Pages

Tuesday, October 18, 2011

இந்த பொழப்புக்கு


   இன்று காலை மணி 10 இருக்கும் . நான் எனது அலுவலகத்திற்க்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன் ஜன்னல் அருகில் இருக்கை எனவே எல்லாரையும் போல வேடிக்கை தாங்க பார்த்துக்கொண்டிருந்தேன்.

   கிரிஷ்ண ராஜ புரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்தது.அப்பொழுது வெளியில் நான் பார்த்த சம்பவம் ஒன்று.

   பின்னால் இருந்து வந்த ஒரு ஆட்டோ சட்டென்று அங்கு நின்றது. எத்துணை பேர் இதனை கவனித்தார்கள் என்று தெரியவில்லை.நான் என்னவோ அந்த ஆட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

   60 வயது மதிக்கதக்க ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.நல்ல மெலிந்த தேகம்,பின் இருக்கையில் அம்ர்ந்திருப்பவரை (அதாங்க சவாரி) பார்த்து கையெடுத்து கும்பிட்டார், ஆச்சர்யம்!

    
   யார் அந்த சவாரி என்பதை பார்க்க எனக்கு ஒரே ஆவல், ஆனால் என் பார்வைக்கு அந்த சவாரி அகப்பட வில்லை .

   சட்டென்று அந்த முதியவரை பளார் என்று அறைந்தான் பின்னிருக்கையில் இருந்தவன்.அந்த சவாரியின் வெள்ளை சட்டை மட்டும் எனக்கு தெரிந்தது . எனக்கு சட்டென்று கோபம் வந்தது . என்னதான் நடக்கின்றது என்று உற்று நோக்கினேன்.

   அந்த முதியவர் இப்பொழுது தனது சட்டை பையில் இருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து காண்பித்தார்,மீண்டும் கையெடுத்து கும்பிட்டார், இப்பொழுது அந்தசவாரி ஏதோ சொல்லி அவரை செல்ல சொல்லி தள்ளினார் இம்முறை கையில் தொலைபேசி இருந்தது. சட்டென்று அந்த ஆட்டோ கிளம்பியது.

   ஒரு நிமிடத்திற்குள் நடந்த இந்த சம்பவம் என்னை பலவித கேள்விகளுக்கு உள்ளாக்கியது.

   மீண்டும் அந்த ஆட்டோவை பார்க்க முடியுமா ? யார் அந்த சவாரி ?

   நான் அதே பாதையில் செல்லும் ஒவ்வொரு ஆட்டோவையும் பார்த்தவண்ணம் பயணித்தேன். சிறிது நேரத்தில் காக்கி பூட்ஸ் போட்ட ஒரு கால் ஆட்டோ வின் பின்னிருக்கை வழியே வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

   ஆட்டோ எனக்கு முளுமையாக தெரிய சில நேரம் பிடித்தது. முதல் வேலையாக ஓட்டுநர் இருக்கையை நோக்கினேன்.

     ............அதே முதியவர் !

பின்னிருக்கையை நோக்கினேன் அதே வெள்ளை சட்டை !

       ......கையில் செல்போன் !

       .......காலில் காக்கி பூட்ஸ் !

       ......காக்கி பேன்ட் !

மவுனம் தான் என்னுடைய பதில் (@!#$%^&*!@#$%^&*)........................                            
   


    

5 comments:

  1. அந்த மௌனம் தான் இந்த நிகழ்ச்சிகளை தொடர செய்கிறது...
    all the evil which happens in this world is not due to action of evil person but due to the inaction of the good person...

    இதை பகிர்ந்ததற்கு நன்றி...

    ReplyDelete
  2. @suryajeeva ... வாங்க வாங்க
    முதலில் வருகைக்கு நன்றி .....

    நீங்கள் சொன்னது 100% உண்மை ,,, ஆனால் ஒரு வழி போக்கனாக அங்கு இந்த நிகழ்வை என்னால் பார்க்க மட்டுமே முடிந்தது....

    ஆனால் நிச்சயம் இதுபோல் வரும் காலங்களில் நடந்து கொள்ள மாட்டேன் என நினைக்கிறேன் ......

    உங்களின் கருத்தை இன்று போல் என்றும் எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
  3. உங்கள் ஒருவரால் இப்போதைக்கு ஆப்பு மட்டுமே வைக்க முடியும் தோழரே, ஆப்புகளின் தோப்பு தயாராகும் வரை பொறுத்திருப்போம், அநீதிகளை பதிவு செய்வோம்

    ReplyDelete
  4. ஹா ஹா.... நிச்சயமாக பொறுத்திருப்போம்.....

    ReplyDelete
  5. கௌசல்யா என்பவற்றின் வலை பதிவில் கூடங்குளம் குறித்து சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தீர்கள், உங்கள் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து கொள்ள http://suryajeeva.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

    jeevansure@gmail.com

    ReplyDelete