Pages

Wednesday, November 7, 2012

பசுமை விடியல் ஒரு விளம்பரமா ?

காரணமில்லாமல் இங்கு எந்த ஒரு செயலும் நடைபெறுவதில்லை. இப்பொழுது இருக்கும் மூத்தகுடிகளை கேட்டு பாருங்கள் நாற்காலி செய்வதற்காக ஒரு மரம் வெட்டபட்டால் அந்த இடத்தில் இரண்டு மரமாவது நடப்படும்.

நாட்கள் செல்ல செல்ல நம் புவி காடுகளின் பெரும்பகுதி கான்கிரீட் கட்டடங்களாலும், ரியல் எஸ்டேட்களாலும் விழுங்க பட்டுவிட்டது! இன்று 20% மேற்பட்ட காடுகளை காணவில்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் 2 % விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டது என்று நடுவணரசு கூறுகிறது ! காரணம் என்னவென யோசிக்க முதல் பத்தியை மீண்டும் படியுங்கள் அது இப்பொழுது வரலாறாகிப்போனது.

இங்கே ஒரு சமன்பாடு விடுபட்டு விட்டது அதை மீண்டும் சமநிலை படுத்தத் வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.அதற்கான ஒரு முயற்சி தான் இந்த பசுமை விடியல். மரம் நடுதல் பற்றி அனைவருக்கும் இங்கே விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் சிலர் செய்வது ஒரு நாளில் சில மரம் நடுவர் பின்பு அதை மறந்து விட்டு அவர்கள் வேலையை கவனிக்க சென்று விடுவர்.

இன்னும் சிலர் ஒரு பத்து பேர் சேர்ந்து கொள்வர் பெரும்பாலும் தோழர்களாக இருப்பர் வார இறுதி நாட்களில் மரம் நடும் வேலையை செய்வர் ஆனால் அவர்களும் 2,3 வாரங்களில் விட்டு விடுவர்.

இன்னும் சிலர் தான் ஊரை சுத்த படுத்தினேன் என்று முகநூலில் பகிர்வர், மரம் நடுவர் போதிய லைக்குகள் கிடைக்கவில்லை என்றவுடன் ஒதுங்கி விடுவர். பின்பு மற்றவர்களின் குறையை கண்டு பிடிக்க சென்று விடுவர்.

ஆனால் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து இயங்க தூண்டும் ஒரு முயற்சியே இது.ஊர் கூடி தான் தேர் இழுக்க முடியும். இப்பொழுது நிறைய பேர் முன் வந்து மரம் நடுகிறார்கள். பரவலாக முன்வைக்கப்படும் கேள்வி, மரம் நடுவதை ஏன் முகநூலில் பகிரவேண்டும் இது வீண் விளம்பரம்.

அதற்கான பதில் இதோ, இன்று காஞ்சிபுரத்தில் இரண்டு கிராம இளைஞர்கள் தாமாக முன்வந்து தங்கள் கிராமத்தில் மரங்களை நட்டு பராமரிக்கின்றனர். இது நடைபெறுவதற்குள் அங்கு எவ்வளவு பிரச்சனைகள் என்பது ஒருபுறம்.

ஐ டி கம்பனியில் வேலை பார்த்துக்கொண்டே வார இறுதியில் சொந்த ஊருக்கு சென்று மரம் நடுவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒருவர்

 தன் சொந்த ஊரில் கிடைக்கும் இடங்களில்லாம் பஞ்சாயத்து அனுமதியுடன் மரம் நடும் ஒருவர்.

பசுமை விடியலை போன்று நானும் இங்கு மரம் நடவேண்டும் என் ஊர் மக்களை இணைத்துக்கொள்ள வேண்டும் ஆனால் தமிழ் பெயர் வேண்டாம் என்று கேட்கும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர்.

இங்கு எனக்கு மரம் கிடைக்கவில்லை ஆனால் மரம் நட வேண்டும் மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளகொள்ளவேண்டும் என்று என்று சவுதியில் இருந்து ஒருவர். இன்னும் பலர் இன்று முக நூலில் பதியப்படும் புகைப்படத்தை பார்த்து தானாக முன்வருகின்றனர், மரம் நடுகின்றனர். இங்கே விளம்பரம், புகழ் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

எத்தனை  பேருக்கு தெரியும் இந்த பசுமை விடியலை நிர்வகிக்கிரவர்கள் யார் யார் என்று ?. கிட்டத்தட்ட 75 % தெரியாது என்று தான் சொல்வார்கள்.அது தான் உண்மை, ஒருவரை மையமாக கொண்டு  இயங்கவில்லை என்பதால் கூட அது இருக்கலாம்.

இங்கே தன் படம் வரவேண்டும் என்பதற்காக மரம் நடுபவர்களும் இருக்கிறார்கள் ஆனால் அந்த மரம் ஏதாவது ஒரு வழியில் பாதுகாக்க படுகிறது என்பதை மறுக்க முடியுமா (அ ) அதை பார்த்து நாலு பேர் ஆர்வமானால் ?

மரம் நடுதல் , சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரை பேச்சு - போட்டிகள், கிராமம் தத்தெடுத்தல், இன்னும் பல எதிர்கால திட்டங்களுடன் இந்த பசுமைவிடியல் நகர்ந்து கொண்டே இருக்கும்  அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எல்லாவற்றிகும் மேலாக பசுமைவிடியல்  ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறப்போகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் :)

3 comments:

  1. தொடரட்டும் பசுமை விடியல்.... வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ஓராண்டு நிறைவு பெற்றதற்கு முதலில் வாழ்த்துக்கள்...

    நல்ல விளக்கம்... மேலும் தங்களின் சேவை சிறப்பாக அமையட்டும்... தொடரட்டும்...

    ReplyDelete
  3. அன்பின் சூர்ய பிரகாஷ் - பசுமை விடியல் நல்ல தொரு சமூக சேவை -தொடரட்டும் - பின்புலத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் கவலைப் பட வேண்டாம் - அவரவர் வேலைகளை அவரவர் செய்யட்டும் - குறிக்கோள் நிறைவேறட்டும் - அவ்வளவு தான் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா .

    வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன்

    நட்புடன் சீனா -

    ReplyDelete