அரசியல்
·
பிரதமர் ராகுல் காந்தியின் ஆட்சியை எதிர்த்து அத்வானி அடுத்த ரதயாத்திரை , வரும் தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் கிடையாது என 10125 வது முறையாக அறிவிப்பு.
·
பாராளுமன்றத்தில் கடும் அமளி புதிதாக
தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகா ஷெராவத் mp க்கு அருகில்
இருக்கை வேணும் என கடும் சண்டை சஷி தரூர் மற்றும் லல்லு
பிரசாத் யாதவ் இருவரும் காவலாளிகளால்
குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றபட்டனர் .
·
தி.மு.க.ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட
திட்டங்களில் இன்னும் மேம்பாலங்கள் மட்டுமே மீதியாக உள்ளது எனவே அவற்றையும்
ஆஸ்பத்திரியாக மாற்றுமாறு முதல்வர் ஜெ உத்தரவிட்டுள்ளார் .
·
2g விடுதலை ஆன அடுத்த நாளில் நிலமோசடி வழக்கில்
கைது செய்ய பட்டார் ஆர் . ராசா
சினிமா
·
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராயின்
மகள் இணைந்து நடிக்கும் புதியபடம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது .
·
ராம்போ படத்தை ரீமேக் செய்கிறார்
பவர் ஸ்டார் , படத்தின் பெயர் 'ராம் பாபு'
விளையாட்டு
·
இந்தியா உலக கோப்பை கிரிக்கெட் ல் கானாவிடம்
தோற்றதன் எதிரொலி , கோச் கங்குலி பதவியை விட்டு விலகினார்
·
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை முதல்
சுற்றிலே வெளியேற்றினால் தான் இம்முறையாவது ipl கோப்பை வெல்ல முடியும் என சென்றமுறையும் இறுதி போட்டியில் தோற்ற பெங்களூர்
ராயல் சேலன்ஜெர்ஸ் அணியின் கேப்டன் கோஹ்லி அறிவிப்பு .
பெட்ரோல் :
·
ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஒரு பைக் ப்ரீ என இந்தியன் ஆயில் அறிவிப்பு .
· பெட்ரோல் விலை ரவுண்டாக இல்லை என கபில் சிபல் வருத்தம். எனவே அடுத்த
கட்ட மீட்டிங்கில் புதிய விலை அறிவிக்கப்படும் .
தங்கம் :
·
மூன்று சவரன் தங்கம் வைத்திருக்கும்
அனைவரும் கோடீஸ்வரகள் பட்டியலில் சேர்க்கபடுவர் மத்திய அரசு அறிவிப்பு.
வெங்காயம் :
·
அரசு நியாய விலை கடைகளில் ஒரு கிலோ
வெங்காயம் 268 ரூபாய் மட்டுமே ,242 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிப்பு .
டங் :
·
இந்த கோடையில் வெயில் 75 டிகிரியை தொடும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
·
7g யில் ஊழல் ! சத்தியமா நான் இல்லீங்கோ
கனிமொழி கதறல்
·
மாயாவதி தனது 1100 வது சிலையை நிறுவினார்... .
அவ்வளவு காலம் நம்மள உசுரோட இருக்க விட மாட்டாங்க போலிருக்கே... பிரபல பதிவர் சூர்ய பிரகாஷ் புலம்பல்
ReplyDeleteஹா ஹா ஹா ........................................
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தோழரே