தேன்
என்னை தான் பார்க்கிறாள் !! (நம்ளையும் ஒரு பிகர் பாக்குதுபா)
தந்தையை அருகில் வைத்துக்கொண்டே !
ரயில் தாமதமாக சோர்ந்து போனவளாய் கண்களால் அவள் வருத்தத்தை தெரிவிக்க, நானும் அமர்ந்து கொண்டே அவளை கண்களால் தேற்றினேன்,
அவளும் நோக்க, சூர்யாவும் நோக்க அவளின் தந்தை முறைக்க ,
சட்டென்று விலகியவளாய், நான் எங்கே என்று தேட என் அருகில் அமர்ந்திருக்கிறாள் !!

ஒரு காதிலிருந்து மறு காது வரை நான் இளிக்க! மீண்டும் அவள் தந்தை முறைக்க! அப்பொழுது அவளின் மூச்சு காற்று படும் தூரத்தில் நான் இருக்கிறேன், திடீரென்று என்னை நேருக்கு நேர் பார்க்கிறாள் !!
அவள் கண்கள் என்னை ஊடுருவ ஊடுருவ சிலையாகிப்போன நான் அவள் எழுந்து சென்ற பிறகு தான் உணர்ந்தேன் என் கழுத்து ஐந்து பேர் சேர்ந்து அடித்தார் போல் வலிக்கிறதென்று !! (ஆமா ஏன் எழுந்து போனா ? காலைல குளிச்சிட்டு தானே வந்தேன் ? )

அன்று ரயில்வே ஸ்டேஷனில் தொலைத்த அவளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன் !!
பள்ளியில் புஷ்பா என்னை விரட்டிய போதும், கல்லூரியில் ஜானுவை நான் விரட்டியபோதும், இடையில் ஸ்டெபி, ரேகா, ப்ரியா, என லிஸ்ட் போனாலும் இவள் என்னை ஏதோ செய்து விட்டாள். ச்ச மறுபடியும் அவள பாக்கணும் டா சூர்யா.

ஏனென்றால் இவையெல்லாம் என் முதுமையின் தனிமைக்காக நான் சேர்த்துக்கொண்டிருக்கும் பொக்கிஷங்கள். அப்பொழுது எனக்குள் நானே சொல்லிகொள்வேன் அன்னைக்கு அவள் கிட்ட பேசி இருக்கலாம் டா ..

இப்பலாம் வெறும் லவ் பாட்டா கேக்க புடிக்குது,
புல் அடிச்சும் போதையில்லை, புல்லட் பீர் அடிச்சும் கிக்கில்லை,
கல்லு குடிச்சும் தூக்கமில்லை, கண்ண மூடுனா கனவுல நீதானே !!


Wednesday, December 5, 2012

இதோ எங்களின் அடுத்த குறும்படம்

Title: First Change Yourself English Short Film

Cast: Rony Dutta, Sushant Rao, Shubhram Bhattacharjee

Direction: Suryaprakash.KP

Editing: Prabukrishna

Camera: Renald B Alvin

By: Orange Persons


Tuesday, November 27, 2012

எங்களின் முதல் குறும்படம்


நேற்று வரை நீ :

Cast: Bharathi, Sumi, Abishek

Direction: Suryaprakash.KP

Editing: Prabukrishna

Camera: Renald B Alvin

Story: Dheva

Dubbing: Bharathi, Sandy, Surya

By: Orange Persons

A special Thanks to Dhina,Vikram, Suresh, Pk Online, Kaushik and his room mets



Wednesday, November 7, 2012

பசுமை விடியல் ஒரு விளம்பரமா ?

காரணமில்லாமல் இங்கு எந்த ஒரு செயலும் நடைபெறுவதில்லை. இப்பொழுது இருக்கும் மூத்தகுடிகளை கேட்டு பாருங்கள் நாற்காலி செய்வதற்காக ஒரு மரம் வெட்டபட்டால் அந்த இடத்தில் இரண்டு மரமாவது நடப்படும்.

நாட்கள் செல்ல செல்ல நம் புவி காடுகளின் பெரும்பகுதி கான்கிரீட் கட்டடங்களாலும், ரியல் எஸ்டேட்களாலும் விழுங்க பட்டுவிட்டது! இன்று 20% மேற்பட்ட காடுகளை காணவில்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் 2 % விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டது என்று நடுவணரசு கூறுகிறது ! காரணம் என்னவென யோசிக்க முதல் பத்தியை மீண்டும் படியுங்கள் அது இப்பொழுது வரலாறாகிப்போனது.

இங்கே ஒரு சமன்பாடு விடுபட்டு விட்டது அதை மீண்டும் சமநிலை படுத்தத் வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.அதற்கான ஒரு முயற்சி தான் இந்த பசுமை விடியல். மரம் நடுதல் பற்றி அனைவருக்கும் இங்கே விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் சிலர் செய்வது ஒரு நாளில் சில மரம் நடுவர் பின்பு அதை மறந்து விட்டு அவர்கள் வேலையை கவனிக்க சென்று விடுவர்.

இன்னும் சிலர் ஒரு பத்து பேர் சேர்ந்து கொள்வர் பெரும்பாலும் தோழர்களாக இருப்பர் வார இறுதி நாட்களில் மரம் நடும் வேலையை செய்வர் ஆனால் அவர்களும் 2,3 வாரங்களில் விட்டு விடுவர்.

இன்னும் சிலர் தான் ஊரை சுத்த படுத்தினேன் என்று முகநூலில் பகிர்வர், மரம் நடுவர் போதிய லைக்குகள் கிடைக்கவில்லை என்றவுடன் ஒதுங்கி விடுவர். பின்பு மற்றவர்களின் குறையை கண்டு பிடிக்க சென்று விடுவர்.

ஆனால் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து இயங்க தூண்டும் ஒரு முயற்சியே இது.ஊர் கூடி தான் தேர் இழுக்க முடியும். இப்பொழுது நிறைய பேர் முன் வந்து மரம் நடுகிறார்கள். பரவலாக முன்வைக்கப்படும் கேள்வி, மரம் நடுவதை ஏன் முகநூலில் பகிரவேண்டும் இது வீண் விளம்பரம்.

அதற்கான பதில் இதோ, இன்று காஞ்சிபுரத்தில் இரண்டு கிராம இளைஞர்கள் தாமாக முன்வந்து தங்கள் கிராமத்தில் மரங்களை நட்டு பராமரிக்கின்றனர். இது நடைபெறுவதற்குள் அங்கு எவ்வளவு பிரச்சனைகள் என்பது ஒருபுறம்.

ஐ டி கம்பனியில் வேலை பார்த்துக்கொண்டே வார இறுதியில் சொந்த ஊருக்கு சென்று மரம் நடுவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒருவர்

 தன் சொந்த ஊரில் கிடைக்கும் இடங்களில்லாம் பஞ்சாயத்து அனுமதியுடன் மரம் நடும் ஒருவர்.

பசுமை விடியலை போன்று நானும் இங்கு மரம் நடவேண்டும் என் ஊர் மக்களை இணைத்துக்கொள்ள வேண்டும் ஆனால் தமிழ் பெயர் வேண்டாம் என்று கேட்கும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர்.

இங்கு எனக்கு மரம் கிடைக்கவில்லை ஆனால் மரம் நட வேண்டும் மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளகொள்ளவேண்டும் என்று என்று சவுதியில் இருந்து ஒருவர். இன்னும் பலர் இன்று முக நூலில் பதியப்படும் புகைப்படத்தை பார்த்து தானாக முன்வருகின்றனர், மரம் நடுகின்றனர். இங்கே விளம்பரம், புகழ் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

எத்தனை  பேருக்கு தெரியும் இந்த பசுமை விடியலை நிர்வகிக்கிரவர்கள் யார் யார் என்று ?. கிட்டத்தட்ட 75 % தெரியாது என்று தான் சொல்வார்கள்.அது தான் உண்மை, ஒருவரை மையமாக கொண்டு  இயங்கவில்லை என்பதால் கூட அது இருக்கலாம்.

