Pages

Tuesday, January 3, 2012

விளையாட்டு


அதீதம் இணைய இதழில் வெளியான சிறுகதை (எமது சொந்த படைப்பு)

டேய் யாருடா ராணி?


வினோத்தும் ரமேசும் என பதில் வந்த பின், சரவணன் அடித்த கோலியின் வேகத்தில் இரண்டாய் பிளக்கிறது வினோத்தின் கோலி.


டேய் நீ பெரிய கோலி வச்சுக்கிட்டு சின்னதா இருந்தா உடைக்கிறியா? இரு இரு நான் ஊருல இருந்து வரும் போது நாலு பெரிய கோலி வாங்கிட்டு வரேன். அப்புறம் பாரு என்று வினோத் சீறினான்.


ஊருக்கா ? எந்த ஊருடா?


மெட்ராஸ் டா. எங்க அத்த ஊர்ல இருந்து வந்துருக்கு. இன்னிக்கு ராத்திரி நாங்க ரயில்ல போறோமே. அப்புறம் ஆனந்த் இருக்கான் அவன் கூட நிறைய விளையாடுவேனே! அப்புறம் பீச்சுக்கு போவேனே !. இன்னும் நிறைய இருக்கு தெரியுமா?


முடித்து விட்டு ஒரே மூச்சில் வீட்டுக்கு வந்த வினோத் அத்தையை காணாமல்,


அம்மா, அம்மா


என்னடா?


அத்த எங்க?


ஊருக்கு போயிட்டாங்கடா.


ம் போ, நீ பொய் சொல்ற. சொல்லும் போதே வெளியிலிருந்து வந்த அத்தை,


உன்ன விட்டுட்டு போவேனா மருமகனே ? துணியெல்லாம் எடுத்து வச்சுக்க சாப்பிட்ட பிறகு போலாம்.

ம்ம்ம் சரி ....

அம்மா எனக்கு தீபாவளி க்கு எடுத்த பேன்ட் சட்ட எடுத்து வைமா . அப்புறம் அந்த நோட் வேணும் ,,

எதுக்கு டா நோட் ?

ரப் நோட் மா

அதான் எதுக்கு ?


அது அங்க பெரிய கடல் இருக்குல்ல , அதான் கப்பல் செஞ்சு விட்டு விளையாடலாம்னு தான் . இங்க ஊர்ல மழை பேஞ்சா தான் விட முடியுது.


ஹா ஹா ஹா, அடப்பாவி சரி சரி நிறைய கப்பல் விடு. என்று சிரித்துக் கொண்டே காபி போட போனாள் அம்மா .


தீபாவளிக்கு எடுத்த சட்டை, பேண்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பிய பயணம், ஆறு மணிக்கு அத்தை ரயில் நிலையத்தில் எழுப்பிய போது முடிந்தது.


மாமாவின் காரில் ஏறி அவ்வளவு காலையிலும் அவசரமாய் இந்த மக்கள் எங்கு செல்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டு இருந்த போதே வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.ஆனந்த் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.


நீ தூங்குறதுன்னா தூங்கு வினோத் அப்புறம் அத்த எழுப்பி விடறேன்.


இல்ல அத்த ஆறு மணிக்கு மேல தூக்கம் வராது எனக்கு.


சரி போயிட்டு குளிச்சுட்டு வா,

அதை கவனிக்காதவாறு வேகமாக மாடிக்கு ஓடினான் வினோத்
மெட்ராஸ் பெரியதாய் இருந்தது மிகவும் பெரியதாய் , வானுயர்ந்த கட்டிடங்கள் , நிறைய பஸ் கள் , வாகனகள் என அனைத்தும் வினோத்தை கவர்ந்ததது.

வினோத் இந்தா டீ குடி , கீழ ஆனந்த் வீடியோ கேம் வச்சிருப்பன் போய் விளையாடுங்க

சரி அத்த ,,


“இரண்டு நாளாய் என்னடா வெறும் வீடியோ கேம் விளையாடுற? வாடா வெளிய போயி பசங்க கூட, கோலி விளையாடலாம்” என்று வினோத் அலுத்துக் கொள்ள


கோலியா அப்டின்னா? என ஆச்சர்யத்துடன் கேட்டான் ஆனந்த்.


அடப்பாவி கோலி குண்டு தெரியாதா? ஒரு கோலிய இன்னொன்னு வச்சு குறிபார்த்து அடிப்பாங்க.


