Pages

Friday, November 4, 2011

ஏழாம் அறிவும், வேலாயுதமும் ஒரே கதையா?
      இந்த இரண்டு படங்களை பற்றியும் பத்திரிக்கைகள்,வலைபூக்கள் ,தொலைக்காட்சிகள், டீ கடை ,சலூன், ஃபேஸ் புக்,டிவிட்டர், பஸ்ஸ் னு எல்லாத்திலையும் பாத்திருப்பீங்க படிச்சுருபீங்க.ஆனா இது ரெண்டும் ஒரே கதைனு தெரிஞ்சுகிட்டீங்களா?(இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது!).

      ஒன் லைன்ல சொல்லனும்னா.

     ஒரு பொண்ணு நாட்டுக்கு நல்லது செய்யணும்னு ஆசை பட்ரா,அதுக்காக ஒரு ஹீரோ வ உருவாக்குரா.    

    46 லைன்ல சொல்லனும்னா. 

    அந்த பொண்ணு ஏழாம் அறிவுல ஸ்ருதி ஹாசன் , வேலாயுதம்ல ஜெனீலியா.

    ஸ்ருதி வரலாறையும் அறிவியலையும்  தப்பா படிச்சிபுட்டு இன்னொரு போதிதர்மன உருவாக்கரனு சர்கஸ் சர்கஸ் ஆ சுத்துது.

   இங்க நம்ம ஜெனி பாதிரிக்கை ல வேல செய்றனு சொல்லிபுட்டு கெட்டவங்க இருக்குற கூடாரம் கூடாரமா சுத்துது.

   ரெண்டு பேருக்கும் நம் தமிழ் நாட்ட திருத்தனுங்கிறதுதான் ஒரே கொள்கை.ஆனா என்ன பன்றது லேடீஸ் ரெண்டு பேர்ணாளையும் எகிறி எகிறி பைட் பண்ணமுடியாது, மொக்கையா பஞ்ச் டயலாக் பேசவும் தெரியாது,ஸோ ஒரு ஹீரோ வ தேட்ராங்க.

      இப்ப தான் ஒரு ஹீரோ கிடைக்குறார் !

    ஆதாகபட்டது ஏழாம் ல சர்கஸ் கரரான நம்ம வள்ளலும்(அதாங்க எனக்கு பட்ட பெயர் வேணானுபுட்டு கிடைக்கிற சுவரெல்லாம் வள்ளல் சூர்யா னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே அவிங்க), வேலாயுதத்துல பால் கரரான நம்ம இளைய தளபதியும் (வேட்டைக்காரன், சுறா,குருவி மாறி லாம் இல்லீங்க ! சிரிக்காதீங்க நீங்க நம்பித்தான் ஆகணும்,பேபிமா பிளீஸ் பிலிவ் மீ )   

   எங்கயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தாங்க்ர மாதிரி முறையே ஸ்ருதி மற்றும் ஜெனியிடம் ஜொல்லு விட்டு மாட்டிக்கொள்கின்றனர்.

    அவங்களும் மாட்னான்டா பலிகெடானு டைரக்டர் கொடுத்த வசனத்த நாள் பூரா மனப்பாடம் பண்ணி ஒரு வலியா திக்கி தெனறி பேசி முடிக்கிறாங்க.

       ரெண்டு ஹீரோவுமே சொல்லி வெச்சா மாதிரி வேணாம் என்னாலலாம் முடியாது நான் ஒரு சாதாரண ஆள் னு சொல்லி மறுக்க.

       அவ்வளவு நேரமா கம்னு இருந்த வில்லன் குரூப்ஸ் ஓ நீங்க தான் ஹீரோ வானு அடிக்க.
      
      நொந்து போன ஹீரோயின்ஸ் இப்ப நீங்க ஒத்துக்கலீனா மறுபடியும் அந்த டைரக்டர் எழுதிகொடுத்த வசனத்த பேசுவோம்னு மிரட்ட,

     அய்யோ பரமா அவுங்க எனக்கு சாவு பயத்த காட்டிட்டாங்க அவங்களுக்கு சாவுன என்னானு நம்ம காட்டணும்னு முடிவு பண்ணி ரெண்டு ஹீரோ வும் நாட்ட காப்பாத்த சம்மதிக்கிறாங்க.

    அப்றம் என்னங்க அதான் 75 வருஷமா தமிழ் சினிமா ல வர, அதே சேசிங்,பைடிங்க், ங், ங், ங், ங்...........

    கிளைமாக்ஸ் ல சூர்யா வழக்கம் போல தன் சிக்ஸ் பாக்க காட்டி நிற்க ! இளைய தளபதி ஒரு வழியா போராடி வயித்த உள்ளார இழுத்து மாட்ச் பண்ண ட்ரை பண்ணி இருக்காரு ( நல்ல வேல அஜீத் படம் ரிலீஸ் ஆகல!)

     அப்றம் படம் முடியும் போது ரெண்டு பேருமே மெசேஜ் சொல்றனு தக்காளி பேசியே தியேட்டர விட்டு துரத்தி விட்டுட்டாய்ங்கபா.
ஏழாம் அறிவும், வேலாயுதமும் ஒரே கதை !
தற்செயலா..................? டைரக்டர் செயலா........................? நாணமிங்கு நாணமில்லையே ! டவுன் டவுன் டவுன் உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது........ கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது ...............

  


         

2 comments:

 1. அப்ப வேலாயுதம் வெற்றி, ஏழாம்அறிவு வெற்றியா?

  ReplyDelete
 2. @பிரகாஷ்.....
  முதலில் தங்கள் வருகைக்கு நன்றி பிரகாஷ்.

  //அப்ப வேலாயுதம் வெற்றி, ஏழாம்அறிவு வெற்றியா? //

  ஹி ஹி ஹி... நோ பாஸ் ஏழாம்அறிவு புட்டுகிச்சுனு கண்பார்ம்ஆ தெரியும் ! வேலாயுதம் இப்ப தான் லைட்ஆ பிக் அப் ஆகுதுணு நினைக்கிறேன்,,,,,,,,

  ஒரே உறைல ரெண்டு கத்தி எப்படி சாத்தியமில்லையோ அதே மாறி தான் இங்கயும் ...

  ReplyDelete