Pages

Tuesday, November 29, 2011

பணம் பணம் money money money money



               பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்,

              பணம் என்றால் பொனமும் வாயை பிளக்கும் .

      போன்றவை ஒன்னாம் கிளாஸ்ல இருந்தே நமக்கு சொல்ல பட்டவை, பெற்றோர்களால் போதிக்கபட்டவை என்று கூட சொல்லலாம்.     

       சோ அந்த பணத்தினை பற்றி கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கிறேன். 

      ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வருவோம் ,

    தற்பொழுது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள்  ‘பேங்க் நோட்டுகள்’ என்று அழைக்க படுகின்றன. காரணம் என்னவென்றால் அது ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் அச்சிடப்பட்டு வெளியிடபடுவதால் .

       ‘ரிசெர்வ் பேங்க் ஆப்’ இந்தியா 1935 ஏப்ரல் முதல் தேதியில் தொடங்கப்பட்டது. முதல் முதலில் வெளியிடப்பட்ட பேங்க் நோட்டு 1938 ஜனவரியில் வெளியிடப்பட்ட  5 ரூபாய் நோட்டே ஆகும் ,



      பின்பு அதே ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஜுனில் முறையே 10,100,1000,10000  ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது .

      ஆனால் அவையெல்லாம் ஆறாம் ஜியார்ஜ்-இன் உருவம் கொண்டவை. நாம் அப்பொழுது அடிமையாக தானே இருந்தோம். மாதிரிக்கு சில படங்களை இணைத்துள்ளேன்.


  
       1947 க்கு அப்பறம் அந்த நோட்டுகள் நிறுத்தப்பட்டன , பின்பு 1949-1950 ல் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தபட்டன .



       அவை அசோகா தூணிலுள்ள சிங்கங்களை மையமாக கொண்டு உருவாக்க பட்டன. அதையும் நீங்கள் இங்கு காணலாம் .



        அதே போன்று ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சிடுவது நிறுத்தப்பட்டன .

தொடரும் ...................................

பின்குறிப்பு :  * நான் இங்கு இந்திய ரூபாய் பற்றி மட்டுமே பதிவிட                                 போகிறேன்.
·           அதுவும் 1935-க்கு அப்பறம் மட்டுமே .       

நன்றி http://www.rbi.org.in/home.aspx




3 comments:

  1. பணம் குறித்து தொடரா.. தொடர்கிறேன்... முடிந்தால் பொருளாதாரம் குறித்தும் ஒரு தொடர் போடுங்களேன்

    ReplyDelete
  2. @suryajeeva said.......

    நன்றி நன்றி ...............

    //பொருளாதாரம் குறித்தும் ஒரு தொடர் போடுங்களேன்//

    கண்டிப்பாக தோழரே ..........................

    ReplyDelete
  3. Hi i am JBD From JBD

    Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


    Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

    ReplyDelete