Pages

Saturday, November 12, 2011

அப்துல் கலாமை இப்படி திட்டலாமா ?          நான் முன்கூட்டியே சொல்லி விடுகிறேன் நான் கூடன்குள பிரச்சனையை பற்றி இங்கு பேச முற்பட வில்லை. .

      ஒரு முன்னால் குடியரசுத்தலைவர் , அணு வைபற்றி படித்தவர் ,நாட்டின் முதல் குடிமகனாய் இருந்தவர் ,எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு தமிழர் .

      இவை யாவும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை , அவரது கருத்து உங்களுடைய கருத்துக்கு எதிராக இருக்கட்டும் பரவாயில்லை , அதற்காக அவரை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவது துளி கூட நல்லா இல்லை .

"  இவரின் உபதொழில் கூலிக்கு மாரடிப்பது என்று "

            கோமாளி

" ஜனாதிபதி போதை இவரை மாற்றிவிட்டது "


இந்த வார்த்தைகளால் அவரை திட்டி இருக்கிறார்கள்.

            தமிழன்  தமிழன்  என்று மார்தட்டி கொள்கிறாய் இது தான் தமிழ் பண்பாடா ?
     
       இதை தான் நீ திருக்குறளிலிருந்து கற்றாயா ?
     
                முதல் முறையாக  தமிழன் என சொல்லிக்கொள்ள  வெட்கப்படுகிறேன்.

            போராட்டம் நியாமானதுதான் ஆனால் இத்தகைய செயல் அருவருக்கத்தக்கது. 

10 comments:

 1. தோழர் இருதயம் அவர்களின் பதிவை தொடர்ந்து அதற்க்கு பின்னூட்டமாக போடப்பட்ட பதிவு இது .............

  ReplyDelete
 2. மன்மோகன் சிங் உலக பொருளாதார மேதை, அவரும் தான் விலை வாசியை குறைக்க முடியாது, சந்தை தான் தீர்மானிக்கும், பணம் மரத்திலா காய்க்கிறது என்று கேட்கிறார்...
  அவரை கூட தான் கண்ட மேனிக்கு திட்டுகிறோம்..
  தப்பா?

  ReplyDelete
 3. தோழர்,
  அவர் மேதையாக இருப்பதால் தான் தவறான பதில்களை தந்தாள் திட்டுகிறோம்... புரிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 4. மேலும் அணு உலை அமைப்பதற்காக அந்த பகுதி மக்களுக்கு இருநூறு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க சொல்லும் மனிதரை என்ன சொல்வதென்று தெரியவில்லை... அவர் தமிழர் ஒத்துக் கொள்கிறேன், கேரளாவில் அணு உலை வேண்டாம் என்று போராடிய பொழுது எங்கே போயிருந்தார், ஜைதாபூரில் அணு உலை வேண்டாம் என்று போராடிய பொழுது எங்கே போயிருந்தார், அது ஏன் தமிழகத்தில் அமைப்பது என்றால் மட்டும் தமிழர்களை ஒழித்து கட்ட முன்னாள் நிற்கிறார்... தமிழக மீனவர்கள் பிரச்சினையில் குரல் எழுப்பியது கிடையாது, பிற அரசியல் விஷயங்களிலும் குரல் எழுப்பியது கிடையாது, அவரது கனவு திட்டமான புறா ஒரு தோல்வி திட்டம் என்று அரசு கை விட்ட பொழுது ஏன் அமைதி காத்தார் என்று எண்ணற்ற கேள்விகளுக்கு உங்கள் பதில் ஒன்று தான்...
  அவர் தமிழக விஞ்ஞானி...

  ReplyDelete
 5. நான் மறுபடியும் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் அவர் கூடங்குளத்திற்கு எதிராக சொன்ன கருத்து நம்மால் ஏற்கமுடியாதுதான் , ஆனால் அவர் நமது வாதங்களுக்கு சாதகமாக பதிலளித்து இருந்தால் ?

  ReplyDelete
 6. சாதகமா சொல்லியிருந்தா? பாதகமா சொல்லி இருந்தா? எல்லாம் விடுங்க தலைவரே, அவ்வளவு பெரிய அறிவாளி எதுக்கு பொய் சொல்லணும்... அப்படி என்று ஒரு கேள்வி கேட்டேன்.. அதுக்கு பதில் சொல்லுங்க

  ReplyDelete
 7. நண்பருக்கு வணக்கம் ... திரு . அப்துல் கலாமை மோசமாக பேசிய நமது நண்பர்களுக்கு ஒரு அறிவுரை சொல்லி உள்ளீர்கள் . நன்றி

  ReplyDelete
 8. நமது போராட்டம் அமைதி யான முறையில் தானே ? அவரது கருத்தையும் எதிர்பதாக இருந்தால் அமைதியாக அல்லது உதயகுமார் கூறியது போன்று கூறிஇருக்கலாம் .........

  //மன்மோகன் சிங் உலக பொருளாதார மேதை, அவரும் தான் விலை வாசியை குறைக்க முடியாது, சந்தை தான் தீர்மானிக்கும், பணம் மரத்திலா காய்க்கிறது என்று கேட்கிறார்...
  அவரை கூட தான் கண்ட மேனிக்கு திட்டுகிறோம்..
  தப்பா?//
  ஆம் மன்மோகன் , பிரணாபை தினமும் சாடுகிறோம் அவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் .....
  இதே தமிழக விஞ்ஞானி குடியரசுதலைவராய் இருந்த போது ஏன் நாம் அவரை திட்டவில்லை ? மாறாக பாராட்டினோம்,பெருமைப்பட்டோம் , அவர் செய்தது தவறுதான் ஆனால் ஒரே அடியாக தமிழனுக்கு எதிராக பார்ப்பது நியாயமில்லை

  ReplyDelete
 9. @இருதயம்.....

  தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 10. இதற்க்கு முன் அவர் தவறு செய்யவில்லை, இன்று செய்து விட்டார்...
  ஒரு காலத்தில் மன்மோகன் கூட நல்ல மனிதர், mr.clean என்றெல்லாம் பாராட்டினார்கள்

  ReplyDelete