Pages

Wednesday, October 12, 2011

அரசியல் கைதிகளை விடுவித்தது பர்மா !

       பர்மா அரசாங்கம் 150 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது !
 
      அந்நாட்டின் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஜர்கானர் என்பவர் முதலில் விடுதலை செய்யபட்டார் அவரைத்தொடர்ந்து சில துறவிகளும் பத்திரிக்கையாளர்களும் விடுதலை செய்யபட்டனர்!

        ஜர்கானர் புயல் சேதங்களை அரசு சரி வர கையாளவில்லை என குற்றம் சாட்டியதால் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் (1,40,000 பேரை கொன்று குவித்த புயல் அது)

        விடுதலை செய்யபட்டதை பற்றி ஜர்கானர் கூறுகையில் "இதில் எனக்கு துளி கூட மகிழ்ச்சி இல்லை ஏனென்றால் நான் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் கைது செய்யபடலாம் முக்கியமாக இன்னும் பலர் சிறையிலே இருக்கின்றனர் இது எனக்கு வருத்தம் தான் "  

       எதிர் கட்சித்தலைவர் ஆங் சான் சூ கி அரசியல் கைதிகள் விடுதலை செய்யபட்டதை வரவேற்றுள்ளார்(இவரும் பல ஆண்டுகள் வலுக்கட்டாயமாக சிறை வைக்கபட்டவர் என்பது குறிப்பிடதக்கது ) .

       கிழக்கத்திய நாடுகள் பர்மாவின் மீது வணிகத்தடை விதித்ததற்கு முக்கிய காரணமே அந்நாட்டில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்காததால் தான்.

       இருபது ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பொதுத்தேர்தல் ராணுவ ஆட்சியை விடுவித்து குடியாட்சி அமர வழிவகுத்தது அதுவே இத்தகைய மாற்றங்களுக்கு காரணம்.

    உண்மை என்னவென்றால் வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கபட்ட 2000 பேரில் 150 பேர் மட்டும் விடுதலை செய்யபட்டுளனர் ! ஒரு சிலர் 1988 ஆம் ஆண்டிலுருந்து இன்னும் சிறையிலே உள்ளனர் !

    மீதமுள்ளவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு !

No comments:

Post a Comment