இங்கே தன் படம் வரவேண்டும் என்பதற்காக மரம் நடுபவர்களும் இருக்கிறார்கள் ஆனால் அந்த மரம் ஏதாவது ஒரு வழியில் பாதுகாக்க படுகிறது என்பதை மறுக்க முடியுமா (அ ) அதை பார்த்து நாலு பேர் ஆர்வமானால் ?

மரம் நடுதல் , சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரை பேச்சு - போட்டிகள், கிராமம் தத்தெடுத்தல், இன்னும் பல எதிர்கால திட்டங்களுடன் இந்த பசுமைவிடியல் நகர்ந்து கொண்டே இருக்கும்  அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எல்லாவற்றிகும் மேலாக பசுமைவிடியல்  ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறப்போகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் :)

Thursday, October 25, 2012

மனித நேயம்

நான் சாலையில் நடந்து செல்லும் போது கண்ட காட்சி.

ஒருவர் படுத்து கிடந்தார் அடையாளம் தெரியவில்லை பொதுவாக சாலையில் ஒரு ஆண் கிடக்கிறான் என்றாலே புல் தண்ணி என்று எண்ணிவிட்டு சென்றுவிடுவோம்!!  நானும் அதையே தான் செய்தேன் !!.

ஆனால் திரும்பும் வழியில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது! அந்த மனிதனை ஒரு வயதான ஜோடி தண்ணீர் ஊற்றி எழுப்பி கொண்டிருந்தது. (விபத்து ஏற்பட்டு சாகக்கிடக்கும் ஒருவரை கண்டும் காணமல் போகும் சூழலில் தான் இருக்கிறோம் ) யாருமே கண்டுகொள்ளாமல் கிடந்த ஒருவரை அவர்கள் எழுப்ப காரனம் என்ன ?

பெற்ற மகனா ?, பாசமா ?, மனித நேயமா ? தெரியவில்லை.. ஆனால் அவர்கள் இருக்க போகும் கொஞ்ச நாளில் எந்த துன்பம் துயரத்திற்கு ஆளாகாமல் வாழவேண்டும் என்பதே என் ஆசை.



Wednesday, October 3, 2012

பசுமை விடியல் கலந்துரையாடல் – காஞ்சிபுரம் 30-09-2012

மிக எளிமையாக இயல்பாக நடந்த கலந்துரையாடல். இணையம் மூலமாக அறிமுகம் ஆன பசுமைவிடியல் அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் நேற்று முதன்முறையாக நேரில் சந்தித்தோம்.
















Sunday, September 30, 2012

காஞ்சிபுரம் திரு அருட்பிரகாச வள்ளலார் குழந்தைகள் இல்லம்

மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் கடந்தது சென்ற வார இறுதி. காஞ்சிபுரம் திரு அருட்பிரகாச வள்ளலார் குழந்தைகள் இல்லம், அந்த பிஞ்சு குழந்தைகள் இந்த இரண்டு நாட்களிலேயே என்னை அண்ணனாக ஏற்றுகொண்டனர். சூர்யா அண்ணா சூரி அண்ணா என்று நான் கிளம்பும் வரை சூழ்ந்துகொண்ட தூய உள்ளங்கள்.
























Tuesday, September 25, 2012

நான் புரிந்துகொண்ட ஹிந்து மதம்

இங்கு பேச்சுரிமை உண்டு , நீங்கள் சிவனையும், விஷ்ணுவையும் வழிபடலாம்    வழிபடாமலும் போகலாம்.  நீ பாவம் செய்தவனாகிவிடுவாய் என்கிற பூச்சாண்டிகள் மிக குறைவு.

என்னை பொறுத்தவரை இந்த மதத்தில் கடவுள் இல்லை ! சக மனிதர்களே கடவுள் தான். இல்லாத ஒன்றைவிட இருக்கும் ஒன்றை கடவுளாக ஏற்றுகொண்ட மதம் இது. அதனால்தான் தாய் தந்தையரையும், சக மனிதர்களையும் ஏன் விலங்குகளை கூட நாங்கள் நேசிக்கிறோம். இது தான் இங்கு அடிப்படை அன்பு, பாசம். 

இவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள். பொங்கல் பண்டிகை ஒன்றே அதற்கு சாட்சி. ஆடு, மாடு, நாய், ஆறு, மலை, சூரியன், யானை, குதிரை, சிங்கம், புலி இப்படி பூமியல் மனிதர்கள் வாழ இடம் கொடுத்த அனைத்திற்கும் நாம் நன்றிகடன் பட்டிருக்கிறோம், அவற்றை வணங்குகிறோம் . அவைகள் நாம் புவியில் வாழ அனுமதித்தவைகள்.

இங்கு கட்டுபாடுகள் கிடையாது, மிரட்டல்கள் கிடையாது,மூலைச்சலவை கிடையாது மற்ற யாரையும் இந்த மதத்திற்கு மாறுங்கள் என்று கேட்பது கிடையாது. இது ஒரு அனுபவம், வெளியில் இருந்து பார்த்தால் மிகப்பெரிய மூட நம்பிக்கை கூட்டமாக தெரியும் ஆனால் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் இங்கு இருப்பவர்கள் அன்பில் பிணைக்க பட்டிருக்கிறார்கள். 

மற்ற மதங்களை இழிவுபடுத்தும் மக்கள் கிடையாது. அவர்கள் வழிபடும் கடவுள்கள் எங்களுக்கும் கடவுள். பெரும்பகுதி மக்கள் இந்து வாக இருப்பினும் நம்நாட்டில் மற்ற மதத்தினர் இங்கு மகிழ்ச்சியோடும் சகோதரத்துவத்தோடும் இருக்க முடிகிறது. 

இங்கு என் கைகள் கட்ட படவில்லை, சுகந்திரமாக இருக்கலாம். மற்ற மதத்தினரை கீதை படிக்க சொல்லி நான் கேட்கமாட்டேன். ஆனால் அவர்களின் புனித நூல்களை விரும்பி படிப்பேன் நல்லது எங்கு கூறபட்டிருந்தாலும் அவை  ஏற்றுகொள்ளபடுகின்றன. 



ஆனால் சாதியில் பிரிக்க பட்டிருக்கிறார்கள். இங்கும் இருக்கிறார்கள் மதப்பற்று ஓவராகி வெறியர்கலானவர்கள். ஆனால் மிக மிக குறைவு. அளவுக்கதிகமான மூட நம்பிக்கைகள், காரனம் ஹிந்து மதத்தை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோருக்கு  இந்த மதத்தை பற்றி புரிதல் இல்லை,  ஒருவேளை உருட்டி மிரட்டி வழிய திணிப்புகள் இல்லாததால் கூட இருக்கலாம்.

வருடம் முழுவதும் விசேஷங்கள் மக்களை இணைத்து வைப்பதற்கான ஒரு எளிய வழி.

இந்த பதிவு வெளியிடும் தருணம் வரை ஹிந்து மதத்தை பற்றிய எனது புரிதல் இதுதான். இது காலபோக்கில் மாறலாம் .

மேலும் மற்ற மதங்களை பற்றி எனக்கு எதுவம் தெரியாது எனவே அதை பற்றி எழுத எனக்கு எந்த தகுதியும் இல்லை.

Friday, September 21, 2012

பிளாட்பாரத்தில் கண்ட காட்சி




இன்று நான் சாலையை கடந்து செல்லும் போது , பிளாட்பாரத்தில் கண்ட காட்சி இது,, :(  

Thursday, September 13, 2012

ஒத்துழைப்பு தாருங்கள், திட்டத்தில் இணையுங்கள் !!


பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இப்படி மாய்ந்து மாய்ந்து அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் ரசாயன உரம், பிளாஸ்டிக் என்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கும் ஒரு முரண்பாட்டு மூட்டை அரசாங்கம்...!!

