Pages

Monday, August 6, 2012

ஆயா சுட்ட வடை - O.S

நம்ம ஊர்ல நேத்து பொறந்த குழந்தை கூட  நர்ஸ் அ பார்த்து என்ன ஆண்ட்ராய்டா?  விண்டோஸ் ஆ? ஜெல்லி பீன் வந்திருச்சா ? னு கேக்குது.இப்படி எசக்கு பிசக்கா, கணக்கு வழக்கு இல்லாம, ஒரு கண்ட்ரோல் இல்லாம செல் போன் பயன்படுத்துறவங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே போற நம்ம நாட்டில, அடுத்து என்ன என்ன மாதிரி செல் போன் அப்டேட் வர போகுது என்பதை தெரிந்து கொல்ல சென்ற நம்ம உளவுக்குழு அளித்த வெளிப்படையான அறிக்கை இதோ உங்களுக்காக!

ஆண்ட்ராய்ட் மசால் தோசை :


ஆமாங்க ஆண்ட்ராய்ட் OS ன் அடுத்த வெர்சன் இதாங்க! ஜிஞ்சர் பிரட், ஹனி கொம்ப்,ஐஸ் கிரீம், வரிசையில் அடுத்து மசால் தோசை!! தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில்,  உலக தொலைக்காட்சி வரலாற்றில், ஏன் செவ்வாய் கிரகத்தில் அப்டேசனுக்காக காத்திருக்கும் ஏலியனுக்கு கூட இந்த மசால் வாசனையை சுட சுட வெளியிடுவது நாங்கள் தான் !இந்த புது OS இன் படி, இது உங்கள் கை வாசனையை வச்சே காலைல என்ன சாப்பாடுனு கற்பூரம் அடிச்சி சத்தியம் பண்ணி சொல்லிரும்! ( தயவு செஞ்சி டெஸ்ட் பண்ணும்போது சோத்தாங்க கைல வைங்க - From Android Masal Dosai Instruction Manual)

இன்னாயா காமெடியா இக்கீது? போனுக்கு ஏது மூக்கு னு நீங்க கேக்கலாம்! நீங்க பேசனத கேட்டு சர்ச் பண்ணி சொன்னதே அப்ப போனுக்கு ஏது காதுனு யாராச்சும் கேட்டிங்களா ? ளா ? ளா ? 

விண்டோஸ் கருங்கோ :

விண்டோஸ் மேங்கோ, டெங்கோ, வரிசையில் அடுத்து வருவது கருங்,,கோ!!!!


அதாவது இந்த போன யூஸ் பண்றவங்க போன் பண்ணா கருவாச்சிகளுக்கும், கருவாயன்ங்களுக்கும் கால் போகவே போகாது !!  ஆமா சார் சிட்டு குருவியெல்லாம் டப்பு டப்புனு விழும் சார், ஏய் போனா வராது பொழுது போனா கிடைக்காது வாங்கே வாங்கே!

பிளாக்பெர்ரி RIP:

RIP ன உடனே Rest In Peace னு நினச்சிடாதீங்க! இவங்களோட OS பேர் என்னன்னா Research In Motion னு சொன்னாங்க. கொய்யல மோசன்ல என்னாயா ஆராய்ச்சி. 

ஒரு Blood Test, Urine Test னு பன்னாவாது நம்ம ஊர் சுகர் பேசன்சுக்கு பயன்படும்னு நம்ம பொதுநல பார்வைய நால் ரோடு மூலமா அவங்களுக்கு ஒரு கோரிக்கை வைச்சோம். 

அன்னிக்கு சாயங்காலமே பிளாக்பெர்ரி ஓனர் கிட்ட இருந்து ஒரு போன்! நம்ம  பொது நல சேவைய பாராட்டி அவார்ட் தரனும் னு சொல்லி டிக்கெட் கூட அனுபிச்சானுங்க, நமக்கு தான் விளம்பரம்னா புடிக்காதே வேனானுட்டோம். பேர் மாத்தி வைக்கிறோம் னு ஒத்துகிட்டானுங்க!  

ஆனா RIP னு வச்சிருக்கானுங்க! இப்ப தான் பாதுகாப்பு வேணும்னு கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு வந்திருக்கேன்.

ஆப்பிள் IPS: 

ஆமாங்க ஐ ஒ எஸ் வோட அடுத்த வெர்சன் ஐ பி எஸ். ஸ்டீவ் உயிரோட இருக்கும் பொது கேப்டன் படம்னா உசிரா பாப்பாராம்!, ஒரு கட்டத்துல கேப்டன் வெரியனாவே மாறி IPS எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி கேப்டன மீட் பண்ணுவேன்னு சபதம் எடுத்தார்.ஆனா பாருங்க அவரால கடைசி வரைக்கும் பாஸ் பண்ணவே முடியல. இப்படி அவரது கேப்டன் மீட் ஆசை நிராசையாவே போய்டுச்சு! இதனால துக்கம் அதிகமாகி அவர் இறந்துடார்னு ஒரு நியூஸ் கூட அண்டர் கிரவுண்டில் சொல்ல படுகிறது.

இப்படி பட்ட ஒரு வரலாற்று சோகத்தை காம்ப்ளிமென்ட் பண்ணவே இந்த ஆப்பிள் IPS :( 

மற்றவைகள் :
  • நோக்கியா தயாரிப்பான சிம்பியனின் அடுத்த வெர்சன் சொம்பியன் !
  • சாம்சுங் இன் தாயரிப்பான படா ஒ எஸ் இன் அடுத்த வெர்சன் வடா !
  • மைக்ரோமாக்ஸ் தாயரிப்பான மோடு ஒஎஸ் இன் அடுத்த வெர்சன் மூடு!


ஆயா சுட்ட வடை = தொடரும் ,,,,,,,

1 comment:

  1. Hahahahahaha appavum aayavaiyum vadaiyaiyum marakka mudiyavillaiyaada ???

    ReplyDelete