ஓ அதுவா? அதெல்லாம் விளையாண்டதே இல்லை.


டேய் அப்போ பம்பரம்.கபடி,கண்ணாமூச்சி, ஓடிப் பிடிக்கிறது எல்லாம்?


டேய் இதென்ன பட்டிக்காடா ? இங்க கிரவுண்ட் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு. அதுலயும் கிரிக்கெட் தான் விளையாடுவாங்க. அதுக்கே அடி பட்டுடும்னு சொல்லித்தான் அம்மா அனுப்பறது இல்லை.


அப்போ உன் கூட்டாளிங்க?


ஹா ஹா ஹா ,அது யாரு கூட்டாளி?


உன் ஃபிரண்ட்ஸ்?


எல்லாம் ஸ்கூல்ல தான் என கூறிவிட்டு வீடியோ கேம் பக்கம் கவனத்தை திருப்பினான் ஆனந்த்.


அடுத்த நாலு நாட்களும் அப்படியே போக. அடிக்கடி மாடிக்கு வந்து வானை நோக்கி பறக்கும் பட்டங்களை பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்,இப்பொழுது அவன் கண்களுக்கு அனைத்தும் வெறும் இயந்திரமாய் தோன்றின , வானுயர்ந்த கட்டிடங்கள் , நிறைய பஸ் கள் , வாகனகள் ,அனைத்தும் அலுப்பு தட்டின .


அன்று மாலை மேலே வந்த அத்தை,


டேய் இங்க என்னடா பண்ற? போயிட்டு டி‌வி பாக்க வேண்டியது தானே?


இல்லை அத்த, டிவில ஒண்ணுமே இல்லை.


சரி சரி. இரு துணியெல்லாம் அத்த காயபோட்டுட்டு வரேன்.


அத்த ....


சொல்லுடா ....


ஊருக்கு எப்போ போலாம்?


அடுத்த வாரம் போலாம்டா அதுக்குள்ள என்ன அவசரம்? கடல்ல கப்பல் விடலியா?


இல்ல அத்த, போயிட்டு அடுத்து எட்டாவதுக்கு நோட்ஸ் எல்லாம் பசங்ககிட்ட கேட்டு வாங்கணும். லேட்டா வாங்குனா நல்லது கிடைக்காது.


ம் ம் சரி. நாளன்னிக்கு மாமா மதுரை போறார்ல அவர் கூட போலாம் சரியா?


அப்படியே நாட்கள் ஓடின , கடைசியாக மாமாவுடன் வீடு திரும்பினான் வினோத் ...

ஊருக்கு வந்த அடுத்த நிமிடம் பழைய கோலி இரண்டை எடுத்துக் கொண்டு ஓடினான் வினோத்.


நல விசாரிப்பு எல்லாம் முடிந்த பின், புது துணி இருக்கும்மா அத எடுத்து வச்சுடு, நான் மதுரை கிளம்பறேன் என்று வினோத்தின் மாமா விடை பெற்றார்.

துணியெல்லாம் எடுத்து வைக்கும் போது அந்த பையிலிருந்து ஒரு நோட் விழுந்தது !
ஒரு பக்கம் கூட கிழிக்க படாமல் !

5 comments:

  1. நிஜத்தை மிக எதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள்! நல்ல பதிவு!

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  3. கதை இன்றைய நிதர்சனத்தை அழகாக காட்டியுள்ளது.

    நாங்கள் சிறுவயதில் விளையாடிய கோலி குண்டு, பம்பரம், கிட்டி புள்ளு ஆகியவை மீண்டும் நினைவில் வந்தது. அவையெல்லாம் என்னவென்றே தரியாமல் இருக்கும் இந்த தலைமுறையை காணும்போது வருத்தமாக உள்ளது.

    அருமையான கதைக்கு நன்றி சகோஸ்!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. @Abdul Basith said...

    நான் இப்பொழுது கூட ஊருக்கு போனால் அங்கு விளையாடி கொண்டு இருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து கில்லி , கோலி விளையாட ஆரம்பித்து விடுவேன்(by the by நான் இன்னும் சிறுவன் தான் இப்பொழுது தான் கல்லூரி படிப்பை முடித்து பணியில் சேர்ந்துள்ளேன் ஹி ஹி ஹி) , அது தான் இந்த கதை எழுத என்னை தூண்டியது ,,

    தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சகோ

    ReplyDelete