                                    

அரசை திருத்துவது நம் வேலை அல்ல எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் தனி மனிதன் நம் கடமை ? தண்ணீருக்காக போர் போட்டால் சில அடிகளில் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர், பல நூறு அடிகள் போடப்பட்டும் கல்லை கரைத்து துப்பிக்கொண்டிருக்கிறது. திரளும் கருமேகங்களை குளிர்வித்து கீழே கொண்டுவரும் திறனற்ற வறண்ட பூமி !!? கான்கிரீட் பூமியில் கண்ணுக்கு தெரியாத பசுமை !

பசுமைவிடியல் 

அமைதியாக இருந்தால் போதுமா ஏதாவது செய்ய வேண்டாமா என யோசித்ததின் முடிவில் பிறந்ததுதான்  'பசுமை விடியல்'

கடந்த சில மாதகாலமாக சிறு குழந்தை போல தவழ்ந்து நிமிர்ந்து எழுந்து மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைந்த தன்னார்வலர்களின் கரங்களை பிணைத்து கொண்டிருக்கும் தைரியத்தில் பசுமைவிடியல் பெரிய அளவில் செயல் பட திடங்கொண்டு  பல வியத்தகு முடிவுகளை எடுத்திருக்கிறது. முதலில் இரண்டு திட்டம் தொடங்கினோம்.

* 'தினம் ஒரு மரம்' திட்டம்

* 'இலவச மரக்கன்று' திட்டம்  
சில முயற்சிகள் செய்யலாம் 

தன்  வீடு தன் வேலை என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் நின்றுவிடாமல் அதை தாண்டி வெளியே வந்து சில கடமைகளை இயன்றவரை செய்யலாமே. யாருக்கோ செய்யவேண்டாம். நம் குழந்தைகள் பேரன் பேத்திகள் நாளை வாழப்போகும் இடம் இது, இதை சரி செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை. 'வாழ தகுதியில்லாத பூமியை நமக்கு விட்டுச் சென்றுவிட்டார்கள் இரக்கமற்றவர்கள்' என்று நம்மை நம் குழந்தைகள் சபிக்க வேண்டுமா ??

வீட்டுக்குள் ரோஜா செம்பருத்தி குரோட்டன்ஸ் வளர்த்துவிட்டு நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்று திருப்தி பட்டுவிடக் கூடாது. 

*   நாம் வசிக்கும் தெருவின் ஓரத்தில்...

*   வீட்டு வாசலில், காம்பௌன்ட் உள்ளே...

* வீட்டை சுற்றி இடம் இல்லை என்றால் தெரிந்தவர்கள் வீட்டில் இடம் இருந்தால் வாங்கி கொடுத்து வைக்க சொல்லலாம். நீங்களே நட்டு, நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வரலாம்.    

* உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது  மரக்கன்றுகளை பரிசாக கொண்டு செல்லலாம்.

*  பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கொடுக்கலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளிடம்(அவங்க பிறந்தநாளின் போது) கொடுத்து அவங்க பள்ளியில் நட சொல்லலாம். தினம் தண்ணீர் ஊற்றி எப்படி வளர்ந்திருக்கு என்று குழந்தைகளிடம் கேட்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டலாம்.

* விதைகள் சேகரித்து மலைவாசஸ்தலம் எங்காவது சென்றால் அங்கே விதைகளை  தூவிவிட்டு வரலாம். (இதெல்லாம் காக்கா, குருவி, பறவைகள் பண்ற வேலை அவைதான் இப்போ கண்ணுல படலையே)

 ஏதோ ஒரு விதத்தில் நமக்கு இயன்றவரை செய்து வரலாம்.

இப்படியும் சொன்னாங்க 

*  எங்க வீட்ல இடம் இல்ல... எங்க நட.
* தெருவுல போய் நடவா ? வேற வேலை இல்ல...பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

இதெல்லாம் கூட பரவாயில்லை ஒரு காலேஜ் ப்ரோபசர் சொன்னார், "நீங்க நட்டு வச்சுட்டு போய்டுவீங்க, யாருங்க தண்ணீ ஊத்த? அதுக்கும் ஒரு ஆள நீங்களே ரெடி பண்ணி வச்சுட்டா நல்லது !!"

அவர் சொன்னப்போ சுர்ருன்னு கோபம் வந்துடுச்சு. ஆனாலும் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அவர் பாட(பாடத்தை) கவனிப்பாரா செடிக்கு தண்ணி  ஊத்திட்டு இருப்பாரா? இருந்தாலும் நானும் விடாமல் "காலேஜ்க்குனு தோட்டக்காரங்க இருப்பாங்களே" னு கேட்டேன், "இதுவரை செய்றதுக்கு சம்பளம் கொடுப்போம், இது எக்ஸ்ட்ரா  வேலை"

இப்படி சொன்னதும் நான் வேற என்ன செய்ய "சரிங்க நான் ஆள் ரெடி பண்ணிட்டு உங்க கிட்ட பேசுறேன்"னு போன் வச்சுட்டேன்.

ஆக

கன்றை கொடுப்பது  சின்ன வேலை அதை பராமரிப்பதுதான் பெரிய வேலை என்ற ஒன்றை புரிய வச்சாங்க. அதன் பின் தான் மூன்றாவது திட்டம் உதயமானது. ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்கே மரக்கன்றுகளை ஊரை சுற்றி நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க அங்க உள்ள சிலரை பணியில் அமர்த்தி பசுமைவிடியல் மூலமாக சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். முதல் இரண்டு திட்டங்கள் படிப்படியாக செயல்படதொடங்கியதும் மூன்றாவது திட்டம் தொடங்க இருக்கிறோம். 

முதல் திட்டமாக கன்றுகளை இலவசமாக கொடுக்க முடிவு செய்து முகநூலில் செய்தியை பகிர்ந்தோம்...

மரக்கன்று நடும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், தங்கள் சொந்த இடத்தில் நட்டு வளர்க்க விருப்பம் இருப்பவர்களும், பள்ளி, கல்லூரிகளில் நட விருப்பம் உள்ளவர்களும் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

திருநெல்வேலி, சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்தவர்கள் நேரில் வந்து பெற்று கொள்ளமுடியும். மற்றவர்கள் transport ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். 


தேவைப்படுபவர்கள் தேவைப்படும் தேதிக்கு இரண்டு நாளுக்கு முன்பே தொடர்புக் கொண்டால் நல்லது.

தொடர்பு கொள்ள

Email - admin@pasumaividiyal.org

* * * * * * * * * *

முகநூலில் பார்த்து சிலர் போன் பண்ணிகேட்டது மனதிற்கு நிறைவாக இருந்தது. முக்கியமாக சென்னையில் கொடுப்பிங்களானு கேட்டாங்க. பிற மாவட்டங்களுக்கும் கொடுக்கிறதுக்காக சில ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறோம்...விரைவில் நல்ல செய்தியை  பகிர்கிறேன்

சந்தோசமான செய்தி ஒன்று 

இலவச மரக்கன்று அறிவித்த மூன்றாவது நாளில் Rotaract Club of Kovilpatti Chairman திரு செந்தில் குமார் என்னை தொடர்புகொண்டு பேசினார். "ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு உங்களால் உதவ முடியுமா" என்று கேட்டார். இது போன்ற ஒரு வாய்ப்புக்காகத் தானே காத்திருக்கிறேன் என்பதால் சந்தோசமாக 'ஏற்பாடு செய்கிறேன்' என்றேன்.

உடனே "முதலில் அடுத்த வாரம் பத்தாயிரம் மரக்கன்று வேண்டும்" என்றார். 

ஒரே சமயத்தில் இவ்வளவு கன்றுகள் ரெடி செய்வது முதல் முறை என்பதால் கொஞ்சம் தயங்கினாலும் ,தயார் செய்து விட்டோம். அடுத்தவாரம் கொடுக்க போகிறோம்.

மரக்கன்றுகள் சென்று சேர போகும் இடம்

Junior Red Cross Convener
தென்காசி கல்வி மாவட்டம்
இ.மா. அரசு மேல்நிலை பள்ளி
பண்பொழில்.
* * * * * * * * * * * * * *                            

2 வது திட்டம் குறித்த பதிவு  - ஒரு புதிய முயற்சி -தினம் ஒரு மரம்  

அன்பின் உறவுகளே!!

