Pages

Thursday, July 11, 2013

Bhaag Milkha Bhaag திரைப்படம்

நேற்று இரவு 7.30 க்கு சினிமாக்சில் பார்த்தேன். அருமையான திரைப்படம், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம்.



மில்கா சிங் என்ற இந்திய தடகள நாயகனின் வாழ்க்கையை தழுவி எடுக்கபட்டிருக்கும் படம் .1950 - 60 களில் பயினிக்கிறது, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து தப்பி வருகிறார் மில்கா ! அவரது மொத்த குடும்பமும் கொல்லபடுகிறார்கள், அக்காவின் குடும்பத்தை தவிர. பாகிஸ்தானிலிருந்து தப்பியவர்களின் முகாம், துயரம், சிறுவயது மில்காவின் மனப்போராட்டம் என அத்தனையும் வலிகள். அதன் பின்பு அவர் வாழ்க்கை, இந்திய இராணுவம், காதல், தடகளம் பதக்கங்கள் என மூன்று மணிநேரம் காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.

முழு படத்தையும் தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் பர்ஹான் அக்தர், கடுமையான உழைப்பு தெரிகிறது, தடகளதிற்கு ஏற்ற உடற்கட்டு , குறிப்பாக ஒட்ட பந்தையத்தில் நிஜமாகவே மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறார், அதிவேகமாக ! இவர் நடிக்க வில்லை மில்கா சிங்காகவே மாறியிருக்கிறார் !

காட்சிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு பெரிய பலம், இயக்குனர் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டர் பிரசூன் ஜோஷி இருவரும் இந்த படத்தை சீன் பை சீன் செதுக்கி இருக்கிறார்கள்.

மறக்கப்பட்ட இந்திய தடகள நாயகனான மில்கா சிங்கின் வாழ்கையை சித்தரிக்கும் இந்தப்படம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று.



2 comments:

  1. பார்க்க நினைத்திருக்கும் படம்..... இந்த ஞாயிறு பார்க்க வேண்டும்!

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.....

    ReplyDelete
  2. அருமையான படம். இந்த படத்தை எல்லா மொழிகளிலும் டப்பிங் செய்து , இளைய சமுதாயமும், எல்லா இந்தியர்களும் பார்த்து, ஊக்கம் அடைந்தால்.. எவ்வளவு நன்றாக இருக்கும்!

    ReplyDelete