Pages

Monday, November 21, 2011

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் சேர்க்க தமிழக அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவு !....



       நல்லதொரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் ,
         
          எவ்வளவு நல்ல விஷியங்கள் செய்தாலும் இது போன்ற அரசியல் காழ்புணர்ச்சி மற்றும் டாஸ்மாக் விஷியத்தில் இன்னும் ஒரு இரண்டாம் தர அரசியல்வாதியாகவே ஜெ பாவிக்கபடுகிறார் .

           மக்களுக்கு அவர் மீது வெறுப்பு வர இதுவும் ஒரு காரணம். மாளிகையில் வாழும் அவருக்கு எம் போன்ற நடுத்தர வர்கத்தினர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை .

           ஏழைகளை சினிமாக்களில் மட்டும் தான் பார்த்திருப்பார் ,    மக்கள் நலப் பணியாளர்களில் எத்தனை ஏழைகள் பாதிக்கபட்டிருப்பார்கள் என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை அவர் தெரிந்துகொள்ளவும் போவதில்லை !
             
                  உங்களை விட்டால் வேறு எங்கே போவேன் என்று பேச தெரிந்தவருக்கு இலவசங்கள் தரவேண்டிய பணத்தை நான் மின்சரவாரியம் , ஆவின், போக்குவரத்து கழகங்களுக்கு  கொடுக்கலாம் என்று இருக்கிறேன் உங்களின் பதில் என்ன என்று கேட்டிருந்தால் அடுத்த நொடிக்குள் சம்மதிதிருப்பர் எம் மக்கள்.

           அதை விட்டுவிட்டு பக்கம் பக்கமாக அறிக்கை வாசிப்பதில் கருணாநிதியை விஞ்சிவிட்டீர்கள்  !!!!!!.... 

6 comments:

  1. சார், இலவசங்களை நிறுத்தினால்... தனியார் முதலாளிகள் எப்படி பிழைப்பதாம்? grinder நிறுவன முதலாளி, மின்விசிறி நிறுவன முதலாளி, மிக்சி நிறுவன முதலாளி...

    ReplyDelete
  2. அது என்னவோ உண்மைதாங்க . இங்கு அம்பானிக்கும் மல்லையாவுக்கும் தானே திட்டங்களெல்லாம் ! ..................

    நாமெல்லாம் உழைப்பதே அவர்களுக்கு தானே , நமது வரிப்பணம் தான் அவர்களுக்கு வேண்டும் , பணக்கார பிச்சைகள் ..........

    ReplyDelete
  3. கொஞ்சமாகச் சொன்னாலும் அத்தனையும் உண்மையான யதார்த்தமான வரிகள்

    ReplyDelete
  4. @அம்பலத்தார் ...................

    நன்றி அய்யா

    ReplyDelete
  5. @தமிழ்கிழம்
    நலம் நண்பரே ......................................

    ReplyDelete