 * இலவச மரக்கன்றுகள் பெற்று இயன்றவரை உங்களை சுற்றி இருக்கிற இடங்களில் நட முயற்சிசெய்யுங்கள்...
* தினம் ஒரு மரம் திட்டத்தில் அனைவரும் அவசியம் பங்குபெற வேண்டுகிறேன்.
தொடர்புக்கு tree@pasumaividiyal.org

உங்களின் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்  நாடுகிறேன். 
  
மரம் நடுவோம், மண்ணை காப்போம்


பிரியங்களுடன்
சூர்ய பிரகாஷ் 

Monday, September 10, 2012

தினம் ஒரு மரம்


அருமை இணைய உறவுகளே,

வணக்கம்.

சில நிமிடங்கள் உங்கள் பார்வையை இங்கே பதியுங்கள்...படித்து கடந்து செல்லும் முன் ஒரு உறுதியுடன் செல்வீர்கள் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென்று ஒரு புதுமையான திட்டம் 'தினம் ஒரு மரம்' யார் தொடங்கினாங்க? எப்படி? எதுக்கு? என்னவென்று கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் EAST TRUST ஆல் தொடங்கப்பட்ட 'பசுமைவிடியல் அமைப்பு' கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென்று பல செயல்களை செய்துவருகின்றது. அதன் அடுத்தகட்ட ஒரு முயற்சிதான் 'தினம் ஒரு மரம்' என்ற திட்டம். நாம் வாழும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற தேடல், ஆர்வம் இருப்பவர்கள் பங்கு பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் .





தினம் ஒரு மரம்!
பசுமை விடியல் குழுவின் புதிய பசுமைத் திட்டம்!

இத் திட்டத்தின் நோக்கம் என்ன?
பசுமை விடியல் சார்பில் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினம் ஒரு மரம் நடப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் யார் யார் எல்லாம் பங்கு கொள்ளலாம்?
உலகில் பசுமை நிலைத்திருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும் பங்கு கொள்ளலாம்

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?
ஒரு சங்கிலித் தொடர்போல, மரம் நடும் நண்பர்கள், தினம் தினம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் ஆர்வலரை பசுமைவிடியலே பரிந்துரை செய்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறது. முதல் நபர் மரத்தை நடும் முன்பே, அடுத்த நபரை பரிந்துரைக்க வேண்டும். அவர் நண்பராகவோ, உறவினராகவோ, பசுமை விடியல் அங்கத்தினராகவோ இருக்கலாம். அவர் அவருக்கடுத்த நபரை பரிந்துரைப்பார். இப்படியே தினம் ஒரு மரம் பசுமை விடியல் சார்பில் உலகில் எங்காவது ஒரு மூலையில் நடப்படும். வருடத்திற்கு 365 மரங்கள். சங்கிலித் தொடர்போல இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சங்கிலித் தொடருக்குள் இணைவது எப்படி?
மிக எளிது. தினம் ஒரு மரம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் பெயர் தினம் ஒரு மரம் ஆர்வலர்களின் பட்டியலில் இணைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை மற்றவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஒரு மரம் நட வேண்டும்.

மரம் நடப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது?
மரம் நடும் காட்சியை ஒரு புகைப்படமாக tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப் புகைப்படம் தேதிவாரியாக ஒரே ஆல்பத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைக்கப்படும். இந்த ஆல்பம் மற்றவர்களை நிச்சயம் ஊக்கப்படுத்தும்

* * * * *

விழிப்புணர்வு ஏற்படுத்துவதே...

உலகம் தற்போது இருக்கும் நிலையில் ஒருநாளைக்கு ஒரு மரம் நட்டால் போதுமா? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படக்கூடும். இத்திட்டம் ஒரு மரம் வைக்கணும் என்பதாக இருந்தாலும், உலகின் பல இடங்களில் இருந்தும் பலர் இணைந்து தினமும் தொடர்ச்சியாக செய்து வரும் போது பிறருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும்.

இத்திட்டத்தின் நோக்கம் பலரை தட்டி எழுப்புவது தான். அவர் செய்துவிட்டார் நாமும் செய்வோம் என்ற மறைமுக ஊக்கப்படுத்துதல். மரம் நடுவது அனைவரின் இன்றியமையாத கடமை என்றில்லாமல், அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பலன் என்ற கேள்வியை இன்னமும் கேட்கும் பலர் இங்கே உண்டு...! அப்படிபட்டவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பதே போதுமானது. பின் அவர்களாக தொடர்ந்து செய்ய தொடங்கிவிடுவார்கள்.

எந்த ஒன்றும் எல்லோரின் ஒத்துழைப்பு இன்றி செயல்வடிவம் பெற இயலாது என்பதை தெரிந்தே இருக்கிறோம். அதனால் உங்களின் மேலான ஆதரவையும், பங்கெடுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறிதும் தயக்கம் இன்றி முழுமனதாக ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இனிமேல் இது 'எங்க திட்டம்' இல்லை 'நம்ம திட்டம்'.

இணைந்து செயலாற்றுவோம்.
வாழ்த்தட்டும் இயற்கை !! வணங்கட்டும் தலைமுறை !!

தினம் ஒரு மரம்!
இந்த பூமி உள்ள வரை...

ஆம் சங்கிலித் தொடராக தினம் ஒரு மரம்.

இன்று நீங்கள், நாளை நண்பர், அடுத்த நாள் மற்றொருவர்!

ஆளுக்கொரு மரம்!
மரம் நடுவோம்!
மண் காப்போம்!!

* * * * *

பிரியங்களுடன்

சூர்ய பிரகாஷ்
பசுமைவிடியல்.

முகநூலில் பசுமை விடியல்

தகவல் - பசுமைவிடியல் தளம்

Thursday, August 16, 2012

எதற்காக இந்த சுதந்திர தினம் ?

 இந்த கேள்வியை நான் கேட்க காரணம் நேற்று நடந்தவைகள் !



சுதந்திர தினத்தன்று  கூட திறந்திருக்கும் சாராய கடைகள்! (கர்நாடகா),

அதற்கு எதிரிலேயே கட்டப்படும் ஜெயின் மத கோயில் .  சுதந்திரத்தை போற்றும் வகையில் அவர்கள் ஏற்றிய தேசிய கொடி! மிட்டாய் கொடுப்பார்கள்  என்று அங்கு காத்திருந்த கட்டிட தொழிலாளர்கள்,

 முதலாளிகள் தனியாகவும், தொழிலாளர்கள் தனியாகவும் நிற்க இன்னும் சிலர் தனியாக நிற்கின்றனர் ! யார் அவர்கள் ? தீண்டாமை? அப்புறம் எதுக்குயா கொடி ஏத்துறீங்க ? அதைவிட ஒரு பெரிய கொடுமை இன்னும் அந்த கொடி இறக்க படவில்லை:(

சலிக்காமல் இந்தியாவை முடிந்த அளவு தாழ்த்திவிட்டு  சுதந்திர தின வாழ்த்து சொன்ன என் பேஸ் புக் நண்பர்கள்.

காலையிலிருந்து இரவு வரை விதவிதமான திரைப்படங்களை பாருங்கள் சுதந்திரதினத்தை போற்றுங்கள் என்று கூறிய தொலைகாட்சிகள்.

பெயரளவில் மூடிவிட்டு உள்ளே வேலை செய்து கொண்டிருக்கும் ஐ டி ஊழியர்கள்.

80 ரூவா பாட்டிலை 150 ரூவாய்க்கு விற்று உண்மையான சுகந்திரத்தை அனுபவித்த நம்ம ஊர் டாஸ்மாக் பார்ட்டிகள்.

இப்படி நிறைய இருக்கிறது நேற்று நடந்த கூத்துக்கள், சொலுங்கள் எதற்காக இந்த சுதந்திர தினம் ?

Monday, August 6, 2012

ஆயா சுட்ட வடை - O.S

நம்ம ஊர்ல நேத்து பொறந்த குழந்தை கூட  நர்ஸ் அ பார்த்து என்ன ஆண்ட்ராய்டா?  விண்டோஸ் ஆ? ஜெல்லி பீன் வந்திருச்சா ? னு கேக்குது.



இப்படி எசக்கு பிசக்கா, கணக்கு வழக்கு இல்லாம, ஒரு கண்ட்ரோல் இல்லாம செல் போன் பயன்படுத்துறவங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே போற நம்ம நாட்டில, அடுத்து என்ன என்ன மாதிரி செல் போன் அப்டேட் வர போகுது என்பதை தெரிந்து கொல்ல சென்ற நம்ம உளவுக்குழு அளித்த வெளிப்படையான அறிக்கை இதோ உங்களுக்காக!

ஆண்ட்ராய்ட் மசால் தோசை :


ஆமாங்க ஆண்ட்ராய்ட் OS ன் அடுத்த வெர்சன் இதாங்க! ஜிஞ்சர் பிரட், ஹனி கொம்ப்,ஐஸ் கிரீம், வரிசையில் அடுத்து மசால் தோசை!! தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில்,  உலக தொலைக்காட்சி வரலாற்றில், ஏன் செவ்வாய் கிரகத்தில் அப்டேசனுக்காக காத்திருக்கும் ஏலியனுக்கு கூட இந்த மசால் வாசனையை சுட சுட வெளியிடுவது நாங்கள் தான் !



இந்த புது OS இன் படி, இது உங்கள் கை வாசனையை வச்சே காலைல என்ன சாப்பாடுனு கற்பூரம் அடிச்சி சத்தியம் பண்ணி சொல்லிரும்! ( தயவு செஞ்சி டெஸ்ட் பண்ணும்போது சோத்தாங்க கைல வைங்க - From Android Masal Dosai Instruction Manual)

இன்னாயா காமெடியா இக்கீது? போனுக்கு ஏது மூக்கு னு நீங்க கேக்கலாம்! நீங்க பேசனத கேட்டு சர்ச் பண்ணி சொன்னதே அப்ப போனுக்கு ஏது காதுனு யாராச்சும் கேட்டிங்களா ? ளா ? ளா ? 

விண்டோஸ் கருங்கோ :

விண்டோஸ் மேங்கோ, டெங்கோ, வரிசையில் அடுத்து வருவது கருங்,,கோ!!!!


அதாவது இந்த போன யூஸ் பண்றவங்க போன் பண்ணா கருவாச்சிகளுக்கும், கருவாயன்ங்களுக்கும் கால் போகவே போகாது !!  ஆமா சார் சிட்டு குருவியெல்லாம் டப்பு டப்புனு விழும் சார், ஏய் போனா வராது பொழுது போனா கிடைக்காது வாங்கே வாங்கே!

பிளாக்பெர்ரி RIP:

RIP ன உடனே Rest In Peace னு நினச்சிடாதீங்க! இவங்களோட OS பேர் என்னன்னா Research In Motion னு சொன்னாங்க. கொய்யல மோசன்ல என்னாயா ஆராய்ச்சி. 

ஒரு Blood Test, Urine Test னு பன்னாவாது நம்ம ஊர் சுகர் பேசன்சுக்கு பயன்படும்னு நம்ம பொதுநல பார்வைய நால் ரோடு மூலமா அவங்களுக்கு ஒரு கோரிக்கை வைச்சோம். 

அன்னிக்கு சாயங்காலமே பிளாக்பெர்ரி ஓனர் கிட்ட இருந்து ஒரு போன்! நம்ம  பொது நல சேவைய பாராட்டி அவார்ட் தரனும் னு சொல்லி டிக்கெட் கூட அனுபிச்சானுங்க, நமக்கு தான் விளம்பரம்னா புடிக்காதே வேனானுட்டோம். பேர் மாத்தி வைக்கிறோம் னு ஒத்துகிட்டானுங்க!  

ஆனா RIP னு வச்சிருக்கானுங்க! இப்ப தான் பாதுகாப்பு வேணும்னு கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு வந்திருக்கேன்.

ஆப்பிள் IPS: 

ஆமாங்க ஐ ஒ எஸ் வோட அடுத்த வெர்சன் ஐ பி எஸ். ஸ்டீவ் உயிரோட இருக்கும் பொது கேப்டன் படம்னா உசிரா பாப்பாராம்!, ஒரு கட்டத்துல கேப்டன் வெரியனாவே மாறி IPS எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி கேப்டன மீட் பண்ணுவேன்னு சபதம் எடுத்தார்.



ஆனா பாருங்க அவரால கடைசி வரைக்கும் பாஸ் பண்ணவே முடியல. இப்படி அவரது கேப்டன் மீட் ஆசை நிராசையாவே போய்டுச்சு! இதனால துக்கம் அதிகமாகி அவர் இறந்துடார்னு ஒரு நியூஸ் கூட அண்டர் கிரவுண்டில் சொல்ல படுகிறது.

இப்படி பட்ட ஒரு வரலாற்று சோகத்தை காம்ப்ளிமென்ட் பண்ணவே இந்த ஆப்பிள் IPS :( 

மற்றவைகள் :
  • நோக்கியா தயாரிப்பான சிம்பியனின் அடுத்த வெர்சன் சொம்பியன் !
  • சாம்சுங் இன் தாயரிப்பான படா ஒ எஸ் இன் அடுத்த வெர்சன் வடா !
  • மைக்ரோமாக்ஸ் தாயரிப்பான மோடு ஒஎஸ் இன் அடுத்த வெர்சன் மூடு!


ஆயா சுட்ட வடை = தொடரும் ,,,,,,,

Monday, June 25, 2012

எப்படி எல்லாம் மாட்டி விடறானுங்க!

இன்று கே ஆர் புரம் ரயில் நிலையத்திலிருந்து, எனது அலுவலகத்திற்கு சென்றேன் இரண்டு பேருந்து மாறி செல்லவேண்டும், 4 ரூபாய் தான் கட்டணம்  முதல் பேருந்தில் ஏறினேன் 5 ரூபாய் கொடுத்து அடுத்த நிறுத்தம் என்றேன் அவன் 2 ரூபாயை மீதம் கொடுத்து விட்டு சென்று விட்டான் !

4 ரூவா தான் டிக்கெட்டு ? ஒரு ரூபாய்க்கு பதிலா 2 கொடுதிட்டானே னு பார்த்தேன், சரி டிக்கெட் வாங்கும் போது திருப்பி கொடுத்து விடலாம் (அ) கொடுக்காமல் விடலாம் என்றிருந்தேன்.

கடைசி வரை கண்டக்டரை பிடிக்க இயலவில்லை, அடுத்தடுத்த நிறுத்தம் என்பதால் விரைவில் வந்து விட்டேன், போய் தொலை என்று முனகிக்கொண்டே இறங்கி போகும்போது ஒரு கை என்னை இறுக பிடித்து கொண்டது அய்யயோ 1 ரூபாய திருப்பி கேக்கபோரானோ என்று நிமிர்ந்து பார்த்தேன். டிகேட் செக்கர் !!!!!!



ஹ்ம்ம் செத்தண்டா என எண்ணினேன், என்னை எங்கும் நகர முடியாமல் பிடித்து கொண்ட டிக்கெட் செக்கர் டிக்கெட் எங்கே என்றார். நம்மகிட்ட தான் இல்லையே உள்ளே பார்த்தேன் அந்த கண்டக்டர் சண்டாள பய்யன் நம்மை கண்டுகொள்ளவே இல்லை, இரண்டொரு முறை கூப்பிட்டு பார்த்தேன் ஹ்ம்ம்  ஹூம் நோ ரெஸ்பான்ஸ்! கொஞ்ச நேரம் பர்சை துழாவினேன் ( இல்லன்னு தெரியும் என்ன செய்வது ).

