Pages

Tuesday, October 11, 2011

நிலாவில் புதையல்

      விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், செயற்கைகோள் புகைபடங்களின் வாயிலாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புதியதாக நிலவை பற்றி ஒரு வரைபடத்தை தயாரித்துள்ளனர். அதன்படி நிலவில் ஒரு குறிப்பிட்ட வெளிச்சம் மிகுந்த பகுதியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் மற்றும் அதன் பண்புகள் நிலவில் "டைட்டானியம்"  அதிக அளவில் இருப்பதை உறுதி செய்துள்ளது !

     அரிசான் மகான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ராபின்சன் என்பவர் கூறுகையில் " நிலவை வெறும் கண்ணால் பார்க்கும் பொழுது சாம்பல் நிறத்திலும் சரியான உபகரணங்களுடன் பார்க்கும் பொழுது வண்ணமயமாகவும் தோற்றமளிக்கிறது என்றார் " 
  
    மேலும் அவர் கூறுகையில் சில இடங்களில் இருந்து வெளிப்படும் சிவப்பு மற்றும் நீல நிற ஒளிகள் ஒரு சில முக்கியமான வேதியியல் கூற்றுகளையும் அண்டவெளியை பற்றியும் மிக முக்கியமாக டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்கள் இருப்பதையும் காட்டுகின்றன என்றார் "  

     இவர்கள் கண்டுபிடிப்பின் படி பூமியில் ஒரு சதவீதத்திற்கு குறைவான டைட்டானியமே உள்ளது ! நிலாவில் பூமியை காட்டிலும் பத்து சதவீதம் அதிகமாக உள்ளது !
     
     இவர்களின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்திய கருவி தி லூனார் ரெக்கான்நைஸ்சன்ஸ் என்பதாகும். இது நூறிலுருந்து நானூறு மீட்டர் இடைவெளியில் ஏழு விதமான ஒளி அலைநீளங்களை வேறுபடுதிக் காட்டக்கூடியது.

   இவர்களின் இந்த ஆய்வு ஐரோப்பிய கோள் அறிவியல் காங்கிரஸ் மற்றும் அமெரிக்க கோள்கள் அறிவியலுக்கான விண்வெளி கழகம் ஆகியவற்றில்   சமர்பிக்கபட்டுள்ளது . இனி இதைப்பற்றி விரிவான ஆராய உள்ளனர் .


   நிலாவில் கிடைத்த இந்த டைட்டானியம் பொக்கிஷம் மட்டுமல்ல நிலவைப்பற்றியும் அண்டத்தைப்பற்றியும் புதைந்து கிடக்கின்ற பல மர்மங்களுக்கான விடையை தேடித்தரும் திறவுகோல் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை! 



       

1 comment:

  1. உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன், பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_16.html

    ReplyDelete