Pages

Thursday, November 10, 2011

கர்நாடகத்தில் பேருந்து பயணம்



        நான் கடந்த ஒரு மாதமாக இங்கு பெங்களூரில் தங்கியுள்ளேன் இங்கு வந்ததும் நான் கண்ட முதல் வித்தியாசம்,
பேருந்து கட்டணம்! எம் தமிழகத்தில் வெறும் 3(அ)4 ரூபாய் வரக்கூடிய கட்டண அளவு இங்கு 9 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது, நான் சேலம் டூ நாமக்கல் செல்ல வெறும் 16 ரூபாய் இருந்தால் போதும் ஆனால் இங்கு எல்லாமே இரண்டு மூன்று மடங்கு அதிகம்.

       ஒரு முறை வெளியில் சென்றால்  பேருந்து கட்டணமே 100 ரூபாயை தாண்டும்! ஒரு நாள் பாஸ் எடுத்துக்கொண்டால் 45 ரூபாய் ! என்னுடைய முதல் கேள்வி ஏன் இங்கு அவ்வளவு கட்டணம் ? அனைத்தும் இந்திய மாநிலங்கள் தானே ? ஏன் பொதுவாக ஒரு கட்டணம் விதிக்கபடவில்லை? வரிகள் வித்தியாசபட காரணம் ?  கர்நாடகத்தில் ஏழைகளே கிடையதா?

       அடுத்து இங்கு நான் தினசரி சந்திக்கும் ஒன்று சில்லரை பிரச்சனை. நான் வசிக்கும் இடத்திற்கும் என் கம்பெனிக்கும் 5 கிலோமீட்டர் தூரம்,9 ரூபாய் கட்டணம்.என்னால் இயன்றவரை 9 ரூபாயாக கொடுக்க முற்படுவேன் ஆனால் என்ன செய்வது பெரும்பாலும் 10 ரூபாயாக கொடுக்க வேண்டிய சூழ்நிலை.10 ரூபாய் கொடுத்தால் ஒரு ரூபாய் மீதியை அவர்கள் தருவதே இல்லை .போராடி கேட்டாலும் வெளிப்படையாக இல்லை என்கின்றனர். சில முறை  நான் 1 ரூபாய் அதிகம் கொடுத்து 2 ரூபாயாக தருமாறு கேட்டால் 4 ரூபாய் கொடு 5 ரூபாயாக தருகிறேன் என்கிறார் நடத்துனர் .

       தமிழகத்தில் கூட 50 பைசா பிரச்சனை இருந்தாலும் பெரும்பாலும் நடத்துனர்கள் திருப்பி கொடுத்து விடுகின்றனர்,ஆனால் இங்கு  பெரும்பாலும் தருவதை தவிர்க்கின்றனர் இது ஊழல் இல்லையா ?

     அடுத்து மிக முக்கியமான ஒன்று ஓட்டுனரே பயணசீட்டு கொடுப்பது!

பெரும்பாலும் தானியங்கி கதவு கொண்டவை இங்கிருக்கும் பேருந்துகள்.  பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்தின் பின் கதவு திறக்காமல் முன் கதவு மட்டும் திறந்திருந்தால் அந்த பேருந்தில் நடத்துனர் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.பேருந்தில் நிற்ககூட இடமிருக்காத அளவிற்கு கூட்டம் இருக்கும் ஓட்டுனர் வண்டியை ஓட்டிக்கொண்டே பயணிகளுக்கு சீட்டு வழங்குவார் ! சில்லரையும் வழங்குவார் !.  

       பெங்களூர் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் எப்படி இதை அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.?. ஒரு முறை இத்தகைய நடத்துனர் இல்லா பேருந்தில் நான் பயணம் செய்தேன் சீட்டு வழங்கிக்கொண்டே ஓட்டுனர் பேருந்தை ஒரு திட்டில் மோதிவிட்டார் எனக்கோ தூக்கி வாரி போட்டுவிட்டது! ஓட்டுனர் சிறிதும் சலனம் காட்டாமல் வாகனத்தை ஒட்டிசென்றார்! பலமுறை இப்படி நடந்திருந்தால் ஒழிய அவரால் உடனே இயல்புநிலைக்கு வர இயலாது! அன்றிலிருந்து நான் அத்தகைய பேருந்தில் எறுவதில்லை.   மக்களின் உயிரில் அப்படி என்னய்யா விளையாட்டு? இப்படி பயணிகளுக்கு சீட்டு வழங்கலாமா? போக்குவரத்திற்கென்று சட்டம் ஏதும் கிடையதா?
       
        ஊழலும் , அலட்சியமும் தொடங்கும் இடத்தில் விட்டுவிட்டு சுவிஸ் பாங்கில் போய் தேடிக்கொண்டிருந்தால் என்னய்யா பிரயோசனம் !!!!



       

7 comments:

  1. கர்நாடகா என்றாலே பிரச்சனைதான்

    ReplyDelete
  2. @"என் ராஜபாட்டை"- .....

    முதலில் தங்களது வருகைக்கு நன்றி நண்பரே ......

    ஆம் எடியூரப்பா தொடங்கி காவிரி வரை அவர்கள் பிரச்சனையாகவே தான் இருந்து வருகின்றனர் ....

    ReplyDelete
  3. தளம் எளிமையாக அழகாக இருக்கிறது. உண்மை நிலவரத்தினை பதிவாய் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. @atchaya .....

    தளத்திற்கு வருகை தந்தமைக்கும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி அட்சயா அவர்களே ..........

    ReplyDelete
  5. அந்த ஸ்விஸ் வங்கியின் பெரிய ஊழல் தான் இந்த சின்ன ஊழலின் அச்சாரம்...
    அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி...

    ReplyDelete
  6. @suryajeeva.......

    அந்த சாதாரண குடிகள் தான் இன்று அரசாங்கத்தில் உள்ளனர் முன்பு சிறிய அளவில் செய்து கொண்டிருந்த ஊழல் அனுபவம் இப்பொழுது பெரியஅளவில் ஊழல் செய்ய உதவுகிறது ......

    ReplyDelete
  7. @suryajeeva.......

    உங்களின் கனிவான ஊக்கத்திற்கு என் நன்றிகள்

    ReplyDelete