அனைவரும் சென்று விட்டனர், நான் மட்டும் மாட்டிக்கொண்டேன்! இரண்டு மூன்று பேரிடம் பழைய டிக்கெட்டை கொடுத்திருக்கிறான் அந்த கண்டக்டர் !! அதையும் செக்கர் கண்டுபிடித்து விட்டார் !, என்னை பேருந்தின் உள்ளே இழுத்து சென்றார் உள்ளே இருந்த பயணிகள் என்னை ஒரு முறை நோட்டமிட்டு விட்டு வெளியே வழக்கம் போல் வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டனர்.

500 ரூவா தென்டமா என எண்ணிக்கொண்டே பர்சை எடுத்து பார்த்தேன் 300 சொச்சம் தான் இருந்தது, இப்பதான் பயங்கர கலவரமானேன். உள்ளே அழைத்து சென்ற செக்கர் இவருக்கு கொடுப்பா, என்ன பழைய டிக்கெட் லாம் கொடுத்திருக்க என்று பார்மல் ஆக கேட்டுவிட்டு சென்று விட்டார்!

நானும் அந்த ஆளு கிட்ட மறுபடி டிக்கெட் கொடுயா கீழ செக்கர் இருக்கார்ணு கேட்டேன் கண்டுக்கவே இல்லை! அவன் பாட்டுக்கும் பின்னாடி போயிட்டான்! பேருந்து நகர தொடங்கியது எட்டி வெளியே பார்த்தேன் செக்கர் வேறு பேருந்தில் வசூல் செய்து கொண்டிருந்தான் ஓடும் பேருந்தில் தான் இறங்க வேண்டிய நிலைமை !!.

வந்துச்சு பாருங்க கோபம், கொயால அடுத்த வண்டியில டிக்கெட் எடுக்க வே இல்லை.

Saturday, June 9, 2012

ஒண்ணுமே புரியல

                               மறந்து விடலாம் என்றென்னும் போதெல்லாம்
மனதை கனமாக்கும் என் நட்புகள் !
                                    
                                  ஐந்து வருடங்களாக என்னை பிடிக்கும் ஆனால்
என்னை பிடிக்காத என் காதலி!
                                 
                                  ஏன்டா சேர்ந்தோம் என்னத்த செய்தோம் என்று
யோசிக்க வைக்கின்ற என் கல்லூரி!
                              
                          இவன் எப்படி டா டிகிரி வாங்கினான்
 என யோசித்துகொண்டிருக்கும் என் ஆசிரியர்கள் !
                               
            அம்மா என் டாவு வேற யாரையோ கல்யாணம் பன்னிக்க போறாளாம் என்று சொன்னவுடன் , விட்ரா அவ கல்யானதுகுள்ள ரம்யாவ உனக்கு கட்டிவச்சிடலாம்  என்ற என் அம்மா !
                               
                                   அய்யயோ அப்படினா இனிமே நான் ரம்யாவ சைட்
அடிக்க மாட்டேன் என சேம் சைட் கோல் அடித்த என் தம்பி !
                                
                                       என் பய்யன் பெரிய ஆளா வருவான் என்று
இன்னும் என்னை நம்பி கொண்டிருக்கும் என் தந்தை !
ஒண்ணுமே புரியல !


சூர்ய  பிரகாஷ் .K.P

Monday, April 16, 2012

சினிமா என்றால் என்ன ?

வெறும் மூன்று மணி நேரம் என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் செல்லும் ரசிகன் பார்வையில் சினிமா என்பது பொழுது போக்கு, அவன் முதல் வருடம் அசினையும், அடுத்த வருடம் த்ரிஷாவையும் ரசிப்பான். நம்மவர்கள் நிறைய பேர் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் சினிமாவை ஒரு கலை என்று நினைப்பவர்களுக்கு அது ஒரு வரம்.ஆனால் அது சிலர் மட்டுமே. அதிலும் சில படங்களே அந்த வரம் என்ற உணர்வை தருகின்றன.

உதாரணம் வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால், வாகை சூட வா, ஆரண்ய காண்டம், அழகர் சாமியின் குதிரை, தோனி இன்னும் பல. இவற்றை நாம் கொண்டாட வேண்டும்.

இந்த வார விகடனில் செழியன் அவர்கள் Mohsen Makhmalbaf அவர்களுடன் தான் பேசியதை பற்றி எழுதி உள்ளார். ஒவ்வொரு சினிமா ரசிகனும் படிக்க வேண்டியது அது. அது தான் சினிமா. ஆனால் இங்கே நாம் செய்வது கலாச்சார கொலை.

இங்கே கவர்ச்சி காட்டினால் தான் படம் ஓடும் என்று பெரும்பாலான திரைத் துறையினர் நினைக்கிறார்கள்/திணிக்கிறார்கள். அவர்களை தான் நாம் பெரிய இயக்குனர்கள் என்று சொல்கிறோம். எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் என்ன கவர்ச்சி இருந்தது? அதை மக்கள் ரசிக்கவில்லையா?. நிறைய படங்கள் ரசிகர்கள் மீது திணிக்கப்படுகிறது. இது உனக்கான படம், நீ இதைத் தான் பார்க்க வேண்டும். அத்தோடு இன்றைய டிவிக்கள் ஒரு மோசமான படத்தை கூட விளம்பரம் மூலம் நல்லா இருக்கு என்று நம்ப வைக்கின்றன. (இன்னும் இதை நம்புபவர்கள் இருக்கிறார்கள்).

உடனே உலகப் படம் என்றால் அது வேறு மொழி படம் தான் என்று எண்ண வேண்டாம். நம்மவர்களே அதை தருகிறார்கள். உதாரணம் - வெங்கயம், ஆரண்ய காண்டம்.

எப்படியான சினிமா எடுக்கப்படவேண்டும் ?

எப்படியும் வேண்டாம் அது சினிமாவாக இருந்தால் போதும். ஆம் கதை, அதற்கு தேவையான காட்சிகள் மட்டுமே. (இன்றைய படங்களை எண்ணிப் பாருங்கள், நான் சொல்வது புரியும் )

நடிகன் என்றால் யார்?

நம்மவர்களுக்கு நடிகன் தான் படமே, முதலில் இதை உடைக்க வேண்டும். கதை தான் படத்தின் ஹீரோவே, அது தான் இங்கே சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தளபதி, தல. இங்கே ஜேம்ஸ் கேமரூன் சொன்னதாக சொன்ன ஒன்று தான் சொல்ல வேண்டும்,

உங்கள் அடுத்த படம் எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு அவர் பதில், 95 % முடிந்து விட்டது, ஷூட்டிங் மட்டுமே பாக்கி. அதாவது கதை, திரைக்கதை தயாரித்தல் தான் படமே. மற்றபடி நடிப்பவர்கள் கதாபாத்திரம் மட்டுமே.

ஒரு நல்ல சினிமாவுக்கு வேண்டியது கதைக்கு ஏற்ற நடிகன், நடிகனுக்கு ஏற்ற கதை அல்ல.

ரசிகனின் எல்லை என்ன?

எல்லை எதுவும் வைத்து இருந்தால் அவன் ரசிகனே இல்லை.நிறைய எதிர்பார்க்க வேண்டும்.

ரசிகன் எப்படி தொண்டனாய் மாறுகிறான்..?

தான் ரியலில் செய்ய முடியாததை, ரீலில் ஒருவர் செய்வதை பார்க்கும் போது. ஆனால் அது ரீலில் மட்டுமே சாத்தியம் என்று புரிந்தும். ஆனால் இந்த நிலை இன்று மாறி வருகிறது.

அரசியல் முடிச்சினை எப்போது ஒரு நடிகன் போடுகிறான்...?

தன் ரசிகன் ஒரு முட்டாள் என்று உணரும் போது. (இன்றைய சூழல் இது, எம்.ஜி.ஆர் பல ஆண்டு ஒரு கட்சியில் இருந்து பின்னர் தலைவர் ஆனவர், இன்றைய சூழலிலும் சிலர் அப்படி இருக்கிறார்கள், ஆனால் தலைவர் ஆக முடியவில்லை)
பிரபு கிருஷ்ணா 

Friday, March 23, 2012

பெண்ணே

பெண்களை பார்த்தல் சாயாத என் மனது
இன்று உண்கண்களை பார்த்தவுடன் சரிந்து விட்டது
உன்னை நான் எப்படி பார்க்கிறேன் தெரியுமா ?
கடவுளின் கற்பனையால் கூட செதுக்க முடியாத சிலை நீ !
பெண்ணே அதுதானே உண்மையான கலை !
நீ இல்லை என்றால் எனக்கு நானே செய்து கொள்வேன் கொலை !
கடவுளே இது யாருடைய பிழை !!

