Pages

Tuesday, January 29, 2013

மெடிக்கல் ஷாப் டாக்டர்கள்

நேற்று இரவு மருத்துவர் பரிந்துரைத்த சீட்டுடன்  கிட்டத்தட்ட எட்டு மெடிக்கல் ஷாப் ஏறி இறங்க நேரிட்டது.  நான்கு  மெடிக்கல் ஷாப்களில் நான் கேட்ட மருந்துகள் கிடைக்கவில்லை .(பரிந்துரைத்த மாத்திரைகளில் சில மட்டுமே இருந்தது என்றார்கள்)





கிட்டத்தட்ட அனைத்து மாத்திரைகளின் பெயர்களும் மனப்பாடம் ஆகிவிட்ட நிலையில், அதற்கு மேல் நான் சென்ற நான்கு மெடிக்கல் ஷாப்களில் சொல்லி வைத்தாற்போல் ஆளுக்கொரு ப்ராண்ட் மாத்திரைகளை எனக்கு வழங்கினர். ஆனால் எனக்கு பரிந்துரைக்கப்பட்டது வேறு இவர்கள் வழங்கியது வேறு!! கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இவர்களில் ஒருவர் கூட நீங்கள் கேட்ட  ப்ராண்ட் மாத்திரைகள் இல்லை என்று கூறவில்லை !! மாறாக அவர்களுக்கு பிடித்த ஒன்றை தந்தனர்.

ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்களிளும் நான் தெளிவாக எடுத்து கூறினேன் எனக்கு மருந்துகளை நீங்கள் பரிந்துரைக்க வேண்டாம் மருத்துவர் என்ன எழுதியிருக்கிறாரோ அதை தந்தால் போதும் என்று. இதனால் சிலர் முறைக்க கூட செய்தனர் மற்ற மருந்துகளையும் தர மறுத்தனர்.

நான் விடாமல் பிடிவாதமாக கேட்டதால் "நீங்கள் இதை நம்பி சாப்பிடலாம் சார் சைட் எபக்ட்ஸ் லாம் வராது"  "சாப் இஸ்னே மாளிக்யுல்ஸ் சேம் ஹை, லேகின் ப்ராண்ட் நாம் அலக், தட்ஸ் இட் நோ வொர்ரி" ஒரு கெமிக்கல் மாத்திரைக்கு உத்திரவாதம் தர இவர்கள் யார் ? எங்கு மருத்துவம் பயின்றார்கள் ? எதில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் ? ஒரு சாரிடான் மாத்திரை ஒரு மெடிகலில் 1 ரூவாயும், அடுத்ததில் 1.50 ம், இன்னொன்றில் 2 ரூவாக்கும் விற்கபடுகிறதே எப்படி ?



சில்லறை மாத்திரைகள் துண்டு துண்டாக கத்தரித்து தருவதால் அதன் காலாவதி தேதி கண்டுபிடிக்க முடிவதில்லை. அடுத்த மாதம் காலவதியாகபோகிற மாத்திரைகள் எனக்கு வழங்கப்பட்டது !! நான் கவனித்து கேட்டதால் மாற்றி கொடுத்தனர் ! மற்றவர்களின் நிலை ? படித்தவர்களே கவனிக்காத நிலையில், படிக்காதவர்களின் நிலைமை ?

பாதிக்கும் மேற்பட்டோர் தமக்கு என்ன மருந்து கொடுக்கப்படுகிறது எதற்காக கொடுக்கப்படுகிறது என்று தெரியாமலே உட்கொண்டு வருகின்ற நிலையில்.

உடல் வலியின் வீரியம் தாங்க முடியாமல்,எதாவது ஒரு மாத்திரையை கொடு என்று நோயின் வீரியம் தாங்க முடியாமல் கேட்பவர்களை காணமுடிகிறது, சர்க்கரை நோயின் தாக்கம், அடுத்தவேளை தான் உயிரோடு இருக்கவேண்டும் என்றால், இன்னும் பல கொடிய வியாதிகளுக்கு உள்ளானோர் மெடிக்கல் ஷாப்களை தான் கடவுளாக நம்பியுள்ளனர்.

இப்படி உங்களுக்கு சலுகைகளை வழங்குகின்ற கம்பனி மருந்துகளையும், உங்களுக்கு பிடித்த மருந்துகளையும் வழங்க உங்களுக்கு என்ன உரிமை ? நாளைக்கு அவர்களுக்கு அதனால் வேறு எதாவது பிரச்சனை வந்தால், குறைந்த பட்சம் நோய் குணமாகாமல் போனால் ?

ஏதோ ஒரு நம்பிக்கையில் தங்கள் உயிர்களை உங்களிடம் ஒப்படைக்கிறார்கள் அதில் விளையாடதீர்கள்.

இது என்ன செருப்பு வியாபாரமா இந்த டிசைன் நல்லா இல்லைனு வேற டிசைன் செருப்பு போடறதுக்கு? உயிர் சார் ,,,




5 comments:

  1. நடக்கும் உண்மையை நன்றாகவே கேட்டீங்க... எல்லாம் பணம் செய்யும் மாயை...

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மை தான் , நன்றி நண்பரே

      Delete
  2. இதே விழிப்புணர்வை நானும் என் பதிவில் பகிர்ந்திருக்கிறேன். எனது பதிவின் பின்னூட்டம் மூலம் இந்த பக்கத்திற்கு வருகை... தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ,, உங்களது பதிவையும் படித்தேன்,, அங்கே பின்னூட்டமிட்டிருக்கிறேன்,

      வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்களின் பின்னூட்டத்தையும் பார்த்தேன் ,

      //அகஸ்மாத்தாக // அப்படிஎன்றால் ?

      Delete
  3. அன்பின் சூர்ய பிரகாஷ் - நல்லதொரு ஆலோசனை - ஆனால் கடைப் பிடிப்பது நடை முறையில் கடினம் - கடைப்பிடிக்க முயல வேண்டும் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete