Pages

Tuesday, September 25, 2012

நான் புரிந்துகொண்ட ஹிந்து மதம்

இங்கு பேச்சுரிமை உண்டு , நீங்கள் சிவனையும், விஷ்ணுவையும் வழிபடலாம்    வழிபடாமலும் போகலாம்.  நீ பாவம் செய்தவனாகிவிடுவாய் என்கிற பூச்சாண்டிகள் மிக குறைவு.

என்னை பொறுத்தவரை இந்த மதத்தில் கடவுள் இல்லை ! சக மனிதர்களே கடவுள் தான். இல்லாத ஒன்றைவிட இருக்கும் ஒன்றை கடவுளாக ஏற்றுகொண்ட மதம் இது. அதனால்தான் தாய் தந்தையரையும், சக மனிதர்களையும் ஏன் விலங்குகளை கூட நாங்கள் நேசிக்கிறோம். இது தான் இங்கு அடிப்படை அன்பு, பாசம். 

இவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள். பொங்கல் பண்டிகை ஒன்றே அதற்கு சாட்சி. ஆடு, மாடு, நாய், ஆறு, மலை, சூரியன், யானை, குதிரை, சிங்கம், புலி இப்படி பூமியல் மனிதர்கள் வாழ இடம் கொடுத்த அனைத்திற்கும் நாம் நன்றிகடன் பட்டிருக்கிறோம், அவற்றை வணங்குகிறோம் . அவைகள் நாம் புவியில் வாழ அனுமதித்தவைகள்.

இங்கு கட்டுபாடுகள் கிடையாது, மிரட்டல்கள் கிடையாது,மூலைச்சலவை கிடையாது மற்ற யாரையும் இந்த மதத்திற்கு மாறுங்கள் என்று கேட்பது கிடையாது. இது ஒரு அனுபவம், வெளியில் இருந்து பார்த்தால் மிகப்பெரிய மூட நம்பிக்கை கூட்டமாக தெரியும் ஆனால் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் இங்கு இருப்பவர்கள் அன்பில் பிணைக்க பட்டிருக்கிறார்கள். 

மற்ற மதங்களை இழிவுபடுத்தும் மக்கள் கிடையாது. அவர்கள் வழிபடும் கடவுள்கள் எங்களுக்கும் கடவுள். பெரும்பகுதி மக்கள் இந்து வாக இருப்பினும் நம்நாட்டில் மற்ற மதத்தினர் இங்கு மகிழ்ச்சியோடும் சகோதரத்துவத்தோடும் இருக்க முடிகிறது. 

இங்கு என் கைகள் கட்ட படவில்லை, சுகந்திரமாக இருக்கலாம். மற்ற மதத்தினரை கீதை படிக்க சொல்லி நான் கேட்கமாட்டேன். ஆனால் அவர்களின் புனித நூல்களை விரும்பி படிப்பேன் நல்லது எங்கு கூறபட்டிருந்தாலும் அவை  ஏற்றுகொள்ளபடுகின்றன. 



ஆனால் சாதியில் பிரிக்க பட்டிருக்கிறார்கள். இங்கும் இருக்கிறார்கள் மதப்பற்று ஓவராகி வெறியர்கலானவர்கள். ஆனால் மிக மிக குறைவு. அளவுக்கதிகமான மூட நம்பிக்கைகள், காரனம் ஹிந்து மதத்தை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோருக்கு  இந்த மதத்தை பற்றி புரிதல் இல்லை,  ஒருவேளை உருட்டி மிரட்டி வழிய திணிப்புகள் இல்லாததால் கூட இருக்கலாம்.

வருடம் முழுவதும் விசேஷங்கள் மக்களை இணைத்து வைப்பதற்கான ஒரு எளிய வழி.

இந்த பதிவு வெளியிடும் தருணம் வரை ஹிந்து மதத்தை பற்றிய எனது புரிதல் இதுதான். இது காலபோக்கில் மாறலாம் .

மேலும் மற்ற மதங்களை பற்றி எனக்கு எதுவம் தெரியாது எனவே அதை பற்றி எழுத எனக்கு எந்த தகுதியும் இல்லை.

1 comment:

  1. சுருக்கமான பகிர்வில் புரிதல் நன்று... நன்றி...

    ReplyDelete