எனக்காக என் நண்பன் கார்த்தீ......க்  

Tuesday, March 6, 2012

லட்சியம்

பட்ட காயங்கள் கூட இன்னும் முழுமையாக ஆறவில்லை 
அதற்குள் இன்னொரு பாவை 
என் எல்லைக்குள் இருந்து உற்று நோக்கினேன்
நேராக வா என்றது லட்சியம் 
யு டர்ன் என்றது மனது 
போதையிலே மிகபெரிய போதை பெண் போதை !
 இது லட்சியத்திற்கு தெரியவில்லை , நான் என்ன செய்ய ?
பாவையை கோவித்துக்கொண்டால் லட்சியத்தை அடைந்துவிடுவேன் !
லட்சியத்தை கோவித்துக்கொண்டால் ?

Thursday, February 2, 2012

"கவுன்சிலிங்" (நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்)


நீங்கள் இந்த பழக்கங்களிலிருந்து விடுபட்டால் நீண்ட நாட்களுக்கு
மகிழ்ச்சியாக வாழலாம் .

நான் இப்பவும் மகிழ்ச்சியாக தானே இருக்கேன் ?

அது இல்லை சார் உங்களுக்கு ஆரம்பகட்ட புற்றுநோய் வந்திருக்கிறது,

(தனக்கு நன்மை என்றால் ஏற்று கொள்ளக்கூடிய மனது , தான் பாதிக்க பட்டிருக்கிறோம் என்றவுடன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது )

இல்லை நீங்கள் பொய் சொல்றீங்க,ஏமாத்த பாக்குறீங்க. ஆவேசமானான் மதன் கவுன்சிலிங் மையத்தை விட்டு வெளியே வந்தான் .

ஒரு சிகிரட்டை பற்ற வைத்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.பதற்றமாக இருந்தான் ,நினைவுகள் அவனை குழப்பியது, தன் வாழ்க்கையை பின்நோக்கினான்,,,

·  
     

வாடா மதன் சும்மா கொஞ்சமா குடிச்சு பாருடா ,

இல்லடா உத்திரசாமி இதெல்லாம் எனக்கு பிடிக்காது

மதன் இதெல்லாம் எல்லாரும் காமன்ஆ பண்றது டா நீ என்ன கொலை குத்தமா பண்ண போற ?

அது இல்லடா குடிக்கிரதால நிறைய பிரச்சனைகள், நோய்கள் நமக்கு வரும் ,சீக்கிரமா இறக்க நேரிடும் டா .

ஹா ஹா , நம்ம இர்பான் ப்ரோபெசர் எந்த பழக்கமும் இல்லாதவர் 40 வயசுலேயே செத்து போய்ட்டாரு , என் மாமன் சின்ன வயசுல இருந்து குடிக்கிறாரு 55 வயசாகியும் நல்லாதாண்டா இருக்காரு , புடிடா சும்மா கண்ணமூடிக்கிட்டு ஒரே மொடக்குல குடிச்சிரு,,,

தயங்கியவாரே அதை மதன் வாங்கினான் (இந்த இடத்தில் தான் வாழ்க்கையின் சூட்சமம் ஒழிந்திருக்கிறது ! வாங்க மறுத்தவன் வாழ்கையை வெல்கிறான் , தயங்கியவன் துன்பத்தில் மூழ்கிறான்,நம் நாட்டின் சாபக்கேடு மறுத்தவனை விட தயங்கியவனே அதிகம் !)   

என்னடா இப்படி கசக்குது ?

மொதல அப்படித்தாண்டா இருக்கும் போக போக சரியாகிடும் .

இவ்வாறு ஆரம்பித்தது

'நண்பனின் பிறந்த நாள்' , 'ஊர்ல திருவிழா' , 'வீட்ல விசேஷம்' ,'சுற்றுலா',என வளர்ந்து, 
'நான் சந்தோஷமாக இருக்கிறேன்' அதனால் குடிக்கிறேன்,
'நான் துக்கமாக இருக்கிறேன்' அதனால் குடிக்கிறேன், 
'இன்னைக்கு ரொம்ப போர்' அதனால்,
'வாரத்துல ஒரு நாளாவது',
 'ஒருநாள் விட்டு ஒரு நாள் இல்லனா கைலாம் நடுங்குது', 
'நைட் ல கொஞ்சமாவது குடிக்கலைனா தூக்கம் வர மாட்டங்கிது'

என்ற அளவிற்கு வந்து நின்றது,

திரும்பி பார்க்கையில பத்து ஆண்டுகள் ஓடியிருந்தன , கூடவே புகை பழக்கமும் ஒட்டிவிட்டது .எந்த ஒரு வேலைக்கும் மதன் ஒழுங்காக போனதில்லை,

விளைவு இன்று வீட்டாரால் வழுக்கட்டாயமாக கவுன்சிலிங்கிற்கு அழைத்து செல்லப்பட்டான் , பரிசோதனைகள் புற்றுநோயை உறுதி படுத்தியுள்ளது ,

·  
       
                
வீட்டிற்கு வந்தவுடன் தனது கணினியை நோக்கினான், பேஸ் புக் ஓபன் ஆகியிருந்தது பச்சை நிற புள்ளியை தொடர்ந்து உத்திரசாமி என இருந்தது ,

பரஸ்பரம் நல விசாரிப்புக்கு பின் ,

uthirasamy: என்ன ?

me: நீ இன்னும் மது அருந்துகிறாயா?

uthirasamy:இல்லை டா

me:ஏன்

uthirasamy: சிலவருடங்களுக்கு முன் நான் உடல்நிலை சரியில்லைனு மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது,அங்கு எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததால் நான் முற்றிலும் மது பழக்கத்தை விட்டு விட்டேன் ,,,
Sent at 2:01 PM on Thursday


நீயும் இந்த பழக்கத்த விட்டுரு டா, நல்ல வேல ஸ்க்ரீனிங் பண்ணினாதனால தான் நான் உயிரோட இருக்கேன் , நார்மல் ஆ எல்லாரும் 40 வயசுல பண்ணுவாங்க நம்மள மாதிரி அதிகமா குடிக்கிறவங்க 30 ல பண்ணிகிட்டா கூட தப்பில்ல
Sent at 2:39 PM on Thursday

me: உன் மாமா ?

uthirasamy: அவர் அப்பயே இறந்துட்டாரு , அதுக்கும் இந்த குடி தான் காரணம்

mathan is offline. Messages you send will be delivered when
mathan comes online



      தலையில் மிகப்பெரிய பாரம் வைத்தது போல் தோன்றியது மதனுக்கு, சிறிய சந்தோசத்திற்காக பறந்து விரிந்த இந்த உலகை மறந்து விட்டோம், அதற்கான விலையாக தன இளமையையும் பத்து வருடங்களையும் கொடுத்திருக்கிறோம்,தான் சேர்த்தது என்று ஒன்றும் இல்லை ஆனால் அழித்தது ஆயிரமாயிரங்கள், இனி இழந்ததை பற்றி கவலை படுவது வீண் !
         
             உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான் ,,

          வாழ்கையை வாழ முடிவு செய்தான் , வேக வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான் ! 


சூர்யபிரகாஷ்.பெ 








Sunday, January 29, 2012

நாடகம் "நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்"


                              
சமையலுக்கு காய்கறிகளை நறுக்கிகொண்டிருந்தார் மாணிக்கம் ,

அப்பா இதோட பீடி காசு 25 ரூபா தரணுமாம் செட்டியார் சொல்ல சொன்னார், என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தான் மாணிக்கத்தின் மகன் சுரேஷ்.

 சரிடா , பீடி எங்கே ?

               இந்தாப்பா ,,,

(பீடியை வாங்கிவிட்டு), சுரேஷ் அம்மா போட்டோவை துடைச்சு விளக்கு போட்டுட்டு போய் படிடா , அப்பா சாப்பாடு செஞ்சுட்டு கூப்பிடுறேன்..

              சரிப்பா ,,

ஒரு பீடியை பற்ற வைத்து புகைத்தவாரே சமையல்  வேலைகளில்   ஐக்கியமானார் மாணிக்கம்.

            அப்பா அம்மா போட்டோவுக்கு விளக்கு வச்சிட்டேன் ..

              சரி போய் படி..

            அப்பா இன்னொன்னு சொல்லணும்

              என்ன ?

        நாளானிக்கு ஸ்கூல் சார்பா நம்ம ஊர் கோயில் திடல்ல ஒரு நாடகம் போடறாங்க , அதுல நானும் நடிக்கிறேன்பா, சரவணன் வாத்தியார் தான் அதுல எனக்கு அப்பாவா நடிக்கிறார் பா,,

சிறிது நேரம் யோசித்தவராய், நல்லா நடிக்கணும் டா என்று மட்டும் கூறினார்

அடுத்தநாள் சுரேஷை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார் மாணிக்கம் போகும் வழியில் செட்டியார் கடையில் நின்றார்.

செட்டியாரே ஒரு கட்டு பீடி கொடுப்பா,,,,,

 நேத்து சாயங்காலம் தான்யா உன் பையன்கிட்ட ஒரு கட்டு பீடி கொடுத்து விட்டேன் அதுக்குள தீத்துட்டியா ?

கண்ணு வைக்கதையா, பீடிய கொடு

நீ இன்னும் பழைய பாக்கியே 25 ரூபா தரனும்யா !  

25 ரூபாலாம் ஒரு காசாயா ? என் பையன் சிங்கக்குட்டி நாளைக்கு நாடகத்தில நடிக்க போராம்யா பாரு ஒரு நாள் அவன் எம்.ஜி.ஆர் மாதிரி பெரிய ஆளா வருவான் அன்னைக்கு உன் கடையையே விலைக்கு வாங்குவான் !!

செட்டியார் சிரித்துக்கொண்டே , இந்தா பீடி இதோட 30 ரூபா ஆச்சு இந்த காச மொதல கூடு என்கடைய அப்பறம் விலைக்கு வாங்கலாம் ,

தரேன் செட்டியாரே தரேன் என்றவாறே ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டு இடத்தை காலி செய்தார் மாணிக்கம்.

ஒரு வழியாக நாடகம் நடக்கும் நாள் வந்தது , ஊர் மக்கள் அனைவரும் கோயில் திடலில் கூடியிருந்தனர்.

மேடையை பார்த்தவாரே அமர்ந்து இருந்தார் மாணிக்கம் ,

நாடகத்தில் நடிப்பவர்களெல்லாம் மேடைஏறினர் , சுரேஷின் ஆசிரியர்கள், சுரேஷ் மற்றும் சிலர் அங்கு இருந்தனர் , சுரேஷ் யாரையோ தேடிக்கொண்டிருந்தான் மாணிக்கத்தை கண்டவுடன் 100 வாட்ஸ் பல்பு போல புன்னகைத்தான், கைகளால் சைகை காண்பித்தான் .

மாணிக்கத்திற்கு பெருமை தாளவில்லை ,அருகில் இருப்பவர்களிடம் அது என் பையன் தாங்க தோ அந்த வெள்ளை சட்டை என்று கூறிக்கொண்டிருந்தார் ,வேக வேகமாக ஜேப்பில் கையை விட்டு ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தார் வானத்தை நோக்கி ரயில் புகை போக்கி போல புகை விட்டார் , தன்னை மறந்து விசில் அடித்தார் ,

நாடகத்தில்  (அந்த காட்சியில்)

   சுரேஷின் அப்பா புற்று நோயால் இறந்து விடுகிறார் , அவரை கட்டிபிடித்து சுரேஷ் அழுது கொண்டு இருக்கிறான் .
புகை பிடிப்பது , புகையிலை போடுவது , மது அருந்துவதால் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள் என ஆசிரியர் ஒருவர் விளக்கி கொண்டிருந்தார்.        

சுரேஷ் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான் , ( சரியான சிகிச்சை மூலம் புற்று நோயை ஆரம்பத்திலே குணப்படுத்திவிடலாம் என ஆசிரியர் கூறிக்கொண்டிருந்தார்)

நாடகம் முடிந்தவுடன்

வேகமாக ஓடி வந்த சுரேஷ் மாணிக்கத்தை கட்டியனைத்துக்கொண்டு கதறுகிறான் ,

அழுவாதடா ,, ஏன் அழுவுற ?

புகை பிடிச்சா புற்றுநோய் வரும்னு வாத்தியார் சொன்னார்ல அப்ப நீ என்ன விட்டிட்டு போய்டுவியாப்பா ?

தொண்டை அடைத்துக்கொண்டது மாணிக்கத்திற்கு , கண்கள் குளமாகின , கைகள் லேசாக நடுங்கியது, சுரேஷை தூக்கி தோள் மேல் போட்டுக்கொண்டு நடந்தார் ..

போகும் வழியில் செட்டியாரின் கடையை பார்த்தார் .

செட்டியாரே இந்தா 30 ரூபா என கடைக்குள் பணத்தை வைத்தார் .

மாணிக்கம் பீடி வேணாமா ? என்ற கேள்விக்கு மவுனமாய் கடையை கடந்தார் மாணிக்கம் ,,,
                                                       சூர்யபிரகாஷ்.பெ
           

Thursday, January 19, 2012

பசுமை பயணம்

     பதிவுலக நட்புகளே இந்த புதிய வருடத்தில் புது பொலிவுடன் நாங்கள் ஒரு செயலில் இறங்கியுள்ளோம் , 

      சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எங்களது ஈஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பசுமைவிடியல் என்ற பெயரில் ஒரு இயக்கம்  ஏற்படுத்தியுள்ளோம் . சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களால்  இம்மாத முதல் வாரத்தில் குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸில் வைத்து பதிவர்கள் முன்னிலையில் இவ்வியக்கத்தின் இணைய தளம் தொடங்கி வைக்கபட்டது.



     முதல் களப்பணியாக மரம் நடுதல், விழிப்புணர்வுக்கான முதல் மரக்கன்றை எம்.எல்.ஏ அவர்கள் நட்டு வைத்தார். இனி இதர பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன...



பசுமை விடியல் - ஒரு அறிமுகம்


     பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும்.


ஆனால்...


    மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் பல்வேறு ஆபத்துகள்...


      2020 ஆம் ஆண்டில் முழுமையாக உருகிவிடும் என்று கணிக்கப்பட்ட ஆர்ட்டிக் பனிப்படிவுகள் 2015 ஆம் ஆண்டே உருகிவிடும் என்று வேறு தற்போது விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்...!!


      உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான் இருக்கின்றன...!

     மக்களை பற்றி நாடு அக்கறை கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?! அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டு செயல் படுத்தபட வேண்டும்...!

      இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்...!

     கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களை கோர்த்து இருக்கிறோம்...!

இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது !!

     ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்...இது வெறும் ஆசை அல்ல...திடமான நம்பிக்கை !!




பதிவுலக உறவுகளே !


     உங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் எங்களை இன்னும் சிறப்பாக வழிநடுத்தும் என்பதால் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்கிறேன். மேலும் உங்களின் மேலான ஒத்துழைப்பும்,வாழ்த்துக்களும் என்றும் எங்களுடன் இருக்க வேண்டுமென அன்பாய் வேண்டுகின்றேன்.


     இனி தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்...........அவசியம் செல்லவும். உங்களின் வருகைக்காக அங்கே காத்திருக்கிறோம்.



பிரியங்களுடன்
சூர்ய பிரகாஷ். பெ